Posts filed under ‘பொதுவானவை’

கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

கிருஸ்துமஸ் ஸ்பெஷல் : கிருஸ்மஸ் – வரலாற்றுப் பார்வை

பண்டிகை காலங்கள் சுகமானவை. குடும்பத்துடன் அன்பாய், அமைதியாய் செலவிட சில கணங்கள், ஆண்டவனிடம் சில பிரார்த்தனைகள், மன ஓய்வு, புத்தாடை, பரிசுப் பொருள்கள் என சந்தோஷங்கள் எட்டிப்பார்க்கும். இந்துக்களின் தீபாவளி, யுதர்களின் ஹனுக்கா , கிருத்தவர்களின் கிருஸ்மஸ் மற்றும் புது வருடப்பிறப்பென அடுக்கடுக்காய் குளிர்காலத்தில் வரும் பண்டிகளை பட்டியலிடலாம். குறிப்பாக டிசம்பர் மாதம் பண்டிகை காலமாய் பல்வேறு நாகரிகங்களால் வெகு காலமாய் இருந்து வருகின்றது.

ஆதியில் ஸ்கேண்டிநேவியன் மற்றும் ஜெர்மன் நாகரிகத்தில் டிசம்பர் மாத இறுதி பகுதியுல்பண்டிகையாக கொண்டாடப்பட்டது. யுல் பண்டிகை காலத்தில் பரிசு பொருள்கள் பறிமாற்றிக் கொள்ளப்பட்டன . இந்த தினத்தில் பன்றி ப்ரேர் எனும் பாகன்(Pagan) கடவுளுக்கு பலியிடப்பட்டது. யுல் பண்டிகை காலத்தில் மதுவருந்தி , பெரும் விருந்துகள் பறிமாறப்பட்டன. வீடுகள் பச்சை வண்ணம் கொண்டு அலங்கரிக்கப்பட்டன . யுல் எனும் வார்த்தைக்கு அகராதியில் அர்த்தம் தேடினால் அது கிருஸ்மஸையும் குறிக்கும்.

ரோம நாகரிகத்தில் சனி கடவுளின் நினைவாக டிசம்பர் மாதத்தில் சார்டன்லியாஎனும் பண்டிகை கொண்டாப்பட்டது. இது ஏழு நாள் பண்டிகை. டிசம்பர் 17ம் தேதி தொடங்கி டிசம்பர் 24 வரை . ரோம பேரரசில் சூரிய வழிபாடு முக்கியமானதாக இருந்தது. ரோம சக்கரவர்த்திக்கு பாதுகாவலனாக சூரியன் இருப்பதாக ஐதிகம். ரோம நாணயங்களில் சோலி இன்விக்டோ காம்டி(SOLI INVICTO COMITI) என்ற முத்திரை உண்டு. கான்ஸ்டான்டின் அரசரின் கிருத்தவ மத மாற்றத்திற்கு பிறகு இந்த முத்திரை நாணயங்களை விட்டு அகன்றது. டிசம்பர் மாதத்தில் இரவு சுருங்கி பகல் நீளும் நாளின் தொடக்கமாய் டிசம்பர் 25 குறிக்கபட்டு சூரிய தேவனுக்கு உகந்த நாளாய் ரோமில் கொண்டாப்பட்டது.

சிலாவிக் நாகரிகத்தில் க்ராச்சுன்எனும் பண்டிகை டிசம்பர் 21ம் நாள் கொண்டாப்பட்டது . ஸ்லாவிக் நாகரிகம் கிழக்கு ஐரோப்பாவில் பரவியிருந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பழமையான நாகரிகம். அவர்களது நம்பிக்கைபடி இந்த இரவில் சாத்தான் மற்றும் தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகமாய் இருக்கும். அவர்கள் நம்பிக்கைபடி இந்நாளில் சூரியன் மறுபிறப்பு கொள்கிறார்.

கிருத்துவ மதத்தின் துவக்க காலத்தில் கிருஸ்மஸ் பண்டிகை இல்லாதிருந்தது. பைபிளில் இயேசுவின் பிறந்த தினம் பற்றிய துல்லிய குறிப்புகள் எதுவும் இல்லை. கி.பி நான்காம் நூற்றாண்டில் போப் முதலாம் ஜீலியஸ் காலத்தில்தான் கிருஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் துவக்கப்பட்டன. அதற்கு பின் மெல்ல பரவ ஆரம்பித்த இந்த பண்டிகை ஆறாம் நூற்றாண்டில் இங்கிலாந்தை தொட்டது. எட்டாம் நூற்றாண்டில் ஸ்காண்டிநேவியாவிலும் கிருஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் பரவின. கிரிஸ் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளில் ஜனவரி 8ம் தேதி கிருஸ்மஸ் பண்டிகையாக கொண்டாப்படுகின்றது . அவர்கள் நம்பிக்கையின் படி இந்த தினத்தில்தான் மூன்று அரசர்கள் கிருஸ்து அரசரை சந்தித்தனர்.
இங்கிலாந்தில் 1647ல் உள்நாட்டு யுத்தம் அரசருக்கு ஆதரவானவர்களுக்கும், பார்லிமண்ட் உறுப்பினர்களுக்கும் இடையே நடந்தது. அதன் முடிவில் அரசர் முதலாம் சார்லஸ் கொல்லப்பட்டார். பார்லிமண்ட் ஆதரவு படைகளுக்கு தலைமை தாங்கிய ஆலிவர் குரோம்வெல் இங்கிலாந்தின் நிர்வாகத்தை கையில் எடுத்தார் . அவர் பதவியில் இருக்கையில் கிருஸமஸ் இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டது. ஆங்கில ப்ராட்டஸடான்டுகள் கிருஸமஸ் கிருத்தவத்திற்கு எதிரானது மற்றும் பாகன் வழிப்பாடு முறைகளை தழுவி வந்தது என்ற கருத்தில் இருந்ததால் இந்த தடையை கொண்டு வந்தனர் . இந்த ப்ராட்டஸ்டான்டுகள்ப்யுரிட்டன்என்ற பெயரில் அழைக்கப் பட்டனர். 1860ல் மன்னராட்சி மீண்டும் அமைக்கப்பட்ட பிறகு இரண்டாம் சார்லஸ் மன்னராக இருந்த காலத்தில் இந்த தடை நீக்கப்பட்டது.

உலகமெங்கும் கிருஸ்மஸ் மரம் வைக்கும் பழக்கத்தை பிரபலபடுத்தியது இங்கிலாந்தின் அரச குடும்பமே. விக்டோரியா அரசியின் கணவர் ஜெர்மனியை சார்ந்தவர் . அது வரை ஜெர்மனியில் பழக்கமாய் இருந்த கிருஸ்மஸ் மர பழக்கம் விக்டோரியா மகராணியால் இங்கிலாந்திற்கும் வந்தது. அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்ற வார்த்தைகளுகேற்ப்ப இந்த பழக்கம் இங்கிலாந்தெங்கும் பரவலாயிற்று. இங்கிலாந்தின் காலனி நாடுகளிலும் இப்பழக்கம் பரவலாயிற்று .

அமெரிக்கா உருவான காலகட்டத்தில் நியுயார்க் பகுதியில் கிருஸ்மஸ் பண்டிகையாக இருந்தது, ஆனால் பாஸ்டன் பகுதிகளில் குடியேறிய ப்யுரிட்டன் வகையை சார்ந்த கிருத்தவர்களால் கிருஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படவில்லை. அமெரிக்க அரசியலமைப்பு நடைமுறைப் படுத்தப்பட்டு நடந்த முதல் அமெரிக்க நாடாளுமன்றம் டிசம்பர் 25ம் தேதியை விடுமுறையாக அறிவிக்கவில்லை. கிருஸ்மஸ் தினத்தன்று காங்கிரஸ் முழு அளவில் நடந்தது . அமெரிக்காவில் 1870ம் ஆண்டுதான் முழு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. துவக்க காலத்தில் இது குடும்பத்தோடு வீட்டில் கொண்டாடும் பண்டிகையாக இல்லை . பெரு விழாவாக ஆட்டம், பாட்டுகளோடு கொண்டாப்பட்டது.1828 ம் ஆண்டு கிருஸ்மஸ் பண்டிகை திருவிழாவில் நடந்த கலவரத்தினால் நியுயார்க் நகர கவுன்சில் முதன்முதலில் காவல் படையை அமைத்தது. அதற்கு பிறகே கிருஸ்மஸ் பண்டிகை திருவிழா கொண்டாடங்களிருந்து வீட்டினுள் கொண்டாடப்படும் குடும்ப பண்டிகையாக மாற ஆரம்பித்தது .

தஞ்சை அருகே இருந்த போது பள்ளி படிப்பின் போது மாதா கோவில் விழாதான் கிருஸ்மஸை விட சிறப்பாய் இருக்கும். ஊரேங்கும் தேரிழுப்பு ஆரவாரமாய் இருக்கும். மாதா கோவிலில் ரங்க ராட்டினங்கள் வந்து சேரும்.நடக்க இடமில்லாமல் கடை வீதியில் கூட்டம் இருக்கும். பின்பு வாழ்க்கை கல்லூரி பக்கம் கொண்டு போன போது நண்பன் கொண்டு வருவதாய் சொன்ன வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒயினிலும், கேக்கிலும் ஆர்வம் இருந்தது. அதை கடைசி வரை சாப்பிடவே இல்லை. நான்கு வருடங்கள் பறந்து விட்டது. அமெரிக்கா வந்த பின்தான் கிருஸ்மஸ் பண்டிகையின் கொண்டாட்டங்களின் முழு பரிணாமங்களை காண முடிந்தது.

அமெரிக்காவில் பனி படர்ந்த கிருஸ்மஸ் தினங்கள் (White Christmas) விஷேசமாக கருதப்படுகின்றது.

கிருஸ்மஸ் வரும் நாளை குடும்பங்கள் ஆவலாய் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. டிசம்பர் தொடங்கியவுடன் வரும் முதல் வார விடுமுறையில் வீட்டை சுற்றி பல குடும்பங்கள் விதவிதமாய் வீட்டை அலங்கரிப்பதை காண முடிகிறது. மரபு வழியாக கிருஸமஸ் அலங்காரங்கள் சிகப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் அமையும் . கண் கவரும் மின் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. வீடுகளுக்கு கிருஸ்மஸ் மரங்கள் கார்களின் மேல் கட்டப்பட்டும், ட்ரக்குகளின் பின்புறம் சவாரி செய்தும் வந்து இறங்குகின்றன. கிருஸ்மஸ் நெருங்க நெருங்க அங்காடிகளில் கூட்டம் வழிய ஆரம்பிக்கிறது. ஏதேனும் ஷாப்பிங் சென்டர் போனால் பார்க்கிங் செய்ய பிரம்ம பிரயத்தனந்தான் . அலுவலகத்தில் வேலை மிதமாகிறது. எல்லோரிடமும் வரபோகும் விடுமுறைக்கான எதிர்பார்ப்பு தெரிய ஆரம்பிக்கிறது. மொத்ததில் வருடத்தின் ரசிக்கதக்க அலங்காரமாய் டிசம்பரின் கடைசி இருவாரங்கள் அமைகிறன.

December 24, 2008 at 5:49 AM Leave a comment

கொரிய செல்பேசிகள் வேண்டாம்

விலை குறைவாகவும், அதே சமயம் அதிக வசதிகளுடனும் இருக்கிறது என்று கொரியன் அல்லது சீன செல்பேசிகளை வாங்க வேண்டாம்.
ஏன் என்றால், ஏற்கனவே இருக்கும் கொரியன் மற்றும் சீன செல்பேசிகளின் இணைப்புகள் வரும் ஜனவரி 6ஆம் தேதியுடன் துண்டிக்கப்பட உள்ளன.
அன்றைய தினம் இதுபோன்ற 2.5 கோடி செல்போன்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைப்பை துண்டிக்கப் போகின்றன.
இதற்குக் காரணமும் உண்டு…
முறையாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் செல்பேசிகளில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்பேசி கருவி அடையாள எண்) எண் இருக்கும். ஆனால் இந்த கொரியன் செல்பேசிகளில் இந்த எண் இருக்காது.
இந்த ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத கொரிய செல்பேசிகளை ஒருவர் பயன்படுத்தினார் என்பதை நிரூபிக்க முடியாது. மேலும், இந்த செல்பேசியைப் பயன்படுத்தி தீவிரவாதிகளும், குற்றவாளிகளும் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனவே நாட்டின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு, ஐ.ம்.இ.ஐ. எண் இல்லாத செல்பேசிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்தே, ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத செல்பேசிகளுக்கு சேவையை துண்டிக்குமாறு செல்பேசி நிறுவனங்களை தொலைத் தொடர்பு துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து இந்த நடவடிக்கை ஜனவரி 6ஆம் தேதி அமலாகிறது.

December 23, 2008 at 3:36 AM Leave a comment

பக்ரித் நல்வாழ்த்துக்கள்

bakrid

இஸ்லாமிய நண்பர்களுக்கு பக்ரித் நல்வாழ்த்துக்கள்.

December 8, 2008 at 10:12 AM Leave a comment

ம.பியில் பாஜக மீண்டும் வெற்றி-உதவிய பிஎஸ்பி

போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜகவை மீண்டும் வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளார் முதல்வர் சிவராஜ் சிங் செளகான்.

மிகச் சிறந்த நிர்வாகியாக பெயர் எடுத்துள்ள செளகானையே அந்தக் கடசி மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் சந்ததிது பாஜக.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இந்த மாநிலத்தில் 9 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் பாஜகவுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. அங்கு இரு கட்சிகளி்ன் வாக்கு வங்கிகளையும் பகுஜன் சமாஜ் சுரண்டியுள்ளது. அதிலும் காங்கிரசின் வாக்குகளையே அந்தக் கட்சி அதிகமாக சுரண்டியுள்ளது. இதன்மூலம் பாஜகவின் வெற்றிக்கு அந்தக் கட்சி மறைமுகமாக உதவியுள்ளது.

அதே நேரத்தில் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவரான முன்னாள் முதல்வர் உமா பாரதியின் பாரதீய ஜன் சக்தி படுதோல்வி அடைந்துள்ளது.செளகானை முதல்வராக அறிவித்து பாஜக போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளராக யாரையும் அறிவிக்காமலேயே தேர்தலை சந்தித்தது.

முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், முன்னாள் துணை முதல்வர் சுபாஷ் யாதவ், ஜமுனா தேவி, மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்கின் மகன் அஜய் சிங், முன்னாள் சட்டபை சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் திவாரி ஆகியோர் முதல்வர் பதவிக்கான கனவில் இருந்தனர்.

இந்தக் கனவில் பாஜக மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது.

December 8, 2008 at 5:29 AM Leave a comment

ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது.

பாஜக சார்பில் முதல்வர் வசுந்தரா ராஜே தான் இந்த முறையும் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து முன்னாள் முதல்வர் அசோக் கெலோட் தலைமையில் தேர்தலை சந்தித்தது காங்கிரஸ்.

குஜ்ஜார் சமூக மக்களின் போராட்டத்தை கையாண்டதில் வசுந்தரா ராஜேவின் பெயர் கெட்டது.

இந் நிலையில் அந்த மாநிலத்தில் பாஜகவை பின் தள்ளிவிட்டு காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் நிலையை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது.மொத்தமுள்ள 200 இடங்களில் ஆட்சியைப் பிடிக்க 100 இடங்கள் வேண்டும் என்ற நிலையில் 101 இடங்களில் அந்தக் கட்சி முன்னிலையில் உள்ளது. ஆனால், இப்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளதால் சில சுயேச்சைகள் ஆதரவுடன் தான் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று தெரிகிறது.

கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய இந்த மாநிலத்தில் முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே ரேம்ப் வாக்கில் நடப்பது, ஹெலிகாப்டரில் பறப்பதுமாக தன்னை மிகவும் ஹை டெக் முதல்வராகக் காட்டிக் கொண்டார். அதுவே அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பயோ கான் நிறுவன அதிபர் கிரன் மஜூம்தாருக்கு வாயோடு வாய் முத்தம் தந்து அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார் ராஜே. இதையெல்லாம் அந்த மாநில மக்கள் ரசிக்கவில்லை.

December 8, 2008 at 5:27 AM Leave a comment

ராஜஸ்தான், டெல்லியில் காங்-ம.பி, சட்டீஸ்கரில் பாஜக முன்னிலை

டெல்லி: டெல்லி உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.

இதுவரை கிடைத்துள்ள முன்னிலை நிலவரங்களின்படி பாஜக ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் அந்தக் கட்சி தோல்வியை நோக்கி போய்க் கொண்டுள்ளது. அங்கு காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இந்த மாநிலத்தில் 200 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்திலும் சட்டீஸ்கரிலும் பாஜகவே முன்னிலையில் உள்ளது. இதனால் அங்கு மீண்டும் பாஜக அமைக்கலாம் எனத் தெரிகிறது. மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளும் சட்டீஸ்கரில் 90 தொகுதிகள் உள்ளன.

டெல்லியில் ஆளும் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது. 69 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் காங்கிரஸ் குறைந்தபட்ச முன்னிலையுடன் பாஜகவை பி்ன்னுக்கு தள்ளியுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் 9 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்று காங்கிரஸ் பாஜகவுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. அங்கு இரு கட்சிகளி்ன் வாக்கு வங்கிகளையும் பகுஜன் சமாஜ் சுரண்டியுள்ளது.

அதே நேரத்தில் உமா பாரதியின் பாரதீய ஜன் சக்தி மத்தியப் பிரதேசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.

மிசோரம் மாநிலத்திலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. ஆளும் மிசோரம் தேசிய முன்னணி கட்சி காங்கிரஸைவிட பின் தங்கியுள்ளது. இதனால் இந்த மாநிலத்திலும் காங்கிரஸ் வெல்லாம் எனத் தெரிகிறது. அந்த மாநிலத்தில் 40 தொகுதிகள் உள்ளன.

டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிஸோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கும் கடந்த மாதம் பல கட்டமாக தேர்தல் நடந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 7 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

இந்த நிலையில் காஷ்மீர் தவிர மற்ற ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

இந்தத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுதால் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த மாநிலங்களில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற ஊகத்திற்கு இடமில்லாமல் போய் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

December 8, 2008 at 4:44 AM Leave a comment

தமிழில் ஒர் புதிய அத்தியாயம் : தமிழ் SPELL CHECK மென்பொருள்

இன்று தமிழில் தட்டச்சு செய்ய பல மென்பொருட்கள் (இ-கலப்பை, NHM , மற்றும் கீமேன்)  போன்ற மென்பொருட்கள் இருந்தாலும் அச்சுத்துறைக்கு ஏற்ற ஒரு மென்பொருளாக இதுவரை ஸ்ரீலிபி மற்றும் அனு போன்ற மென்பொருட்களை நாம் பயன்படுத்தி வந்தோம். ஆனால் புதிய மென்பொருளை சர்மா ப்ராடக்ஸ் மற்றும் சொல்யூசன்ஸ் நிறுவனத்தினர் உருவாக்கியுள்ள விசைத்தமிழ் எனும் மென்பொருள் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற ஒரு மென்பொருளாகவே இருக்கிறது. அந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் பற்றிய ஒரு பார்வை!

விசைத்தமிழ்
எந்த ஃபான்ட் லும், எல்லா தட்டச்சு முறைகளிலும்  தமிழில் தட்டச்சு செய்ய என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த மென்பொருள்

விசைத்தமிழ் என்ற மென்பொருள் மூலம் நமது கணினியில் தமிழில் தட்டச்சு செய்யலாம் உங்களுக்கு தெரிந்த உள்ளீட்டு முறையில், உதாரணத்திற்கு நீங்கள் செந்தமிழ் பாண்ட்களை பயன்படுத்தினால் அந்த செந்திமிழ் பாண்ட் ஐ பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த டைப்-ரேட்டர் , தமிலிங்கிஸ் முறை போன்று 12 வகையான முறையில் பேஜ்மேக்கர், வேர்டு, அடோப் இன்டிசைன், உட்பட எல்லா மென்பொருள்களிலும் தட்டச்சு செய்யமுடியும்.

அதோடு விண்டோஸ் XP,  முதல் விண்டோஸ்  விஸ்டா  வரை windows – ன் எல்லா ஆபரேட்டிங் சிஸ்டம்களிலும் இயங்கும்.

தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் சார்ந்த அனைத்து சிக்கல்களுக்கும், தடைகளுக்கும் முழுமையானத் தீர்வாக வெளிவந்திருக்கிறது. தமிழ் மொழியில் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக் குடும்பங்களும், 10-ற்கும் மேற்பட்ட விசைபலகை வகைகளும் உள்ளன.இவை எல்லாவற்றிலும் இயங்கூடிய வகையில் இந்த மெனபொருட்கள் வந்துள்ளது குறிப்பிட்டத் தக்கது

இந்த மென்பொருட்களோடு உடன் வரும் துணை மென்பொருட்கள்


ஸ்பெல் செக் : தமிழில் முதன்முறையாக 23 இலட்சம் வார்த்தைகளை உள்ளடக்கிய தமிழ் Sell Checker , விசைத்தமிழ் மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் எந்த மென்பொருளில் டைப் செய்தாலும் ஒவ்வொரு வார்த்தையினையும் சொற்பிழை மற்றும் இலக்கணப் பிழைகளை கண்டறிந்து அதற்கான சரியான வார்த்தையை உடனே காண்பிக்கும் அதிவேக Sell Checker இம் மென்பொருளில் உள்ளது.

ஆட்டோ கரெக்ட் : தமிழில் இதுவரை  வந்துள்ள எல்லா மென்பொருள்களிலும் இயங்குவதாக உருவாக்கபட்டுள்ளது. இவை தமிழ் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தவிர்க்க உதவுகிறது. Ms-Word ன் Spell check போன்று

“ஃபான்ட் சாம்ப்ளர்” : ஒரே நேரத்தில் பல்வேறு ஃபான்ட்களில் வரும் எழுத்துருவை ஃப்ரிவீயூ காட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியினால் ஏராளமாக எழுத்துருக்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த முடியாமல் இருக்கும் பல பயனாளர்கள் பெரிதும் பயன் பெறுவர்.

தமிழ் – ஆங்கிலம் அகராதி (டிக்ச்னரி) : இதில் ஏறத்தாழ 60,000 ஆங்கில வார்த்தைகளுக்கு 2,30,000 தமிழ் பொருள்களை கொண்டுள்ளது. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலுருந்தும் எந்த எழுத்துருவிற்கும் ஒரு தகவலை மாற்றிக் கொள்ள முடியும். யுனிக்கோடிலும் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் சிறப்பம்சங்களாக முகவரி புத்தகம் மற்றும் மின்னஞ்சல் சேவையையும் விசைத்தமிழ் கொண்டுள்ளது.

இந்த மென்பொருளின் மூலம் நமக்கு வந்திருக்கும் ஃபான்ட் எந்த முறையில் இருந்தாலும் நாம் பயன்படுத்தும் முறைக்கு மாற்றிவிடலாம்.
உதாரணத்திற்கு  வானவில் ஃபான்ட் பயன்படுத்துபவர்கள் பாமினி ஃபான்டிற்கு மாற்றிக்கொள்ளலாம். இப்படி 117 வகையான ஃபான்ட்களிலிருந்து நமக்கு வேண்டும் ஃபான்ட்களுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
(உம்) இளங்கோ <-> வானவில், இளங்கோ <-> யுனிகோடு , டாம்  <-> யுனிகோடு, போன்று எந்த ஃபான்ட் முறைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

Tamil Sorting : அகர வரிசைப்படுத்துதல்

ஆங்கில மென்பொருட்களில் உள்ள அகர வரிசைப்படுத்துதல் போன்று தமிழில் நீங்கள் வைத்திருக்கும் அனைத்து முறைகளிலும் நீங்கள் அகர வரிசைப்படுத்தி வைக்கலாம்.

இந்த மென்பொருளை தற்போது அதிக அளவில் பயன்படுத்தபடுகின்ற ட்ரான்ஸ்லிட்ரேஷன் விசைமுறையை பயன்படுத்தியும் கூட எல்லாவகை எழுத்துருக்களிலும், யுனிக்கோடிலும் தட்டச்சு செய்ய முடியும் என்றவாறு உருவாக்கியுள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு www.tamil.sarma.co.in

December 8, 2008 at 3:33 AM Leave a comment

ஹைதராபாத்தில் துப்பாக்கிச் சூடு-தீவிரவாதிகள்?

ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து வீடு வீடாக சோதனை நடத்திய போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. 4 பேர் கொண்ட கும்பல் போலீசாரை சுட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டது. இவர்கள் தீவிரவாதிகளாகவே இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பழைய ஹைதராபாத் பகுதியில் உள்ள சந்தோஷ் நகரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்று பகல் 1.30 மணியளவில் அந்தப் பகுதியை முற்றுகையிட்ட போலீசார் வீடு வீடாக சோதனை நடத்தினர்.

ஒரு ஹார்ட்வேர் கடையில் சோதனைக்காக போலீசார் நுழைந்தபோது அங்கு பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு காவலர் பலத்த காயமடைந்தார். இன்னொருவர் லேசான காயத்துடன் தப்பினார்.

போலீசாரை சுட்ட நால்வருமே தப்பியோடிவிட்டனர். இவர்கள் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

December 3, 2008 at 12:57 PM Leave a comment

கஸாவ் பாகி்ஸ்தானி அல்ல, யாரையும் ஒப்படைக்க முடியாது, போருக்கு தயார்-சர்தாரி

இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியாவிடம் பிடிபட்டுள்ள அஜ்மல் அமீர் கஸாவ் பாகிஸ்தானைச் சேர்ந்தவனே அல்ல என பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கூறியுள்ளார்.

மேலும் இந்தியா கொடுத்துள்ள பட்டியலில் உள்ள 21 தீவிரவாதிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரத்தை இந்தியா தரவில்லை என்றும் இதனால் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன்மூலம் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் திடீரென மிகக் கடுமையான நிலையை எடுத்துள்ளது தெளிவாகியுள்ளது.

மும்பை தாக்குதல் நடந்தவுடன் முதலில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஐஎஸ்ஐ தலைவரை இந்தியாவுக்கு அனுப்புவதாகக் கூறினார் சர்தாரி. ஆனால், இதையடுத்து அவரை பாகிஸ்தான் ராணுவத் தளபதி இஸ்பாக் கியானி சந்தித்து, ஐஎஸ்ஐ தலைவரை அனுப்ப எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து ராணுவ நெருக்கடிக்குப் பணிந்து பல்டி அடித்தார் சர்தாரி.

ஐஎஸ்ஐ தலைவர் அனுப்ப முடியாது, பதிலாக ஒரு பிரதிநிதியை அனுப்புகிறோம் என்றார்.

இந் நிலையில் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ள ஜெய்ஷ் ஏ முகம்மத் தலைவர் மெளலானா மசூத் அஸார், லஷ்கர் ஏ தொய்பாவைச் சேர்ந்த ஹபீஸ் முகம்மத் சயீத், தாவூத் இப்ராகிம், ஹர்கத் உல் முஜாகிதீன், காலிஸ்தான் லிபரேசன் பிரண்ட், ஹர்கத் உல் ஜிகாதி இஸ்லாமி ஆகியவற்றைச் சேர்ந்த 21 பேரை தன்னிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் தூதரை அழைத்து வெளியுறவுத்துறை கூறியது.

ஆனால், இவர்களை ஒப்படைக்க மறுத்துள்ளார் சர்தாரி. நேற்றிரவு தேசிய பாதுகாப்புக் கூட்டம் என்ற பெயரில் அனைத்துக் கட்சியினரின் கூட்டம் பிரதமரின் இல்லத்தில் நடந்தது.

இதில் பேசிய அதிபர் சர்தாரி, இந்தியாவுடன் ஒத்துழைக்க பாகிஸ்தான் தயார், இந்தியாவுடன் அமைதிக்கு இந்தியா தயார், இந்தியாவுடன் போருக்கும் பாகிஸ்தான் தயார் என்று கூறியுள்ளார்.

இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய சர்தாரி,

இந்தியா கொடுத்த பட்டியலி்ல் உள்ளவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்களைத் தரவில்லை. முதலில் இந்தியா ஆதாரங்களைத் தரட்டும். போதிய ஆதாராங்கள் இருந்தால் அவர்களை பாகிஸ்தான் மண்ணிலேயே வைத்து, பாகிஸ்தான் நீதிமன்றங்களிலேயே விசாரித்து தண்டனை தருவோம். ஆனால் அதற்கு ஆதாரம் வேண்டும்.

அதே போல பட்டியலில் உள்ள தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானிலேயே இல்லை.

மேலும் இப்போது இந்தியாவிடம் பிடிபட்டுள்ள அஜ்மல் அமீர் கஸாவ் பாகிஸ்தானைச் சேர்ந்தவனே அல்ல. அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.

ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐயின் நெருக்கடிக்குப் பணிந்தே சர்தாரி இவ்வாறு பேசியுள்ளதாகத் தெரிகிறது. அங்கு ஜனநாயக அரசுகள் ஆட்சியில் இருந்தாலும் பேருக்குத்தான் ஜனநாயகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு எல்லாவற்றையும் நிர்ணயிப்பது ராணுவமும் அதன் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயும் தான்.

December 3, 2008 at 6:35 AM Leave a comment

என்னை கொன்றுவிடுங்கள்.. வாக்குமூலத்தின்போது கதறிய கஸாவ்

மும்பை: மும்பை தாக்குதலி்ல் ஈடுபட்டு பிடிபட்டு, விசாரிக்கப்பட்டு வரும் தீவிரவாதி அஜ்மல் அமீர் கஸாவ் தன்னைக் கொன்றுவிடும்படி இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளான். இல்லாவிட்டால் தனது குடும்பத்தினரை லஷ்கர் ஏ தொய்பா அமைப்பு கூண்டோடு காலி செய்து விடும் என்றும் கூறியுள்ளான்.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளி்ல் ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்தவண்ணம் உள்ளன.

அவர் கூறியுள்ள தகவல்கள்:

நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். அதன் பின்னர் மதரஸாவில் தான் படித்தேன். நான் உள்பட 40 பேர் லஷ்கர் ஏ தொய்பாவால் பயிற்சி அளிக்கப்பட்டோம். பாகிஸ்தானின் பல இடங்களில் வைத்து இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.

துப்பாக்கிளைக் கையாள்வது, நீச்சல், படகுகளை கையாள்வது, ஆர்டிஎக்ஸ் குண்டுகளை வைப்பது உள்பட பல பயிற்சிகள் தரப்பட்டன. இடையே மும்பைக்குச் சென்று டார்கெட்களை பார்த்துவிட்டு வரவும் குழுக் குழுவாக அனுப்பி வைக்கப்பட்டோம்.

இதற்காக இந்திய கல்லூரிகளின் ஐடி கார்டுகள் எங்களுக்குத் தரப்பட்டன. அந்த கார்டுகளைக் காட்டி ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்கினோம். எனக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு கல்லூரியின் ஐடி கார்ட் தரப்பட்டது.

இதையடுத்து மும்பையில் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டோம். எங்கள் குடும்பத்தினருக்கு பணம் தருவதாகவும் கூறினார்கள்.

தாக்குதல் நடத்திய பின்னர் பத்திரமாக கராச்சிக்குத் திரும்பி வந்துவிடலாம், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்கள்.

என் குடும்பத்துக்கு வேண்டிய நிதி உதவிகள் செய்யப்படும் என்றனர்.

போலீசாரிடம் மாட்டினால் தற்கொலை செய்யுமாறு கூறியிருந்தனர். ஆனால், நான் உயிரோடு மாட்டிக் கொண்டேன். இதனால் என்னை பேசாமல் கொன்றுவிடுங்கள். இல்லாவிட்டால் என் குடும்பத்தை லஷ்கர் ஏ தொய்பா கூண்டோடு காலி செய்துவிடும்.

என்னுடன் மும்பை வந்த தீவிரவாதிகள் 9 பேர். அவர்களது பெயர்கள், அபு அக்சா, அபு உமர், படா அப்துல் ரஹ்மான், சோட்டா அப்துல் ரஹ்மான், அபு அலி, அபாதுல்லா, சோஹய்ப், உமர் ஆகியோர்.

எங்கள் 10 பேரையும் தலா 2 பேர் கொண்ட 5 குழுக்களாகப் பிரித்து தாக்குதல் திட்டத்தைக் கொடுத்தார்கள். ஒரு குழு செய்யும் வேலை இன்னொரு குழுவுக்குத் தெரியாது.

நாங்கள் கராச்சியிலிருந்து 13ம் தேதி ஒரு கப்பலில் அனுப்பப்பட்டோம். ஆனால், கடலிலேயே அந்தக் கப்பல் பல முறை நிறுத்தப்பட்டது. குஜராத் கடல் பகுதி வரை வந்தது.

அங்கு எங்களது இன்னொரு கூட்டாளிகள் குஜராத்தைச் சேர்ந்த ஒரு படகை (குஜராத்தைச் சேர்ந்த மீன்பிடி படகு குபேர்) கடத்தி தயார் நிலையில் வைத்திருந்தனர். நாங்கள் அந்தப் படகுக்கு ஆயுதங்கள் மற்றும் 2 ரப்பர் படகுகளுடன் மாறினோம்.

அந்தப் படகில் இருந்தவர்கள் எங்களை மும்பை கடல் பகுதி வரை கொண்டு வந்தனர். இதையடுத்து ரப்பர் படகுகளுக்கு மாறி மும்பைக்கு வந்தோம்.

நானும் என்னுடன் வந்தவனும் சிஎஸ்டி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திவிட்டு ஓபராய் ஹோட்டலுக்கு வந்தோம். மற்றவர்கள் பந்த்வார் பார்க்கில் உள்ள லியோபோல்ட் கபேவில் தாக்குதல் நடத்திவிட்டு தாஜ் ஹோட்டலுக்குச் சென்றனர்.

என்னுடன் வந்தவர்களில் சிலர் பிரிட்டஷைச் சேர்ந்த பாகிஸ்தானியர்கள். அவர்களுக்கு வேண்டுமானால் அல்-கொய்தாவுடன் தொடர்பு இருக்கலாம். எனக்கு லஷ்கர் மட்டுமே தெரியும். வேறு எதுவும் தெரியாது.

இந்தத் தாக்குதல் குறித்தோ, கொலைகள் குறித்தோ எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என் கவலை எல்லாம் நான் உயிரோடு பிடிபட்டது தான். என்னைக் கொன்றுவிடுங்கள். இல்லாவிட்டால் லஷ்கர் என் குடும்பத்தைக் காலி செய்துவிடும் என்று கூறியுள்ளான் கஸாவ்.

மேலும் குபேர் படகில் இருந்த ஊழியர் கொலை செய்யப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது என்றும் இவன் கூறியுள்ளான். இவர்களை ரப்பர் படக்குக்கு மாற்றிவிட்டு குபேரில் திரும்ப பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைந்த இந்தத் தீவிரவாதிகளின் வழி காட்டிகள் தான் அந்த ஊழியரைக் கொலை செய்துவிட்டு தங்களது கப்பலில் ஏறி கராச்சிக்குத் தப்பியதாகத் தெரிகிறது.

இப்போது இவனிடம் எப்பிஐயும் தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.

கஸாவை காப்பாற்ற போலீஸ் பட்டபாடு:

முன்னதாக இவனும் இவனது கூட்டாளியும் ஸ்கோடா காரில் தப்பியபோது மும்பை டி.பி. மார்க் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் காதம் தலைமையில் வழிமறித்தனர். அப்போது இவன் சுட்டதில் ஒரு போலீஸ்காரர் பலியானர். போலீசார் தி்ருப்பிச் சுட்டதில் இவனது கூட்டாளி பலியானான்.

இதையடுத்து இவனை போலீசார் பிடித்தனர். அப்போது அப் பகுதி பொது மக்கள் பலரும் இவனைப் பிடிக்க உதவியுள்ளனர். பிடிபட்ட இவனை பொது மக்கள் அடித்து உதைத்துள்ளனர். இவனை உயிரோடு அவர்களிடம் இருந்து மீட்டு பத்திரமாகக் காவல் நிலையத்துக்குக் கொண்டு வரவே படாதபாடு பட்டுள்ளனர் போலீசார்.

December 3, 2008 at 5:57 AM Leave a comment

Older Posts


Visitors

  • 14,717 hits

Archives

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Categories

Recent Comments