Posts filed under ‘நாட்டு நடப்பு’
இஸ்ரேலிய மருத்துவ குழு மும்பை விரைகிறது
நாரிமன் ஹவுஸில் சிக்கி மீட்கப்பட்டு வரும் இஸ்ரேலியர்களுக்கு உதவுவதற்காக இஸ்ரேலிலிருந்து ஒரு மருத்துவக் குழு மும்பை விரைந்துள்ளது.
மும்பை நாரிமன் ஹவுஸ் இல்லத்தில் 15 இஸ்ரேலியர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறத. இவர்களை மீட்க என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். இன்று காலை கமாண்டோ படையினர் நாரிமன் ஹவுஸின் மாடியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இஸ்ரேலியர்களுக்கு உதவுவதற்காக அந்த நாட்டிலிருந்து மருத்துவ குழு ஒன்றை மும்பை கிளம்பியுள்ளது. இந்தக் குழுவில் டாக்டர்கள், நர்சுகள், பிற குழுவினர் இடம் பெற்றுள்ளனர்.
மும்பையில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் படையினருக்கு இவர்கள் உதவியாக இருப்பார்கள். இஸ்ரேல் அரசே முன்வந்து இந்த மீட்பு மற்றும் உதவிக் குழுவை அனுப்பியுள்ளது. காயமடைந்த இஸ்ரேலியர்களுக்கும், பிறருக்கும் இந்தக் குழுவினர் சிகிச்சை அளிப்பார்கள். காணாமல் போயுள்ள இஸ்ரேலியர்களைக் கண்டுபிடிக்க இந்திய அதிகாரிகளுக்கு உதவுவார்கள். மேலும் காயமடைந்த இஸ்ரேலியர்கள் உடனடியாக நாடு திரும்பவும் இக்குழுவினர் ஏற்பாடு செய்வார்கள்.
முன்னதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எஹுத் பாரக் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஸிபி லிவ்னி ஆகியோர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுடன் தொலைபேசியில் பேசினர்.
மிகக் கொடூரமான இந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திலிருந்து அப்பாவிமக்களை மீட்க இந்திய பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அவர்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர். இஸ்ரேல் அரசு அனைத்து வகையிலும் இந்தியாவுக்கு உதவ காத்திருப்பதாகவும் உறுதியளித்தனர்
Recent Comments