17.12.08:மாலைத்துளிகள்
December 17, 2008 at 10:28 AM Leave a comment
புஷ் மீது வீசிய ஷூக்களை ஒரு கோடி டாலருக்கு வாங்கிக்கொள்ள மக்கள் ஆர்வம்
பாக்தாத் : ஈராக்கில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்மீது வீசப்பட்ட ஷூக்களை ஒரு கோடி டாலர் வரை ( சுமார் 47 கோடி ரூபாய் ) கொடுத்து வாங்கிக்கொள்ள அரபு நாடுகளில் மக்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிறு அன்று ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அந்நாட்டு பிரதமர் நூரி அல் மாலிகியுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எகிப்து தலைநகர் கெய்ரோவை தலைமையிடமாக செயல்பட்டு வரும் அல் பாக்தாதியா என்ற தனியார் டி.வி.நிறுவனத்தின் பாக்தாத் நிருபராக இருக்கும் முந்தாதார் அல் ஜெய்டி என்பவர் ஜார்ஜ் புஷ் மீது அவனது இரண்டு ஷூக்களையும் கழற்றி வீசினார். அந்த ஷூக்கள் அதிபர் புஷ் மீது படவில்லை என்றாலும், அந்த ஷூக்கள் இப்போது அரபு நாடுகளிடையே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அதிக மதிப்புள்ளதாகவும் அகி விட்டன. பாத்தாத்தில் உள்ள ஒரு ஷூ கடையில் வாங்கப்பட்ட அந்த டார்க் பிரவுன் ஷூக்கள் இப்போது 10 மில்லியன் டாலர் வரை ( ஒரு கோடி டாலர் – சுமார் 47 கோடி ரூபாய் ) வரை விலை போகும் என்று சொல்லப்படுகிறது.
மேடாஸ் நிறுவனங்களை வாங்கிக்கொள்வதை கைவிட்டது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்
நியுயார்க் : மேடாஸ் இன்ஃரா மற்றும் மேடாஸ் புராபர்டீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக்கொள்ளும் திட்டத்தில் இருந்து சத்யம் கம்ப்யூட்ர்ஸ் விலகிக்கொண்டது. முதலீட்டாளர்களின் கடும் எதிர்ப்தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேடாஸ் புராபர்டீஸ் நிறுவனத்தையும் மேடாஸ் இன்ஃராவின் 51 சதவீத பங்குகளையும் 1.6 பில்லியன் டாலருக்கு ( சுமார் 8,235 கோடி ரூபாய் ) வாங்கிக்கொள்வதாக சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் அறிவித்த 12 மணி நேரத்திற்குள் அதிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை அன்று இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக்கொள்வதாக சத்தம் கம்ப்யூட்டர்ஸ் அறிவித்ததும், அதன் பங்குதாரர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு ஐ.டி.கம்பெனி, கட்டுமான நிறுவனமான மேடாஸை வாங்குவதில் முதலீட்டாளர்களுக்கு விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் நியுயார்க் பங்கு சந்தையில் அதன் பங்கு மதிப்பு 55 சதவீதம் வரை குறைந்து விட்டது. செவ்வாய்க்கியமை அன்று இந்திய பங்கு சந்தை முடிவடைந்ததும், நலிவடைந்திருக்கும் மேடாஸ் புராபர்டீஸின் எல்லா பங்குகளையும் 1.3 பில்லியன் டாலருக்கும், மேடாஸ் இன்ஃராவின் 51 சதவீத பங்குகளை 0.3 பில்லியன் டாலருக்கும் வாங்கிக்கொள்வதாக சத்தம் கம்ப்யூட்டர்ஸ் அறிவித்தது. ஏற்கனவே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் சேர்மன் ராமலிங்க ராஜூவுக்கும் அவரை சேர்ந்தவர்களுக்கும் மேடாஸ் இன்ஃராவில் 36 சதவீத பங்குகளும் மேடாஸ் புராபர்டீஸில் 35 சதவீத பங்குகளும் இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் இருந்து சத்யம் விலகிக்கொள்வதாக அறிவித்ததும், சரிந்திருந்த அதன் பங்கு மதிப்ப ஓரளவு மீண்டது.
போக்ஸ்வாகன் கார் விலை குறைந்தது
மும்பை : ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பாளரான போக்ஸ்வாகன், இந்தியாவில் அதன் கார் விலையை குறைத்துள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்வாட் வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து பெரும்பாலான கார் கம்பெனிகள் கார் விலையை குறைத்து வருகின்றன. ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பாளரான போக்ஸ்வாகன், அதன் நவீன மாடல்களான ஜெட்டா மற்றும் பசாட்டின் விலையை ரூ.45,194 முதல் ரூ.80,859 வறை குறைத்திருக்கிறது. இந்த இரு மாடல்களைத்தான் போக்ஸ்வாகன் சமீபத்தில் இந்தியாவில் தயாரிக்க ஆரம்பித்தது. சென்வாட் வரி குறைப்பால் ஏற்பட்டுள்ள லாபம் முழுவதையுமே வாடிக்கையாளர்களே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விலை குறைப்பு செய்யப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் சொல்கிறது. ஜெட்டாவின் விலை ரூ.45,194 முதல் ரூ.57,814 வரையிலும், பசாட்டின் விலை ரூ.74,193 முதல் ரூ.80,859 வரையும் குறைக்கப்பட்டிருக்கிறது. டீலர்களிடம் ஸ்டாக்காக இருக்கும் கார்களுக்கும் இந்த விலை குறைப்பு பொருந்தும் என்று போக்ஸ்வாகன் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. விலை குறைப்பு <உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் அது தெரிவித்திருக்கிறது.
பணவீக்கம் 7.49 சதவீதமாக குறைந்திருக்கும் : சர்வே
புதுடில்லி : இந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 7.49 சதவீதமாகத்தான் இருக்கும் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் எடுத்த சர்வேயில் தெரிய வந்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் மத்திய அரசு, பெட்ரோல் விலையை 10 சதவீதமும் டீசலின் விலையை 6 சதவீதமும் குறைத்திருக்கிறது. இதன் காரணமாக பணவீக்கம் 7.49 சதவீதமாக குறைந்திருக்கும் என்று 11 பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதால் எவ்வளவு சதவீதம் பணவீக்கம் குறைந்திருக்கும் என்று சரியாக சொல்ல முடியாவிட்டாலும், 1.5 சதவீதம் முதல் 2.0 சதவீதம் குறைந்திருக்கும் என்று ஆக்ஸிஸ் வங்கியின் பொருளாதார நிபுணர் சவ்கதா பட்டாச்சார்யா சொல்கிறார். பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட ஜூன் ஆரம்பத்தில் இந்தியாவின் பணவீக்கம் இரட்டை இலக்கத்திற்கு சென்றது. பின்னர் அது அதிகபட்சமாக ஆகஸ்ட் 2 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 12.91 சதவீதமாக உயர்ந்திருந்தது.
வட்டி விகிதத்தை அடியோடு குறைத்தது அமெரிக்கா!
வாஷிங்டன்: வட்டி விகிதத்தை அடியோடு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது அமெரிக்க நிதித்துறை.
பெருமந்தச் சூழலில் தவிக்கும் தனது பொருளாதாரத்தை எப்படியாவது சீராக்கிவிடும் முயற்சியில் இறங்கியுள்ளது அமெரிக்கா.
அதன் ஒரு கட்டமாக, வங்கி வட்டி விகிதங்களை அடியோடு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுவரை 1 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதத்தை 0 முதல் 0.25ஆகக் குறைத்துவிட்டது. பல வகைக் கடன்களுக்கு இனி வட்டியே கிடையாது. அடுத்த ஆண்டு இறுதி வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றும் நிதித்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அதேபோல, நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பு முழுமையாக அரசின் வசம் இருந்தாக வேண்டிய அவசியத்தை உணர்ந்திருப்பதாகவும் நிதித்துறை அறிவித்துள்ளது.
இனி அனைத்து பணவியல் காரணிகளையும் ஒருங்கிணைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான், அமெரிக்காவின் இன்றைய நெருக்கடியைத் தீர்க்கும் என்றும் நிதித்துறை கூறியுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க பங்குச் சந்தையில் மிகவும் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. டோவ் ஜோன்ஸில் இன்று மட்டும் 4.2 சதவிகிதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.
புதிய சிக்கல்:
ஆனால், என்னதான் வட்டி விகிதக் குறைப்பை அமல்படுத்தினாலும் கூட அடுத்த ஆண்டு இறுதி வரை பொருளாதார மந்த்த்திலிருந்து மீளும் வாய்ப்பே இல்லை என்றும், இன்னும் நிலைமை மோசமாவதைத் தடுக்க முடியாது என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, பொராதாரத்தில் அரசின் பிடிமானம் மேலும் அதிகரிக்க வழிசெய்யும் முயற்சியில் புதிய அதிபர் ஒபாமா இறங்க வேண்டும் என்றும் அவர்கள் யோசனைத் தெரிவித்துள்ளனர்.
இதற்கான முயற்சிகளில் ஒபாமா ஏற்கெனவே தீவிராமாக இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பொருளாதாரம் முழுக்க முழுக்க தனியார் மயமானது. முதலாளித்துவத் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குவது என்பதால், அரசின் தலையீடு இதுவரை மிக்க் குறைவாகவே இருந்துவந்தது. மேலும் இத்தகைய பொருளாதாரச் சுழறஅசி நிலை அமெரிக்காவுக்கு புதிதும் அல்ல.
ஆனால் 1940-களில் நடந்த உலகப் பெருமந்தத்துக்கு இணையான நெருக்கடி இப்போது ஏற்பட்டுள்ளதால், தங்கள் பொருளாதாரத்தின் அடிப்படைச் சித்தாந்தத்தையே ஓரளவு மாற்றிக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளது அமெரிக்கா. தொழில்துறை மற்றும் நிதித்துறையை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் அரசின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஏர்டெல் தமிழ் வாய்ஸ் போர்ட்டல்: யுவன்சங்கர் ராஜா தொடங்கி வைத்தார்
சென்னை: ஏர்டெல் நிறுவனத்தின் ஏர்டெல் உங்கள் சாய்ஸ் என்ற தமிழ் வாய்ஸ் போர்ட்டல் சேவையை நேற்று அறிமுகப்படுத்தியது. இதனை இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் ஏர்டெல் மொபைல் சந்தாதாரர்கள் 52222 என்ற எண்ணுக்கு டயல் செய்து பாடல்கள், நகைச்சுவை, நாட்டுப்புற பாடல்கள், செய்தி போன்றவற்றை தேர்வு செய்து கேட்க முடியும். இந்த சேவையை பெறுவதற்கு மாத வாடகை ரூ.15. இந்த போர்ட்டலுக்கு அழைப்பு மேற்கொள்ளும் போது நிமிடத்திற்கு ரூ.1 கட்டணம் வசூலிக்கப்படும்.
உதாரணத்திற்கு பாடல்கள் பிரிவை தேர்ந்தெடுக்கும்போது அதில் சினிமா ஸ்பெஷல், நடிகர்கள் ஸ்பெஷல், இசையமைப்பாளர்கள் ஸ்பெஷல் என 3 பிரிவுகள் உள்ளன. இதில் சந்தாதாரர்கள் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து பாடல்களை கேட்கலாம். இதில் தங்களுக்கு பிடித்த பாடல்களை ரிங் டோனாகவும், ஹலோ டியூனாகவும் செட் செய்து கொள்ளலாம். அதேபோல செய்திகள், நகைச்சுவை நடிகர்களின் ஜோக்குகள், போன்றவற்றையும் கேட்கலாம்.
விரைவில் இதில் பெண்களுக்கான அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், கவிதை, இலக்கியம் போன்றவையும் இணைக்கப்பட உள்ளது. இந்த தகவல்களை ஏர்டெல் நிறுவன தமிழ்நாடு மொபைல் சர்வீசஸ் தலைமை செயல் அதிகாரிகள் அனிர்பான் கோஷ், ராஜீவ் ராஜகோபால் ஆகியோர் தெரிவித்தனர்.
Entry filed under: வணிகம்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed