யாகூ இந்தியாவில் 3 சதவீத ஊழியர்கள் வேலை நீக்கம்

December 11, 2008 at 5:40 AM Leave a comment

புதுடில்லி : பிரபல இன்டர்நெட் நிறுவனமான யாகூ, அதன் இந்திய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 3 சதவீதத்தினரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்திருக்கிறது. இப்போது நிலவும் பொருளாதார மந்த நிலையால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாகூ தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் அவர்களுக்கு 2,000 ஊழியர்கள் இருக்கிறார்கள். இதில் அதிகபட்சம் 3 சதவீதத்தினர் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் இதில் பெரும்பாலானவர்கள் மோசமான செயல் திறன் <உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள் என்றும், மந்தமான பொருளாதார சூழ்நிலையால் சிலர் மட்டுமே நீக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை யாகூவுக்கு பெங்களுருவில் ஒரு ‘ ஆர் அண்ட் டி ‘ சென்டர் இருக்கிறது. அதில்தான் அதிகமானவர்கள் வேலை பார்க்கிறார்கள். இந்தியாவில் மட்டும்தான் என்று இல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள யாகூவின் அலுவலகங்களில் மொத்தம் 1,500 பேர் வேலையில் இருந்து நீக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

Entry filed under: வணிகம்.

பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக இருக்கும் இந்தியாவில் பஸ்களை விற்கும் திட்டத்தை நிறுத்தியது ஹூண்டாய்

Leave a comment

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Visitors

  • 14,781 hits

Archives

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Recent Comments