Archive for December 10, 2008

குழந்தைகளும் தொலைக்காட்சியும்

பெற்றோர்களே! உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா? … படியுங்கள்.
குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது.
1.
சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.
2.
சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது.
இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும். (தூங்குவதைத்தவிர).
3.
சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான்.
4.
விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன.
மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
5.
ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்f;கின்றன.
குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்:
1. தொலைக்காட்சி மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.
2.
பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை. அவை விளம்பர நோக்கத்திற்காகத் தயார் செய்யப்படுகின்றன.
3.
தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது விளையாடுவது, பழகுவது, வீட்டுப்; பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை நிர்மூலமாக்குகிறது.
4.
குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், பார்வைப் பாதிப்பு ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன.
வன்முறையும் தொலைக்காட்சியும்
1. குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
2.
சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
3. 8000
கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.
4. 10,000
கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன.அவற்றைப் பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.
5.
பள்ளியில் சேருமுனனரே (Adults) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.
6.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.
7.
நினைப்பதை அடைய வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.
8.
நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குரியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.
9.
நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.
10.
தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு ,இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன.
ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.
தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படித் தீர்மானிப்பது ?:
1. எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது? எந்த நேரத்தில் அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள். அதாவது வீட்டுப் பாடம் படிக்கும் முன் , எழுதும் நேரத்திற்கு முன,. சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.
2.
ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
3.
பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.
4.
அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்.
5.
படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.
6.
வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம்.
7.
வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று. இது வீட்டுப் பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும். குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட உதவும்.
டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும்.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.
குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் (குழந்தைகளின்) மழலைச் சொல் கேளாதார்என்கிறார் வள்ளுவர். வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள் தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள்!
ஆபத்து! ஆபத்து!! மிகவும் ஆபத்து!!! உஷார்!
பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை அழித்து விடாதீர்கள்!
இரண்டு மூன்று வயதுடைய குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் ஆபத்தாகும். அந்த வயதில் தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடைகிறது.
அப்போது தொலைக் காட்சி பார்ப்பதால் மூளை வளர்ச்சி பாதிப்பு அடையும்.
நாலாபுறமும் பார்க்க வேண்டிய கண்கள் ஒரே இடத்தில் நிலை குத்தி நின்று விடுவதே இதற்குக் காரணம்.
மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதால், பள்ளிக்குச் செல்லும் போது பாடத்தில் கவனம் இருப்பதில்லை. சிந்தனை ஆற்றல் குறைகிறது. செயலாற்றலும் பாதிக்கப்படுகிறது. சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாடவேண்டிய வயதில் வயோதிகர்களைப் போல் இயக்கமில்லாமல் இருப்பார்கள்.
ஓடியாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து தொலைக் காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் உடலில் கொழுப்புச் சத்து சேருகிறது. இது எதிர்காலத்தில் குழந்தையின் உடல் நலனைப் பாதிக்கும். அதோடு இக்குழந்தைகள் முரட்டுக் குழந்தையாகளாகவும் இருப்பார்கள்.
அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இத்தனையும் தெரிய வந்திருக்கிறது.
(
ரீடர்ஸ் டைஜஸ்ட்லிருந்து)
பெற்றோர்களே! உஷார்!!
பெற்றோர்களே! இன்று நமது பிள்ளைகளின் நிலையைப் பார்த்தீர்களா ?
சதாவும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் தான் உட்கார்ந் திருக்கிறார்கள். சன் டிவியின் சுட்டிபோன்ற சேனல்கள்; வந்த பிறகு பிள்ளைகள் எங்கும் செல்வதில்லை. விளையாடுவதற்குக் கூட வெளியே போவதில்லை.
பக்கத்து வீடுகளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அழைத்தால் கூட போவதில்லை.ஏன் வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை.
சிலைகளாக
பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் உடையைக்கூட மாற்றாமல் அதன் முன் சிலைகளாக அமர்ந்துவிடுகிறார்கள். தேனீர், சாப்பாடு எல்லாம் அதன் முன்னால் தான்.உட்கார்ந்து உட்கார்ந்து அவர்கள் களைத்துப் போய் படுத்துக் கொண்டே தொலைக்காட்சியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
விளைவு? அவர்களின் உடல் ஆரோக்கியம் குன்றி வலுவிழந்து விடுகிறார்கள்.
கண்பார்வை போய் முதியவர்களை விட கனமான கண் கண்ணாடிகளை அணியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள். நடக்கவும் ஓடவும் செய்யாமல் சற்று தூரத்திற்கு நடப்பதற்கே இயலாது கால் வலிக்கிறது என்று கூறுகிறார்கள்.
குழந்தைகளின் நிலைமை எங்கோ சென்று விட்டது பார்த்தீர்களா?
குழந்தைகளின் எதிர்காலம்
?
ப்படிப் போனால் குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது? என்று சற்றேனும் சிந்தித்தீர்களா? அவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா?
உடல் வலுவிழந்து,மூளைத்திறன் குன்றி,சிந்திக்கும் ஆற்றல் இன்றி, செயலாற்றும் அனைத்து அபார ஆற்றல்களையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு படுவேகமாக அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.


எதிர்காலத்தில் இவர்களெல்லாம் பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம், அறிவியல் போன்ற உயர்தரப் படிப்பிற்குரிய எவ்விதத் தகுதியையும் பெறாது போய் விடுவார்கள்.


அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகிவிடாது இப்போதே குழந்தைகளைப் பேணி வளர்க்கவேண்டியதும், அதற்கான ஆவனைகள் செய்து அவர்களின் உடலும், உள்ளமும் வலுவும் ஆரோக்கியம் பெற்று கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்டு உயாந்தோங்குவதற்கும் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்போடு செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அலட்சியம் காட்டாதீர்!
இதிலே அலட்சியம் காட்டும் பெற்றோர் எதிர்காலத்தில் ஒளிவீச வேண்டிய தமது ஆற்றல் மிக்க சந்ததிகளை இப்போதே கண்களைக் கட்டி இருட்டிலே விட்டு அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிறார்கள்; என்பது தான் பொருள்.
எனவே! பேற்றோர்களே!குழந்தைகளை கருத்தூன்றி கண்காணியுங்கள்.
தொலைக்காட்சிப் பெட்டிகளை சிறிதுமூடிவையுங்கள். அவர்களுக்குரிய பயனுள்ள நிகழ்ச்சிகளை குறித்த நேரங்களில் பார்ப்பதற்கு ஆவனை செய்யுங்கள். கண்ட நேரங்களிலெல்லாம் டி.வி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும்,சினிமா படங்களையும் நீங்களும் பார்க்காமல் அவர்களுக்காக தியாகம் செய்யுங்கள்.
அவர்களை தொலை நோக்காகக் கொண்டே உங்கள் எல்லாச் செயல்களும் அமையவேண்டும்.
இது தான் அறிவார்ந்த பெற்றோர்கள் செய்யவேண்டிய கடமை. இதுவே அவர்களுக்கு அழகு.
குழந்தைகளை தூங்கவைப்பதற்கும், உணவூட்டுவதற்கும்,நாம் ஓய்வெடுப்பதற்கும் அவர்களை தொலைக்காட்சி முன் உட்கார வைத்து தாலாட்டி விட்டு நீங்கள் ஒதுங்கி விடாதீர்கள். அது அவர்களை பாழாக்கும் செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

December 10, 2008 at 5:17 PM Leave a comment

குறைந்த சம்பளத்தில் இந்திய பணியாளர்கள்: யாஹூ திட்டம்

சான்பிரான்ஸிஸ்கோ: மேலும் 1500 ஊழியர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது முன்னணி இணையதள நிறுவனமான யாஹூ. அதிக சம்பளம் வாங்கும் இப்போதைய பணியாளர்களில் பலரைநீக்கிவிட்டு, குறைந்த சம்பளத்துக்கு இந்தியர்களை அமர்த்தவும் அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம்தான் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்குவதாக அறிவித்தது யாஹூ.

15000 ஊழியர்களைக் கொண்டுள்ள யாஹூ இப்போது மேலும் 10 சதவிகித ஊழியர் குறைப்பில் இறங்கியுள்ளதாக சிலிக்கன் வேலியிலிருந்து வெளியாகும் ‘ஆல் திங்ஸ் டிஜிட்டல்’ எனும் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் தற்போது அதிக சம்பளம் வாங்கி வரும் அதன் பெரும்பாலான ஊழியர்களை நீக்கிவிட்டு, அதை விட குறைந்த சம்பளம் பெறத் தயாராக உள்ள இந்தியர்கள் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முடிவு செய்துள்ளது.

December 10, 2008 at 3:29 PM Leave a comment

சிமெண்ட் விலை ரூ.7 வரை குறைப்பு!

டெல்லி: நாட்டின் பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் விலைக் குறைப்பை அறிவித்துள்ளன. அதன்படி இன்று முதல் 1 மூட்டை சிமெண்ட்டுக்கு 7 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சென்வாட் வரியை 4 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து உற்பத்தி நிறுவனங்கள் விலைக் குறைப்பை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஸ்ரீ லட்சுமி சிமெண்ட் நிறுவனம் அதிகபட்சமாக ஒரு மூட்டைக்கு ரூ.7 குறைத்துள்ளது.

ஏசிசி நிறுவனம் ரூ.5-ம், அம்புஜா சிமெண்ட்ஸ் ரூ.6-ம் குறைப்பதாக அறிவித்துள்ளன.

ஜேகே, டால்மியா நிறுவனங்களும் தங்கள் சிமெண்டின் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.

December 10, 2008 at 12:31 PM Leave a comment

பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : 492 புள்ளிகள் உயர்ந்தன

மும்பை : தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், ஆயில், டெலிகாம், கேப்பிடல் குட்ஸ் பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டன.ரியல் எஸ்டேட், ஆட்டோ, பவர், பேங்கிங், டெக்னாலஜி பங்குகளும் அதிகம் வாங்கப்பட்டன. எண்ணிக்கை அடிப்படையிலும் அதிக பங்குகள் வர்த்தகத்திற்கு வந்தன. நிப்டி 2900 புள்ளிகளுக்கு மேலும் சென்செக்ஸ் 9600 புள்ளிகளுக்கும் மேலும் சென்றிருக்கிறது. ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற நிலையும் இந்திய பங்கு சந்தை ஏறி இருப்பதற்கு ஒரு காரணம். அமெரிக்காவில் ஆட்டோ நிறுவனங்களின் கடன்களை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று வந்த செய்தியால் அங்கு சந்தை முன்னேறி இருப்பதும் இந்திய பங்கு சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்கிறார்கள். ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், டி.எல்.எஃப், பார்தி ஏர்டெல், செய்ல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஓ.என்.ஜி.சி, விப்ரோ, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி., பெல், டாடா ஸ்டீல், எல் அண்ட் டி ஆகியவை இன்று நல்ல லாபம் பார்த்தன. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 492.28 புள்ளிகள் ( 5.37 சதவீதம் ) உயர்ந்து 9,654.90 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 144.25 புள்ளிகள் ( 5.18 சதவீதம் ) உயர்ந்து 2,928.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

December 10, 2008 at 12:18 PM Leave a comment

ரியோ டின்டோ 14,000 பேரை வேலை நீக்கம் செய்கிறது

லண்டன் : <உலகின் மூன்றாவது மிகப்பெரிய சுரங்க நிறுவனமான ரியோ டின்டோ, அதன் ஊழியர்களின் எண்ணிக்கையில் 14,000 ஐ குறைக்க முடிவு செய்திருக்கிறது. அடுத்த வருடத்திற்குள் இதை செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் அதற்கு இருக்கும் அதகப்படியான கடன் தொகையில் 10 பில்லியன் டாலர்களை குறைக்க அது திட்டமிட்டிருக்கிறது. பிரிட்டனில் அது மேற்கொள்ள இருந்த இரு சுரங்க திட்டங்களையும் ஒத்தி வைத்திருக்கிறது. பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் ரியோ டின்டோவின் உலக அளவிலான ஊழியர்கள் எண்ணிக்கை இப்போது 97,000 ஆக இருக்கிறதுற. சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் கடும் பொருளாதார நெருக்கடியில் இந்த நிறுவனமும் சிக்கியிருப்பதாக சொல்கிறார்கள்.

December 10, 2008 at 12:17 PM Leave a comment

நிதித்துறைக்கு தனியாக அமைச்சரை நியமிக்க மன்மோகன்சிங் கோரிக்கை

புதுடில்லி : மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப்பின் நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் உள்துறைக்கு மாற்றப்பட்டதால் இப்போது நிதித்துறையையும் பிரதமர் மன்மோகன் சிங்கே கூடுதலாக கவனித்து வருகிறார். ஆனால் மற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் மன்மோகன் சிங், நிதித்துறைக்கு தனியாக ஒரு கேபினட் அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று காங்.தலைவி சோனியாவிடம் சொல்லியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே காங்கிரஸின் திட்டம் என்னவாக இருந்தது என்றால், நிதித்துறைக்கு ஒரு ஜூனியர் அமைச்சரை மட்டும் புதிதாக நியமித்து விட்டு, அவரை மன்மோகன்சிங்கிற்கு உதவியாக இருக்க சொல்லலாம் என்று தான் இருந்தது. இப்போது மன்மோகன் சிங், தனியாக ஒரு கேபினட் அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று கோரியிருப்பதால், புதிய அமைச்சராக யாரை நியமிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். முன்னாள் கர்நாடகா முதல் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இப்போது மத்திய வர்த்தக அமைச்சராக இருக்கும் கமல்நாத், ராஜ்ய சபா மெம்பரும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னருமான சி.ரெங்கராஜன் ஆகியோருடைய பெயர்கள் நிதி அமைச்சருக்கு அடிபடுகின்றது. பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் செயல்பட்டு வரும் மன்மோகன்சிங், இன்னும் ஆறு துறைகளையும் கூடுதலாக கவனித்து வருகிறார். தனிநபர் துறை, பொதுமக்களின் கோரிக்கைகள்,குறைபாடுகள் மற்றும் பென்சன், ஆட்டோமிக் எனர்ஜி மற்றும் ஸ்பேஸ், திட்டம், நிலக்கரி, சுற்றுச்சூழல் மற்றும் காடுகள், தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை ஆகியவற்றையும் மன்மோகன் சிங்தான் கவனித்து வருகிறார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருக்கும் பிரியரஞ்சன்தாஸ் முன்சி, மாதக்கணக்கில் உடல் நலமில்லாமல் இருப்பதால் அவர் துறையையும் பிரதமரே பார்த்து வருகிறார். எஸ்.எம்.கிருஷ்ணா இப்போது பார்லிமென்ட் உறுப்பினராக இல்லாவிட்டாலும், அவர் ஒரு காங்கிரஸ்காரராக இருப்பதால் அவரை நிதி அமைச்சராக நியமித்து விடலாம். ஆறு மாதத்திற்குள் தேர்தலே வந்து விடும் என்பதால் அதுவரை அவரே தொடர்ந்து அமைச்சராக இருக்க முடியும். கமல்நாத்தும் ஒரு காங்கிரஸ்காரராக இருப்பதால் அவரையும் நியமிக்கலாம். அரசியல் பின்னணி எதுவும் இல்லை என்றாலும் 1992 முதல் 1997 வரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்து அனுபவம் பெற்றிருக்கும் சி.ரெங்கராஜனையும் நியமிக்கலாம் என்று யோசிக்கிறார்கள்.

December 10, 2008 at 12:16 PM Leave a comment

உலக அளவில் விமான கம்பெனிகள் கடும் நஷ்டமடைகின்றன

ஜெனிவா : கடந்த 50 வருடங்களாக இல்லாத அளவாக, 2009ம் ஆண்டில் உலக அளவிலான விமான கம்பெனிகள் கடும் நஷ்டமடையும் என்றும், அந்த துறையில் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கில் வேலை இழப்பர் என்றும் ஐ.ஏ.டி.ஏ தெரிவித்திருக்கிறது. 2009ல் விமான கம்பெனிகளின் நிலை குறித்து அது வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோல் விலை குறைந்திருந்தாலும் 2009ம் வருடத்தில் 2.5 பில்லியன் டாலர்கள் நஷ்டமடையும் என்று தெரிவித்திருக்கிறது. 2008ல் ஐரோப்பிய விமான கம்பெனிகள் 1 பில்லியன் டாலர்கள் வரை நஷ்டமடையும் என்றும், ஆசிய – பசிபிக் விமான கம்பெனிகள் 1.1 பில்லியன் டாலர்கள் வரை நஷ்டமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 230 சர்வதேச விமான கம்பெனிகளை அங்கத்தினர்களாக கொண்டிருக்கும் ஐ.ஏ.டி.ஏ.,யின் டைரக்டர் ஜெனரல் ஜியோவான்னி பிசினானி இது குறித்து தெரிவிக்கையில் , கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவில் விமான கம்பெனிகள் இப்போது நஷ்டம் அடைந்து வருகின்றன என்றார்.

December 10, 2008 at 12:15 PM Leave a comment

வேலை இழப்பைத் தடுக்க முடியாத பிரதமரின் நிதிச் சலுகைகள்!

டெல்லி: பிரதமர் அளித்துள்ள 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதிச் சலுகைகள் மற்றும் கடன் உதவிகளாலும் கூட இந்திய நிறுவனங்களில் துவங்கியுள்ள வேலை நீக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அடுத்த மூன்றே மாதங்களில் இந்தியாவின் உற்பத்தித் துறையில் 10 முதல் 30 சதவிகிதம் வரை வேலை இழப்பு ஏற்படும் என இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள 200- சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது எப்ஐசிசிஐ.

குறிப்பாக ஜவுளித்துறை, உலோகம், தோல் பொருள் உற்பத்தி மற்றும் ரசாயனத் தொழிற்சாலைகளில் 50 சதவிகிதம் வரை வேலை நீக்கம் உறுதி என அபாய மணி அடித்துள்ளது இந்த அமைப்பு. அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நிறுத்துவதைத் தவிர நிறுவனங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

காரணம் ஜவுளி மற்றும் தோல் பொருள் உற்பத்தித் துறையில் கடந்த செப்டம்பர் மாத்ததிலிருந்து பெரும் நஷ்டம் நிலவுவதாகவும், இன்னும் சில ஆண்டுகளுக்கு இதனைச் சரி செய்ய முடியாது என்றும் எப்ஐசிசிஐ கூறியுள்ளது. அனைத்துப் பொருள்களின் ஏற்றுமதியும் 60 சதவிகிதம் வரை குறைந்து விட்டதால், அந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட உற்பத்தி குறைப்பு மற்றும் நிர்வாகச் செலவுகளை பெருமளவு குறைப்பதில் தீவிரம் காட்ட வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்கிறது எப்ஐசிசிஐ.

பிரதமர் ரூ.75 ஆயிரம் கோடிக்கும் மேல் பல பொருளாதார நடவடிக்கைகளை அறிவித்திருந்தாலும், இன்னும் கூட வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம் 8 முதல் 10 சதவிகிதமாகவே உள்ளதால் கடன் சுமையும் குறையாமல் இருப்பதாக பெரும்பாலான நிறுவனங்கள் புகார் கூறியுள்ளன.

December 10, 2008 at 7:01 AM Leave a comment

யாஹூ சி.இ.ஓ. ஆகிறார் அருண் சரீன்

நியூயார்க்: வோடோபோன் குழுமத் தலைவர் பதவியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற அருண் சரீன், யாஹூ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. புதிய பதவியை ஏற்பது குறித்து அவர் பரிசீலித்து வருகிறாராம்.

யாஹூ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, புதிய தலைமை செயலதிகாரியை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். தற்போது அவர்கள் சரீன் பெயரை இறுதி செய்து வைத்துள்ளனர். இன்னும் சில வாரங்களில் அவரது பெயர் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.

அருண் சரீன் தவிர வேறு சில பெயர்களும் இறுதிக் கட்டப் பரிசீலனையில் உள்ளன. இருப்பினும் சரீனை தேர்வு செய்ய யாஹூ முடிவு செய்யும் எனத் தெரிகிறது. ஜூலை மாதம்தான் சரீன், வோடோபோன் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார்.

கடந்த வாரம் யாஹூ நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜெர்ரி யங் தலைமை செயலதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார் என்பது நினைவிருக்கலாம்.

யாஹூ நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில் யங் தலை உருண்டது. யங்தான், மைக்ரோசாப்ட் டீலை குழப்பி விட்டார் என்பது யாஹூ நிறுவனத்திற்குள் ஏற்பட்ட குற்றச்சாட்டு. இதையடுத்தே தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார் யங் என்பது நினைவிருக்கலாம்.

December 10, 2008 at 6:12 AM Leave a comment

சோனியும் ஆட்குறைப்பில் ஈடுபடுகிறது

பொருளாதார சரிவில் சர்வதேச அளவில் பல பெரிய நிறுவனங்கள் சிக்கி தவிக்கின்றன. தங்களின் நிறுவன செலவினங்களை குறைக்கும் நோக்கோடு ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஜப்பானின் பெரிய நிறுவனமான சோனி 8000 பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
 
அமெரிக்காவில் இது வரை ஆட்குறைப்பின் மூலம் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளனர். இந்தியாவிலும் பலர் வேலையிழந்துள்ளனர். தற்போது ஜப்பானின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சோனி கார்ப்பரேஷன் தனது 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்திற்கு 1.1பில்லியன் டாலர் செலவு குறையும் என்று அந்நிறுவன செய்தி தெரிவித்துள்ளது. சோனி நிறுவனத்தில் பணி புரிபவர்களின் எண்ணிக்கை 1,60,000 ஆகும். பொதுவாக தற்போது அனைத்து தரப்பு நிறுவனங்களின் பொருட்கள் சந்தையில் விற்பனை குறைந்து வருவதும், பொருள் தயாரிப்புக்கு தேவைப்படும் உதிரிபாகங்களின் விலை ஏற்றமும் பல்வேறு நிறுவனங்களுக்கு செலவுகளை அதிகரித்து வருகின்றது. இதனால் ஊழியர்களை பணி நீக்கம் செய்து நிறுவனங்கள் செலவுகளை குறைக்கின்றன. ஊழியர்களை குறைப்பது மட்டுமல்லாமல் சில தொழிற்சாலைகளையும் மூட சோனி முடிவெடுத்துள்ளது.

December 10, 2008 at 6:10 AM Leave a comment

Older Posts


Visitors

  • 14,717 hits

Archives

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Recent Comments