அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்

December 9, 2008 at 6:17 AM Leave a comment

சென்னை: அரிசி, மளிகைப் பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. சமீபத்தில் அரிசி விலை குறைக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், வெளிச் சந்தையில் விலை குறைக்கப்படவில்லை.

அரிசி விலை மட்டுமின்றி, மிளகாய், சர்க்கரை, புளி உள் ளிட்ட மளிகைப் பொருட்களும் விலை உயர்வை சந்தித்துள்ளன. பருப்பு மற்றும் எண்ணெய் வகைகள் விலையில் சரிவு காணப்படுகிறது. அனைத்து பருப்புகளும், கடந்த சில மாதங்களாக, ஒரு கிலோ 50 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. தற்போது, பருப்பு வகைகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

துவரம் பருப்பு 100 கிலோ கொண்ட மூட்டை விலை 4,900 ரூபாயிலிருந்து, 4,500 ஆக குறைந்துள்ளது. தான்சானியா, பர்மா துவரம் பருப்பு 4,500லிருந்து 4,000க்கு குறைந்துள்ளது.

துவரம் பருப்பு ஒரு கிலோ 45, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உளுத்தம் பருப்பு முதல் ரகம் 100 கிலோ 4,700 லிருந்து 4,300க்கும், இரண்டாம் ரகம் 4,500லிருந்து 4,000க்கும் விற்கப்படுகிறது. உளுந்து ஒரு கிலோ 45, 40 ரூபாய்க்கு கிடைக்கிறது. பாசிப்பருப்பு 4,600லிருந்து 4,200 ஆக குறைந்துள்ளது. மும்பை கடலைப் பருப்பு 4,600லிருந்து 4,200 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் 3,600லிருந்து 3,200 ஆகவும் குறைந்துள்ளது. கடலைப் பருப்பு ஒரு கிலோ 43 மற்றும் 33 ரூபாய்க்கு, சில்லரை விற்பனையகங்களில் கிடைக்கிறது. ஆன்- லைன் வர்த்தகத்தின் தாக்கத்தால் தான், பருப்பு வகைகள் விலை கடுமையாக உயர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து, தற்போது, பருப்பு வகைகள் எடுக்கப்பட்டதால், விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும், பருப்புகள் அறுவடை செய்யப் பட்டு விரைவில் புதிய பருப்புகள் வரும் பட்சத்தில் விலை மேலும் குறையும் என்றும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சர்க்கரை விலை, கடந்த வாரத்தை விட, இந்த வாரம் விலை சற்று உயர்ந்துள்ளது. சர்க்கரை 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை விலை, 1,825லிருந்து 1,900 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெளிச்சந்தையில் 19லிருந்து 21 ரூபாய் வரையில் ஒரு கிலோ சர்க்கரை விற்கப்படுகிறது.

கனமழை காரணமாக, கரும்பு அறுவடை செய்யப்பட்டு, ஆலைக்கு கொண்டு செல்வதிலும், சர்க்கரை எடுப்பதிலும் உள்ள தாமதத்தால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மளிகைப் பொருட்களில், மிளகாய் தான், அதிகளவில் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம், ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஏ.சி., ரக மிளகாய், தற்போது, 120 ஆக விலை அதிகரித்துள்ளது. இரண்டாம் ரகம் 70 லிருந்து 100 ரூபாயாகவும், நீளமான மிளகாய் 60லிருந்து 90 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.

புளியின் விலையும் உயர்ந்துள்ளது. முதல் ரகப் புளி, ஒரு கிலோ 40லிருந்து 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. இரண்டாம் ரகம், ஒரு கிலோ 25லிருந்து, 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜனவரி மாதத்திற்கு பின், விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தனியா, பூண்டு ஆகியவை, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தில் அதிகளவு விளைந்துள்ளன. இதன் காரணமாக, விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ தனியா 110லிருந்து 90 ரூபாயாகவும், பூண்டு முதல்ரகம் 50லிருந்து 25 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் 25லிருந்து 15 ரூபாயாகவும் விலை குறைந்துள்ளது. மைதா, ரவை, ஆட்டா ஆகியவற்றின் விலை, 90 கிலோ கொண்ட மூட்டைக்கு 50லிருந்து 75 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஏலக்காய் ஒரு கிலோ 550லிருந்து 700 ரூபாயாகவும், லவங்கம் ஒரு கிலோ 250லிருந்து 350 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.

பாமாயில், ஒரு லிட்டர் 60லிருந்து 34 ரூபாயாக குறைந் துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் 75லிருந்து 65 ரூபாயாகவும், கடலை எண்ணெய் 74லிருந்து 64 ரூபாயாகவும், தேங்காய் எண்ணெய் முதல்ரகம் 90 லிருந்து 80 ரூபாயாகவும், இரண்டாவது ரகம் 70லிருந்து 60 ரூபாயாக குறைந்துள்ளது.

அக்மார்க் நல்லெண்ணெய் விலை 130 லிருந்து 110 ரூபாயாகவும், சாதா நல்லெண்ணெய் 70 லிருந்து 60 ரூபாயாகவும், வனஸ்பதி டால்டா 60 ரூபாயிலிருந்து 47 ரூபாயாகவும் விலை குறைந்துள்ளது.

மளிகைப் பொருட்களின் விலையில் சிறிது மாற்றம் காணப்பட்டாலும், மேலும் இவற்றின் விலை குறைவது, வரத்தை பொறுத்தது தான் என்று கூறப்படுகிறது. இயற்கை சீற்றங்கள் உற்பத்தியை குறைக்கும் நிலையில், மீண்டும் விலை குறைவதற்கான வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

 

மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சொரூபன் கூறியதாவது: ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து, பருப்பு உள்ளிட்ட சில பொருட்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, மளிகைப் பொருட்கள் அனைத்தையும் அதிலிருந்து நீக்க வேண்டும். அப்போது தான், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், இன்னும் விலை குறையும். மிளகாய் விலையை பொறுத்தவரையில் ஏப்ரல் மாதம் வரை, விலை குறைய வாய்ப்பில்லை. தமிழகத்தில் மிளகாய் அதிகம் விளையும் பகுதிகளில், பயிரிடப்பட்டிருந்த மிளகாய் செடிகள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி, அழுகி விட்டன. இதனால், மிளகாய் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. இனி மீண்டும் பயிரிடப்படும் பட்சத்தில் அடுத்த மார்ச் மாதத்தில் தான் புதிய மிளகாய் கிடைக்கும். எண்ணெய் விலை தற்போது குறைந்துள்ளது. பாமாயில், மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. சீனா மற்றும் இந்தியாவில், பாமாயில் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டது. சீனா, பாமாயில் உற்பத்தியை துவக்கியுள்ளதை அடுத்து, இந்திõவில் சீன எண்ணெயும் இறக்குமதி செய்யப்படு கிறது. இதனால் தான் விலை குறைந்துள்ளது.

எண்ணெய் விலை குறைந்தாலும், அதை மூலப் பொருளாக பயன்படுத்தி செய்யப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள் விலை குறையவில்லை. இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள் மூலப் பொருட்கள் விலை உயர்வையே காரணமாக கூறி வருகின்றனர். இவ்வாறு சொரூபன் கூறினார்.

Entry filed under: வணிகம்.

நெருக்கடியிலும் இந்திய வங்கிகள் சளைக்கவில்லை பங்கு சந்தை, கார்பரேட் பாண்ட்களில் ரூ.31,000 கோடி முதலீடு செய்யும் எல்.ஐ.சி

Leave a comment

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Visitors

  • 14,781 hits

Archives

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Recent Comments