Archive for December 9, 2008

கார்ப்பரேஷன் வங்கியுடன் இணைந்து கிரெடிட் கார்டு வழங்கும் எல்.ஐ.சி

நாக்பூர்: கார்ப்பரேஷன் வங்கியுடன் இணைந்து எல்.ஐ.சி. நிறுவனம் கிரெடிட் கார்டு துறையில் களம் இறங்குகிறது.

இதுகுறித்து எல்.ஐ.சியின் மூத்த கோட்ட மேலாளர் பி.பி.குஜார் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கார்ப்பரேஷன் வங்கியில் எல்.ஐ.சியின் பங்கு 28 சதவீதம் உள்ளது. எனவேதான் கிரெடிட் கார்டு துறையில் ஈடுபட கார்ப்பரேஷன் வங்கியைத் தேர்வு செய்தோம்.

கிரெடிட் கார்டு திட்டம் தொடங்கும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

சமீபத்தில் ஜீவன் ஆஸ்தா என்ற திட்டத்தை எல்.ஐ.சி. நிறுவனம் தொடங்கியது. நிலையற்ற பங்கு வர்த்தகம் குறித்து அச்சப்படும் மக்களுக்கு இந்த ஜீவன் ஆஸ்தா திட்டம் கை கொடுக்கும்.இந்த பாலிசியை ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு எடுக்கலாம். இதில் உச்சகட்ட தொகை எதுவும் கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்றார் அவர்.

December 9, 2008 at 5:23 PM Leave a comment

வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஜப்பான் பொருளாதாரம்

டோக்கியோ : இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிதி அறிக்கையை பார்த்ததும் ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பது நன்றாக தெரிந்து விடும். அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜப்பானில், எதிர்பார்த்ததை விட பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஜப்பானின் பொருட்களுக்கு உலக அளவில் டிமாண்ட் குறைந்து விட்டதாலும் அந்நாட்டு கரன்சியான யென் னின் மதிப்பு பெருமளவு உயர்ந்து விட்டதாலும் நிறைய தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. நிறைய ஊழியர்கள் லே – ஆப் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே அந்நாட்டு பொருளாதாரம் மோசமாகிக் கொண்டுதான் வந்திருக்கிறது. அங்குள்ள பல சிறிய கம்பெனிகள் ஒவ்வொன்றாக திவாலாகிக்கொண்டிருக்கின்றன. சோனி, டொயோட்டா போன்ற நிறுவனங்கள் கடும் நிதி சிக்கலில் திணறிக்கொண்டிருக்கின்றன என்கிறார்கள். இப்போதைக்கு பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பெல்லாம் எப்போது ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்பதுதான்.

December 9, 2008 at 5:21 PM Leave a comment

8,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குகிறது சோனி

டோக்கியோ : பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான சோனி, அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 4 சதவீதத்தினரை ( 8,000 பேர் ) குறைக்க திட்டமிட்டிருக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் சோனி, இதன் மூலம் 1.1 பில்லியன் டாலர்களை ( சுமார் 5,390 கோடி ரூபாய் ) மிச்சப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. மோசமான நிலையில் இருக்கும் அதன் எலக்ட்ரானிக் துறையில்தான் ஊழியர்கள் குறைக்கப்படுகிறார்கள். <உலக அளவில் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டதில் இருந்து, ஆசிய நிறுவனம் ஒன்று 8,000 ஊயியர்களை வேலையில் இருந்து நீக்குவது இதுவே முதல்முறை என்கிறார்கள். போர்டபில் மியூசிக் துறையில் ஆப்பில் ‘ ஐபாட் ‘ உடன் போட்டி போட முடியாமல் பின்தங்கிய சோனி, ஃபிளாட் பேனல் டி.வி. விற்பனையிலும் பின்தங்கி விட்டது. இதனால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்ட சோனி நிறுவனத்தின் பங்கு மதிப்பு இந்த வருடத்தில் மட்டும் 70 சதவீதம் குறைந்திருக்கிறது. இப்போது சோனி 8,000 பேரை வேலையில் இருந்து அனுப்பினாலும் உ<லகம் முழுவதும் இருக்கும் அதன் நிறுவனங்களில் 1,86,000 ஊழியர்கள் வேலையில் இருப்பார்கள். ஊழியர்கள் எண்ணிக்கையில் 4 சதவீதத்தை குறைப்பதன் மூலம், அதன் 57 தயாரிப்பு கூடத்தில் 30 சதவீத தயாரிப்பை குறைக்க சோனி முடிவு செய்திருக்கிறது.

December 9, 2008 at 5:19 PM Leave a comment

கார்களின் விலை ரூ.76,000 வரை குறைகிறது

புதுடில்லி : கார் பாகங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த எஸ்சைஸ் டூட்டியில் 4 சதவீதத்தை குறைப்பதாக மத்திய அரசு ஞாயிறு அன்று அறிவித்ததையடுத்து, கார்களின் விலையை ரூ.6,000 இலிருந்து ரூ.76,000 வரை குறைக்கப்படுவதாக கார் தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். மாருதி சுசுகி 800 இன் விலையை ரூ.6,000 குறைக்கப்படுவதாக அந்த கம்பெனி அறிவித்திருக்கிறது. அதன் எஸ்.எக்ஸ்.4 மற்றும் டிசையர் மாடலின் விலை ரூ.20,000 குறைகிறது. ஆல்டோ, வேகன் ஆர், மற்றும் ஜென் ஆகிய மாடல்கள் ரூ.9,000 முதல் ரூ.17,000 வரை குறைகிறது. சமீபத்தில் வெளிவந்த ஸ்டார் மாடலின் விலையும் குறைக்கப்படுகிறது. மத்திய அரசு சென்வாட்டை 4 சதவீதம் குறைத்திருப்பதால் கமர்சியல் வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், மற்றும் இரு சக்கர வாகனங்கள் விலை குறையும் என்று மாருதி சுசுகி இந்தியாவின் சேர்மன் பர்கவா தெரிவித்தார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் கார்களின் விலையை ரூ.8,000 முதல் ரூ.22,000 வரை குறைக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் ரூ.8,800 முதல் ரூ.44,700 வரை விலையை குறைக்கிறது. மாடல்களை பொருத்து விலை குறைக்கப்படும் என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் வைஸ் பிரசிடென்ட் அர்விந்த சேக்ஸ்சேனா தெரிவித்தார். டொயோட்டா கார்களின் விலை ரூ.33,000 முதல் ரூ.76,000 வரை குறைக்கப்படுகிறது. மிட்சுபிஷியின் விலை ரூ.25,000 குறைகிறது.கமர்சியல் வாகன தயாரிப்பாளரான அசோக் லேலாண்ட், அதன் டிரக் விலையை ரூ.32,000 இலிருந்து ரூ.35,000 வரை குறைக்கிறது. இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் விரைவில் விலை குறைப்பை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

December 9, 2008 at 5:18 PM Leave a comment

இந்திய அரசு அதிரடி சலுகை: 3லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

 சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சி பல்வேறு நாடுகளில் பல சிக்கல்களை உருவாக்கி வருகிறது

. இந்தியாவிலும் இந்த பொருளாதார சுனாமி பலவிதங்களில் மக்களை பாதித்து வருகிறது. வேலையிழப்பு, உற்பத்தி பாதிப்பு, ஏற்றுமதி குறைவு, தொழில் முடக்கம், விலைவாசி உயர்வு என்று மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

மந்தமாகி சிக்கலைச் சந்திக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த, அரசு மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை பல்வேறு வகைகளில் நேற்று ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தது. கம்பெனிகளைத் திருப்திப்படுத்த, ‘சென்வாட்’ வாட் வரி 4 சதவீதம் குறைப்பு, ஏற்றுமதிக்குச் சலுகை, வீட்டுக்கடன் வட்டிவிகிதம் குறைய நடவடிக்கை, ரியல் எஸ்டேட் துறைக்குப் பணப்புழக்க பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவி என்று பல அடுக்குகளாக உதவியிருக்கிறது. வர்த்தக வங்கிகள் பணம்புரட்ட வசதியாக, ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைகளை அடுத்து நேற்று இம்முடிவு எடுக்கப்பட்டது. தற்போது நிதிப் பொறுப்பைக் கவனிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா மேற்பார்வையில், இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டிலும், அதற்கு அடுத்த ஆண்டிலும் பொருளாதார ஊக்குவிப்பு தேவை என்ற அடிப்படையில் இந்தச் சலுகைகள் நேற்று அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த இரு மாதங்களாக ஏற்றுமதித் தொழில் பெரிதும் பாதிக் கப்பட்டது. அதற்காக ஜவுளித் தொழில், கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆகிய துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்த, சலுகைகள், ஏற்றுமதிச் சலுகைகள் வழங்கப்படும்.

கார் விலை குறையும்: மத்திய அரசு அறிவித்த 4 சதவீத சென்வாட் குறைப்பு மாருதி உட்பட எல்லா தயாரிப்பு கார்கள் விலை குறைய உதவும். இந்த அறிவிப்பை அடுத்து மாருதி நிறுவனம் தன் தயாரிப்பு கார்கள் விலை குறையும் என்று அறிவித்திருக்கிறது. அதேபோல, சிமென்ட் வரிச்சலுகையால் அதன் விலையும் குறையும். இரும்பு மற்றும் தொழில் துறையை ஊக்குவிக்க, 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இரும்பு உருக்கு ஏற்றுமதி மீதான வரியும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜிண்டால் நிறுவனத் தலைவர் சாஜன் ஜிண்டாலோ, ‘எங்கள் தொழிலுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்குவிப்புத் தொகை எதிர்பார்த்தோம்’ என்கிறார். அதேபோல, இந்தியா அடிப்படைக் கட்டமைப்பு பைனான்ஸ் நிறுவனம் வரியில்லா பத்திரங்கள் மூலம், 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவன வங்கிகளுக்குத் தரப்படும் நிதிச் சலுகை மூலம் கம்பெனிகள், ரியல் எஸ்டேட் தொழில்களுக்கு கடன் தர வசதியாகும். பொருளாதாரத்தில் சுணக்கம் நீங்கி சூடுபிடிக்க, அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம், திட்டம் மற்றும் திட்டமில்லா செலவினங்களுக்கு வரக்கூடிய நிதியாண்டுக்காலமான நான்கு மாதங்களில் மூன்று லட்சம் கோடி ரூபாய் செலவிட வழிகாணப்படும். ‘இது மிகவும் சிறப்பான ஊக்குவிப்பு நடவடிக்கை, பலதுறைகளிலும் செலவழிக்கும் வகையில் இந்த நிதி வழங்கப்படுகிறது. மத்திய அரசு தரும் ‘சென்வாட்’ சலுகையில் மட்டும் அரசுக்கு நடப்பாண்டில் 8,700 கோடி ரூபாய் இழப்பீடு’ என்று, திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் நிருபர்களிடம் கூறினார்.

December 9, 2008 at 6:21 AM Leave a comment

அள்ள அள்ள கொட்டும் ரயில்வே லாபம்

இந்த ஆண்டில் மட்டும் ரயில்வே துறையின் லாபம் ஒரு லட்சம் கோடியை தாண்டும் என்று ரயில்வே துறை அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். நாட்டில் பல துறைகள் நலிந்து வரும் நேரத்தில் ரயில்வே துறை மட்டும் அதிக லாபம் ஈட்டி வரும் துறையாக விளங்கிவருகிறது.

மத்திய

ரயில்வே அமைச்சர் லாலு தெரிவிக்கையில்நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே துறையில் லாபம் இல்லாமல் இயங்கிக்கொண்டு இருந்தது. நான் இந்த துறையில் பொறுப்பு எடுத்த ஆண்டிலிருந்து தொடர்ந்து லாபம் மட்டுமே தரும் முதன்மை துறையாக ரயில்வே விளங்கி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் ரயில்வே துறைக்கு 1 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் இருந்தும் ரயில்வே நல்ல வருமானம் ஈட்டி வருகிறது. இது மிகப்பெரிய சாதனையாகும்என்றார். பாட்னாவில் ரயில் நிலைய அலுவலகங்களையும், புதிய ரயில் போக்குவரத்து தடங்களையும் தொடங்கிவைத்து இதை தெரிவித்தார். விமான பயணக்கட்டணம் அதிகரிப்பு காரணமாக பலர் ரயிலில் முதல் வகுப்பு பயணத்தை விரும்பி வருவதால் அதன்மூலமாக லாபம் பலமடங்கு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

December 9, 2008 at 6:19 AM Leave a comment

பங்கு சந்தை, கார்பரேட் பாண்ட்களில் ரூ.31,000 கோடி முதலீடு செய்யும் எல்.ஐ.சி

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி., பங்கு சந்தை மற்றும் கார்பரேட் பாண்ட்களில் ரூ.31,000 கோடியை முதலீடு செய்கிறது. இன்னும் நான்கு மாதங்களில், அதாவது இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் இந்த தொகை முதலீடு செய்யப்படும் என்று எல்.ஐ.சி., உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பங்கு சந்தையில் ரூ.11,000 கோடியையும், மாற்ற முடியாத டிபெஞ்சர்களில் ரூ.20,000 கோடியையும் எல்.ஐ.சி.முதலீடு செய்கிறது. இந்திய முதலீட்டு சந்தையில் இருந்து வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக முதலீட்டை திரும்ப பெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், எல்.ஐ.சி., இதில் முதலீடு செய்ய முன் வந்துள்ளது. இது தவிர கவர்மென்ட் செக்யூரிட்டிகளிலும் ரூ.18,000 கோடியை எல்.ஐ.சி. முதலீடு செய்ய இருக்கிறது. இதன் படி இந்த நிதி ஆண்டிற்குள் ரூ.49,000 கோடியை எல்.ஐ.சி. முதலீடு செய்கிறது. கடந்த 8 மாதங்களில் கேப்பிட்டல் மார்க்கெட்டில் ஏற்கனவே எல்.ஐ.சி., ரூ.1,02,476 கோடியை முதலீடு செய்திருக்கிறது.

December 9, 2008 at 6:18 AM Leave a comment

அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்

சென்னை: அரிசி, மளிகைப் பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. சமீபத்தில் அரிசி விலை குறைக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், வெளிச் சந்தையில் விலை குறைக்கப்படவில்லை.

அரிசி விலை மட்டுமின்றி, மிளகாய், சர்க்கரை, புளி உள் ளிட்ட மளிகைப் பொருட்களும் விலை உயர்வை சந்தித்துள்ளன. பருப்பு மற்றும் எண்ணெய் வகைகள் விலையில் சரிவு காணப்படுகிறது. அனைத்து பருப்புகளும், கடந்த சில மாதங்களாக, ஒரு கிலோ 50 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. தற்போது, பருப்பு வகைகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

துவரம் பருப்பு 100 கிலோ கொண்ட மூட்டை விலை 4,900 ரூபாயிலிருந்து, 4,500 ஆக குறைந்துள்ளது. தான்சானியா, பர்மா துவரம் பருப்பு 4,500லிருந்து 4,000க்கு குறைந்துள்ளது.

துவரம் பருப்பு ஒரு கிலோ 45, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உளுத்தம் பருப்பு முதல் ரகம் 100 கிலோ 4,700 லிருந்து 4,300க்கும், இரண்டாம் ரகம் 4,500லிருந்து 4,000க்கும் விற்கப்படுகிறது. உளுந்து ஒரு கிலோ 45, 40 ரூபாய்க்கு கிடைக்கிறது. பாசிப்பருப்பு 4,600லிருந்து 4,200 ஆக குறைந்துள்ளது. மும்பை கடலைப் பருப்பு 4,600லிருந்து 4,200 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் 3,600லிருந்து 3,200 ஆகவும் குறைந்துள்ளது. கடலைப் பருப்பு ஒரு கிலோ 43 மற்றும் 33 ரூபாய்க்கு, சில்லரை விற்பனையகங்களில் கிடைக்கிறது. ஆன்- லைன் வர்த்தகத்தின் தாக்கத்தால் தான், பருப்பு வகைகள் விலை கடுமையாக உயர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து, தற்போது, பருப்பு வகைகள் எடுக்கப்பட்டதால், விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும், பருப்புகள் அறுவடை செய்யப் பட்டு விரைவில் புதிய பருப்புகள் வரும் பட்சத்தில் விலை மேலும் குறையும் என்றும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சர்க்கரை விலை, கடந்த வாரத்தை விட, இந்த வாரம் விலை சற்று உயர்ந்துள்ளது. சர்க்கரை 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை விலை, 1,825லிருந்து 1,900 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெளிச்சந்தையில் 19லிருந்து 21 ரூபாய் வரையில் ஒரு கிலோ சர்க்கரை விற்கப்படுகிறது.

கனமழை காரணமாக, கரும்பு அறுவடை செய்யப்பட்டு, ஆலைக்கு கொண்டு செல்வதிலும், சர்க்கரை எடுப்பதிலும் உள்ள தாமதத்தால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மளிகைப் பொருட்களில், மிளகாய் தான், அதிகளவில் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம், ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஏ.சி., ரக மிளகாய், தற்போது, 120 ஆக விலை அதிகரித்துள்ளது. இரண்டாம் ரகம் 70 லிருந்து 100 ரூபாயாகவும், நீளமான மிளகாய் 60லிருந்து 90 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.

புளியின் விலையும் உயர்ந்துள்ளது. முதல் ரகப் புளி, ஒரு கிலோ 40லிருந்து 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. இரண்டாம் ரகம், ஒரு கிலோ 25லிருந்து, 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜனவரி மாதத்திற்கு பின், விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தனியா, பூண்டு ஆகியவை, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தில் அதிகளவு விளைந்துள்ளன. இதன் காரணமாக, விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ தனியா 110லிருந்து 90 ரூபாயாகவும், பூண்டு முதல்ரகம் 50லிருந்து 25 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் 25லிருந்து 15 ரூபாயாகவும் விலை குறைந்துள்ளது. மைதா, ரவை, ஆட்டா ஆகியவற்றின் விலை, 90 கிலோ கொண்ட மூட்டைக்கு 50லிருந்து 75 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஏலக்காய் ஒரு கிலோ 550லிருந்து 700 ரூபாயாகவும், லவங்கம் ஒரு கிலோ 250லிருந்து 350 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.

பாமாயில், ஒரு லிட்டர் 60லிருந்து 34 ரூபாயாக குறைந் துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் 75லிருந்து 65 ரூபாயாகவும், கடலை எண்ணெய் 74லிருந்து 64 ரூபாயாகவும், தேங்காய் எண்ணெய் முதல்ரகம் 90 லிருந்து 80 ரூபாயாகவும், இரண்டாவது ரகம் 70லிருந்து 60 ரூபாயாக குறைந்துள்ளது.

அக்மார்க் நல்லெண்ணெய் விலை 130 லிருந்து 110 ரூபாயாகவும், சாதா நல்லெண்ணெய் 70 லிருந்து 60 ரூபாயாகவும், வனஸ்பதி டால்டா 60 ரூபாயிலிருந்து 47 ரூபாயாகவும் விலை குறைந்துள்ளது.

மளிகைப் பொருட்களின் விலையில் சிறிது மாற்றம் காணப்பட்டாலும், மேலும் இவற்றின் விலை குறைவது, வரத்தை பொறுத்தது தான் என்று கூறப்படுகிறது. இயற்கை சீற்றங்கள் உற்பத்தியை குறைக்கும் நிலையில், மீண்டும் விலை குறைவதற்கான வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

 

மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சொரூபன் கூறியதாவது: ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து, பருப்பு உள்ளிட்ட சில பொருட்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, மளிகைப் பொருட்கள் அனைத்தையும் அதிலிருந்து நீக்க வேண்டும். அப்போது தான், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், இன்னும் விலை குறையும். மிளகாய் விலையை பொறுத்தவரையில் ஏப்ரல் மாதம் வரை, விலை குறைய வாய்ப்பில்லை. தமிழகத்தில் மிளகாய் அதிகம் விளையும் பகுதிகளில், பயிரிடப்பட்டிருந்த மிளகாய் செடிகள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி, அழுகி விட்டன. இதனால், மிளகாய் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. இனி மீண்டும் பயிரிடப்படும் பட்சத்தில் அடுத்த மார்ச் மாதத்தில் தான் புதிய மிளகாய் கிடைக்கும். எண்ணெய் விலை தற்போது குறைந்துள்ளது. பாமாயில், மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. சீனா மற்றும் இந்தியாவில், பாமாயில் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டது. சீனா, பாமாயில் உற்பத்தியை துவக்கியுள்ளதை அடுத்து, இந்திõவில் சீன எண்ணெயும் இறக்குமதி செய்யப்படு கிறது. இதனால் தான் விலை குறைந்துள்ளது.

எண்ணெய் விலை குறைந்தாலும், அதை மூலப் பொருளாக பயன்படுத்தி செய்யப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள் விலை குறையவில்லை. இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள் மூலப் பொருட்கள் விலை உயர்வையே காரணமாக கூறி வருகின்றனர். இவ்வாறு சொரூபன் கூறினார்.

December 9, 2008 at 6:17 AM Leave a comment

நெருக்கடியிலும் இந்திய வங்கிகள் சளைக்கவில்லை

மும்பை: சர்வதேச அளவில், நிதிநெருக்கடி ஏற்பட்டு, பல வங்கிகள் கதிகலங்கி இருந்தாலும், இந்திய வங்கிகள் திடமாக உள்ளன; பல நாடுகளில் கிளைகளை ஆரம்பிப்பதில் தீவிரம் காட்டுகின்றன.

இந்த வகையில், இந்தியாவின் மிக பிரபலமான வங்கி, ஸ்டேட் பாங்க் முதலிடம் வகிக்கிறது. கனடா, சவுதி அரேபியா, துபாய், சீனா, ஷாங்காங், மாலத்தீவுகள், நேபாளம் ஆகியவற்றில், தன் கிளையை அமைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தவிர, அமெரிக்காவில் இன்னொரு கிளையை திறக்கவும் இந்த வங்கி தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அமெரிக்காவில் ஒன்பது நகரங்களில் ஸ்டேட் பாங்க் கிளைகள் உள்ளன. அமெரிக்காவில், 23 லட்சம் இந்தியர்கள் உள்ளனர்; அமெரிக்கா மட்டுமில்லாமல், பல மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு சேவை செய்ய பல இந்திய வங்கிகள் தீவிரமாக உள்ளன. இதில், ஸ்டேட் பாங்க் தான் முதன் முதலில் நடவடிக்கையில் இறங்கியது. மற்ற வங்கிகளும் இப்போது தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.

December 9, 2008 at 6:17 AM Leave a comment

வேறு தொழில் தேடும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள்

நிலத்தின் மதிப்பு உயர்வு, பொருளாதார சிக்கல், கடனுக்கான வட்டி உயர்வு உள்ளிட்டவை, ரியல் எஸ்டேட் துறையை தற்போது புரட்டி போட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் உச்சத்தை நோக்கி பறந்து கொண்டிருந்த இத்துறை, தற்போது சரிவை கண்டுள்ளது.

நிலங்கள், வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை சரிந்து, பல புரோக்கர்கள் வேறு தொழிலுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பொதுவாக, ஒருவர் தன்னுடைய நிலம், வீடு எதுவாக இருந்தாலும் நேரடியாக விற்பதை விட புரோக்கர்கள் மூலம் எளிதாக விற்க முடியும் என்ற நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. சென்னை நகரில் ஐ.டி., நிறுவனங்கள் கால் பதித்த காலம் அது.

நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் புரோக்கர்கள், தாங்கள் வைத்தது தான் விலை என்ற அளவில் செயல்பட்டு வந்தனர். இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலங்களின் விற்பனை கனஜோராக நடந்ததுடன், நிலங்களின் மதிப்பும் <உயரத்துவங்கியது.

நிலைமையை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட புரோக்கர்கள், அதிக ஆசையில் ஆங்காங்கே விற்

பனைக்கு உள்ள நில உரிமையாளர்களை அணுகி, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து, தாங்களே நிலத்திற்கான விலையை நிர்ணயம் செய்து, சந்தை விலையை அதிகரிக்கத் துவங்கினர்.

இதனால், ஒரு கிரவுண்டு ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலங் கள் எல்லாம், குறுகிய காலத்தில் 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் விலை நிர்ணயிக்கப்பட்டன.

முழு நேர ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அதிகளவில் களமிறங் கினர். இதில் கிடைத்த லாபத்தைப் பார்த்த பலர், வெளியூர்களிலிருந்தும் சென்னைக்கு வந்தனர். சென்னையை தொடர்ந்து, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் எல்லை தாண்டி புரோக்கர்கள் நெட்ஒர்க் விரிந்தது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்தே ஐ.டி., தொழிலில் சுணக்கம் ஏற்பட்டது. தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்த நிறுவனங்கள், ஊழியர்களை வெளியில் அனுப்பத் துவங்கின. அதே நேரம், ஐ.டி., நிறுவனம் மற்றும் பன்னாட்டு நிறுவன ஊழியர்களை நம்பி லோன் மேளாக்களை நடத்திய வங்கிகள், வட்டி வீதத்தை உயர்த்த ஆரம்பித்தன. இதனால், மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக சம்பளம் பெற்று வந்தவர்கள் வீடோ, நிலமோ வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இயல்பாகவே, ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி துவங்கியது. இந்த வீழ்ச்சி அலையில், புரோக்கர் தொழிலில் நீண்ட நாட்களாக இருப்பவர்கள் தாக்கு பிடித்தனர். மற்றவர்கள், இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். நிலத்திற்கு பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டவர்கள், குறிப்பிட்ட காலம் முடிந்ததால் பணத்தைத் திரும்பப் பெற முடியாமல், தொழிலைத் தொடர முடியாமல் நொடித்துப்போயுள்ளனர்.

தங்களது சொந்த ஊர்களில் பல்வேறு தொழில்களை பார்த்துவந்த நிலையில் புரோக்கர் தொழிலில் ஆர்வத்துடன் இறங்கியவர்களில் பலர், ‘அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை’யாக, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து, தென்சென்னை பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ஒருவர் கூறுகையில், ”இப்போது சென்னையில் பல இடங்களில் நிலங்களை விற்க முடியாமல் உரிமையாளர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர். பலர் இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்லத் துவங்கிவிட்டனர். ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டதால் ஏற்பட்ட நஷ்டம் தான் இதற்கு காரணம்,” என்றார்.

December 9, 2008 at 6:16 AM Leave a comment


Visitors

  • 14,717 hits

Archives

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Recent Comments