Archive for December 8, 2008
இந்தியாவை நெருக்கும் பொருளாதாரப் பின்னடைவு!
அமெரிக்காவின் முதலீட்டு வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பரஸ்பர நிதி நிறுவனங்களும் திவாலானதால் உருவான நிதி நெருக்கடி முதலில் ஐரோப்பாவையும், பிறகு ஜப்பானையும் அதன் பிறகு சீனா, இந்தியா மட்டுமின்றி, உலகின் ஒவ்வொரு நாட்டையும் கடுமையாக பாதித்து வருகிறது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கிழக்காசிய நாடுகள் வரை வளர்ந்த நாடுகளின் பொருளாதார பின்னடைவு அவைகளின் உள்நாட்டு பொருளாதாரத்தில் இருந்து ஏற்றுமதி, வேலை வாய்ப்பு வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தில் அங்கமாகும் ஒவ்வொரு நாடும் முன்னேறிய நாடுகளில் ஏற்படும் இப்படிப்பட்ட சரிவுகளினால் உருவாகும் சுமைச் சிலுவையை சுமந்துதான் ஆக வேண்டும், தனித்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பில்லை.
ஆயினும் ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் சீனாவும், இந்தியாவும் மட்டும்தான் இந்த சர்வதேச அளவிலான பொருளாதாரப் பின்னடைவால் பாதிக்கப்பட்டாலும், அவைகளின் பலமான உள்நாட்டு பொருளாதார அடிப்படைகளின் பலத்தின் காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டாலும், பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
![]() |
||
|
அது என்ன நிதி நெருக்கடி வேறு, பொருளாதாரப் பின்னடைவு வேறு? இதனைப் புரிந்துகொள்ள நமது நிதியமைச்சர் (இப்போது அவர் உள்துறை அமைச்சர்) ப. சிதம்பரம் கூறியுள்ளதை பார்க்க வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்நாட்டின் ஒராண்டு ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும் (Gross Domestic Product – GDP). கடந்த 2007-08 நிதியாண்டில் நமது நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.8 விழுக்காடு ஆகும், அதற்கு முந்தைய ஆண்டை (2006-07) விட இது 0.2 விழுக்காடு அதிகரித்திருந்தது. அதாவது கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.6 விழுக்காடாகும்.
நடப்பு நிதியாண்டில் (2008-09) இந்த ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 முதல் 7.5 விழுக்காடு அளவிற்கு (இந்திய மைய வங்கியும், நிதியமைச்சகமும், திட்டக் குழுவும் தெரிவித்துள்ளதுபடி) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வேளாண் உற்பத்தி மட்டும் கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 4.5 விழுக்காடு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நமது நாடு வேளாண் உற்பத்தி வளர்ச்சியும், உணவு இருப்பும் (இதுவரை 276 மில்லியன் டன் நெல்லும், 220 மில்லியன் டன் கோதுமையும் மத்திய அரசால் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன) போதுமான அளவிற்கு உள்ளதால், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பின்னடைவின் காரணமாக நமது நாட்டில் தொழில் உற்பத்தி, வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதே தவிர, பொருளாதார பின்னடைவு ஏற்படவில்லை. ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி அதன் இரண்டாவது காலாண்டில் 0.02 விழுக்காடு (கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டோடு ஒப்பிடுகையில்) குறைந்துள்ளது. ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரமான ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி 0.03 விழுக்காடு குறைந்துள்ளது. ஜப்பானின் உள்நாட்டு உற்பத்தியும் குறைந்துள்ளது. இது அந்நாடுகளில் இதுவரை காணாத ஒரு சரிவாகும். ஆனால் இந்திய, சீன நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே, கடந்த ஆண்டு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளனவே தவிர, வளர்ச்சியின்றிப் பின்னடைவைச் சந்திக்கவில்லை.
அதனால்தான் நமது நாட்டின் பொருளாதார அடிப்படைகள் பலமாக உள்ளதென்று அமைச்சர் சிதம்பரம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.
ஆயினும், நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எந்த அளவிற்கு நமது மக்களை பாதித்துள்ளது? பாதிக்கப் போகிறது? என்பதற்கு சமீப நாட்களில் வெளிவந்துக் கொண்டிருக்கும் செய்திகள் பார்க்க வேண்டும்.
![]() |
||
|
1. பங்குச் சந்தை: எங்களது ஆட்சியில்தான் பங்குச் சந்தை இந்த அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளது என்றெல்லாம் காங்கிரஸ் கட்சி புளங்காகிதத்துடன் முழங்கி வந்தது. ஓராண்டுக் காலத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 10,000 (2006 பிப்ரவரி 6ஆம் தேதி) புள்ளிகளில் இருந்து 20,024 (2007 அக்டோபர் 29)ஆகி, பிறகு அதிகபட்சமாக 21,077 (2008 ஜனவரி 08) புள்ளிகளுக்கு அசுர வேகத்தில் உயர்ந்தது. அதாவது 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரத்தை எட்ட 443 நாட்கள் ஆனது.
ஆனால், அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் தாக்கம் முதலில் பாதிப்பை ஏற்படுத்தியது (சர்வதேச அளவில்) பங்குச் சந்தைகளில்தான். அமெரிக்காவில் முதலீட்டு வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் திவாலானத்தை தொடர்ந்து தங்களது நிதியைக் காப்பாற்றிக் கொண்டு வெளியேற முற்பட்ட அந்நிய நிறுவன முதலீட்டு நிறுவனங்கள் (Foreign Institutional Investors – FII), மளமளவென்று பங்குகளை விற்றன. பல்வேறு நாடுகளில் பதிவு செய்யப்பட்டு, நிதிச் சந்தைகளில் இலாப நோக்கோடு சுதந்திரமாக விளையாடும் இந்த அந்நிய நிறுவன முதலீட்டு நிறுவனங்களின் வருகையே நமது பங்குச் சந்தை முன்னேற்றத்திற்கும் காரணமானது, அதன் வீழ்ச்சிக்கும் காரணமானது. இதெல்லாம் எதிர்பாராததுமல்ல, இதற்கு முன்பு நடைபெறாததுமல்ல. நமது நாட்டின் பங்குச் சந்தையில் அந்நிய நிறுவன முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்த நிதியின் அளவு 2008- 09 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 10.7 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது என்று இந்திய மைய வங்கி தெரிவித்துள்ளது.
இப்படிப்பட்ட பயந்த விற்பனை (Panic selling) சில வாரங்களிலேயே 10,000 புள்ளிகளைச் சரித்தது. பங்குச் சந்தையை தூக்கி நிறுத்த இந்திய மைய வங்கி (ஆர்.பி.ஐ.) வணிக வங்கிகளின் ரொக்க இருப்பை பலமுறை குறைத்து, வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறைந்த கால கடன்களின் மீதான வட்டியை (ரீபோ ரேட்) குறைத்தது. மைய வங்கியின் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் மட்டும் வங்கிகளின் வாயிலாக மூன்றரை லட்சம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்ல, தங்களுடைய உபரி நிதிகளை பொதுத் துறை வங்கிகளில் வைப்பு நிதியாக்குமாறு மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களை (ஓ.என்.ஜி.சி. போன்றவை) அரசு பணித்தது. ஆயினும் பங்குச் சந்தை நிமிரவில்லை. அவ்வப்போது நடந்த குறைந்த நேர இலாக வாங்கல் – விற்றலால் ஏறியது, மறுநாளே இறங்கியது.
![]() |
||
|
இன்றைய நிலவரப்படி, 8,747 புள்ளிகளில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடு (சென்செக்ஸ்) நிற்கிறது. இந்தச் சரிவால் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது சாதாரண, நடுத்தர முதலீட்டாளர்களே. இவர்கள் பங்குச் சந்தை முன்னேற்றத்தில் இருந்தபோது முதலீடு செய்தவர்கள், அது சரியும் வேகத்தை சரியாக கணிக்க முடியாததால், ஓரளவிற்கு இலாபம் தேற்ற முடியாதவர்களாய், விற்காதவர்கள். விளைவு: இவர்களின் முதலீடுகள் விலை வீழ்ச்சியடைந்த பங்குகளில் முடங்கின. பரஸ்பர நிதிகளின் நிலையும் இதுவே.
ஆக, அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் பாதிப்பு இந்திய பங்குச் சந்தைகளில் கடுமையாக எதிரொலித்தது.
2. தகவல் தொழில் நுட்பம்: உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியா பங்கு பெற்றதால் மிகப் பெரிய அளவிற்கு பலன் பெற்ற இரண்டு துறைகள் தகவல் தொழில் நுட்பமும், அது சார்ந்த சேவைகளும்தான் (ITES). அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இருந்து பெற்ற அயல் பணி வாய்ப்புகளால் (Business Process Outsourcing) இந்திய த.தொ. நிறுவனங்களும், அதில் பணியாற்றிய மென்பொருள் தொழில் நெறிஞர்களும் பெரும் பலனைப் பெற்றனர்.
![]() |
||
|
உதாரணத்திற்கு, இங்கிலாந்தில் மட்டும் தற்பொழுது பணியாற்றிக் கொண்டிருக்கிற இந்தியர்களில் 15 லட்சம் பேர் பணி இழப்பார்கள் என்று இந்தியப் பணியாளர்கள் சங்கத்தினுடைய செயலர் ஹார்சி பெய்ன்ஸ் கூறியுள்ளார். பணியாற்றுவதோடு அங்கு வாழ்ந்து வரக்கூடிய மக்கள் இவர்கள்! இவர்கள் அனைவரும் இந்தியா திரும்பும் நிலை உருவாகியுள்ளது. இது கடந்த வாரச் செய்தி.
நமது நாட்டில் இயங்கி வருகின்ற, சாதாரண அல்ல, பெரும் த.தொ. நிறுவனங்கள் கூட, தங்களுக்கு அயல் பணி அளித்த நிறுவனங்களை அப்பணிகளை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளதால், அதனை செய்து முடிக்க தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி உத்தரவுகளை நிறுத்தி வைத்துள்ளது. தற்காலிகமாக பணி செய்துவந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தகவல் தொழில் நுட்பம், சேவைகள் தரும் நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம், கடந்த ஆண்டு த.தொ. கண்ட வளர்ச்சி, அதற்கு முந்தைய ஆண்டை விட 29 விழுக்காடாக இருந்தது என்றும், இந்த ஆண்டு அது 21 முதல் 24 விழுக்காடாக மட்டுமே இருக்குமென்றும் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய பராக் ஒபாமா கூட, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் அயல் பணிகள் தடுக்கப்படும் என்று கூறினார். ஆனால் அது முழுமையாக சாத்தியமில்லை என்றே அமெரிக்க நிறுவனங்கள் கூறுகின்றன. அப்படி அயல் பணி அளிப்பதன் மீது 20 விழுக்காடு வரி விதிக்கப்பட்டால் கூட, அயல் பணியே தங்களுக்கு இலாபகரமானது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே, ஒரு பக்கத்தில் மென்பொருள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி குறைந்தாலும், நமக்கு கிடைத்துவரும் அயல் பணி வாய்ப்புகள் இந்த பொருளாதார பின்னடைவிலும் அதிகரிக்கும் சாத்தியமுண்டு என்றும் கூறப்படுகிறது.
3. ஏற்றுமதி, தொழில் உற்பத்திச் சரிவு!
பொருளாதார பின்னடைவு நிதிச் சந்தைகளில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு நமது நாட்டின் தொழில் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]() |
||
|
நமது நாட்டின் வாகன உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. செப்டம்பர் மாதம் வரை ஏறுமுகமாகவே இருந்துவந்த வாகன விற்பனை அக்டோபரிலும், நவம்பரிலும் பெருமளவிற்கு குறைந்துள்ளது.
இரு சக்கர வாகனங்களின் விற்பனை 2007 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 15 விழுக்காடு வரை குறைந்துள்ளது. இதே மாதத்தில் கார்களின் விற்பனையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. நமது நாட்டில் அதிகம் விற்பனையாகும் மாருதி கார்களின் விற்பனை 27 விழுக்காடு குறைந்துள்ளது. டாடா வாகனங்களின் விற்பனை 15 விழுக்காடும், மஹிந்திரா வாகனங்களின் விற்பனை 45 விழுக்காடும் சரிந்துள்ளது.
டாடா நிறுவனத்தின் ஜம்ஷட்பூர் கனரக வாகன உற்பத்தி பிரிவு தனது உற்பத்தியை 5 நாட்களுக்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனமும் தனது உற்பத்தி நாட்களை வாரத்திற்கு 5 நாட்களாக குறைத்துவிட்டது.
நமது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்து அக்டோபரில் 12 விழுக்காடு குறைந்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஜவுளியில் இருந்து பட்டை தீட்டப்பட்ட வைரம் வரை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகப் பெரிய அளவிற்கு வேலையின்மையை ஏற்படுத்தக் கூடியதாகும்.
![]() |
||
|
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான லார்ட் சுவராஜ் பால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதாரப் பின்னடைவு மற்ற நாடுகளை விட இந்தியாவை கடுமையாக பாதிக்கும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜவுளி, தோல், மென்பொருள் மற்றும் சேவைகள், ஆயத்த ஆடைகள், வாசனைப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியின் மூலம் நமது நாடு பெறும் வருவாய் நமது ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காடு பங்கு வகிக்கிறது. எனவே ஏற்றுமதி குறைவது நமது பொருளாதார வளர்ச்சியை பாதிப்பது மட்டுமின்றி, இதன் எதிர்வினையாக ஏற்றுமதி நிறுவனங்களில் ஆட்குறைப்பும் ஏற்படும். இது வேலையின்மையை அதிகரிக்கும்.
ஆக, அமெரிக்காவில் கடந்த ஆண்டின் இறுதியிலேயே (இப்பொழுதுதான் அதைத் தெரிவித்துள்ளார்கள்) துவங்கிவிட்ட பொருளாதாரப் பின்னடைவு, ஐரோப்பாவையும், ஜப்பானையும் தாக்கியுள்ளதை விட நமது நாட்டை பாதிக்கும் அளவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அக்டோபரில் ஏற்பட்டுள்ள சரிவு ஒரு துவக்கமே.
![]() |
||
|
இதை எப்படி சமாளிப்பது என்று ஆராய மத்திய அரசு ஒரு குழு அமைத்து தீவிரம் காட்டியபோதுதான், மேலும் ஒரு பேரிடியாக நமது நாட்டின் நிதித் தலைநகர் என்று போற்றப்படும் மும்பை நகரில் கடந்த 26ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.
இந்தத் தாக்குதல் உலகளாவிய பொருளாதார பின்னடைவால் நமது நாட்டிற்கு உருவாகிவரும் மந்த நிலையை மேலும் கடுமையாக்கப்போகிறது.
எனவே பொருளாதாரப் பின்னடைவை சமாளிக்க எடுக்கப்படும் உலகளாவிய அளவிலான கூட்டு நடவடிக்கையில் பயங்கரவாத ஒடுக்கலும் சேர்ந்துகொண்டுவிட்டது. மற்ற உலக நாடுகளை விட இது இந்தியாவிற்கு பெரும் சவாலாக இருக்கப்போகிறது.
மீ்ண்டும் சந்திப்போம்…
நலிவுற்ற பிரிவினருக்கு உணவு பதப்படுத்தும் பயிற்சி
இவை திட்டம் சார்ந்ததாக உள்ளது என்பதோடு மட்டுமல்லாமல் எந்த குறிப்பிட்ட மாநிலத்தையோ பகுதியையோ சார்ந்ததாக இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆயினும் ஒருங்கிணைந்த மலைவாழ் மேம்பாட்டு திட்டம் செயல்படும் இடங்கள் மற்றும் கடினமான பகுதிகளில் அதிக அளவு உதவிகள் அளிக்கப்படுகின்றன.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் ஆகியோர் அதிகளவில் பயன்பெற வேண்டும் என்பதற்காக இப்பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் கருத்தரங்குகள் நடத்த உதவி செய்யப்படுகிறது.
இந்த கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டுமெனில் குறைந்தது 25 விழுக்காடு அளவிற்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பங்கு பெற வேண்டும். தொழில் முனைவோருக்கான மேம்பாட்டுத் திட்டங்களில் பயிற்சி பெற அளிக்க தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயத்த ஆடை, பின்னலாடை, தோல் பொருட்கள், கைவினை பொருட்கள், வைரம், நகைகள் போன்றவை கணிசமாக ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போதைய நெருக்கடியால், இந்த ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இவை அதிக அளவு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திய தொழில்களாகும். இதன் நெருக்கடியால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு நேற்று மத்திய அரசு சலைகைகளை அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் மத்திய திட்டக்குழு தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பேசுகையில், ஜவுளி, தரை விரிப்பு, கைத்தறி, கைவினை பொருட்கள், தோல் பொருட்கள், வைரம், நகை, கடல் உணவு பொருட்கள், சிறு, நடுத்தர தொழில் பிரிவில் உள்ள ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு 2 விழுக்காடு சலுகை வட்டியில் கடன் வழங்கப்படும்.
இந்த சலுகை அடுத்த வருடம் மார்ச் வரை வழங்கப்படும். அதிகபட்ச வட்டியாக 7 விழுக்காடு வசூலிக்கப்படும். ஏற்றுமதி நிறுவனங்கள் செலுத்தும் உற்பத்தி வரி, மத்திய விற்பனை வரி போன்ற வரிகள் திருப்பி வழங்கப்படும். அத்துடன் ஏற்றுமதி நிறுவனங்கள் அயல்நாட்டு முகவர்களுக்கு கமிஷன் வழங்குகின்றன. இந்த கமிஷனுக்கு பிடித்தம் செய்யப்படும் சேவை வரி திருப்பி வழங்கப்படும். இது செய்யப்படும் பொருட்களின் மதிப்பில் அதிக பட்சம் 10 விழுக்காடு வரை திரும்ப வழங்கப்படும்.
இரும்பு தாது ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கும் சலுகை வழங்கப்படும். சுத்தமான பிரித்து எடுக்கப்பட்ட இரும்பு தாதுக்கு ஏற்றுமதி வரி நீக்கப்படுகிறது. மற்ற இரும்பு தாதுவுக்கு ஏற்றுமதி வரி 5 விழுக்காடாக குறைக்கப்படுகிறது.
மின் உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்தும் நாப்தாவிற்கு இறக்குமதி வரி நீக்கப்படுகிறது. இவ்வாறு எரிபொருள் இல்லாமல் பல மாநிலங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படாமல் இருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நாப்தா எரிபொருள் இல்லாமல், செயல் படாமல் இருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள், மீண்டும் மின் உற்பத்தியில் ஈடுபட முடியும். இவை இயங்குவதால் மின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
பொதுத்துறை வங்கிகள் விரைவில், ரூ.5 லட்சம் வரை வாங்கும் வீட்டு வசதி கடனுக்கும், ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வாங்கும் வீட்டு வசதி கடனுக்கு சலுகைகளை அறிவிக்கும் என்று அலுவாலியா தெரிவித்தார்.
உள்கட்டமைப்பு மேம்படுத்த அதிக நிதி
புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நிதி உதவி அளிக்கும் இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் [India Infrastucture Finance Company Ltd (IIFCL)], வரிச்சலுகையுடன் கூடிய கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் வழங்கும் நிதி உதவி போல், மற்றொரு மடங்கு நிதி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனங்களுக்கு கடனாக கிடைக்கும் என்று தெரிவித்தார்.
இந்த நிறுவனம், நீண்ட கால அடிப்படையில் உள்கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு, வங்கி, மாநில நிதி நிறுவனங்கள் வழங்கிய கடனில் ஒரு பகுதியை வழங்கும். இதனால் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்கும். குறிப்பாக தனியார்- அரசு நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும் துறைமுகம், நெடுஞ்சாலை வசதி போன்ற திட்டங்களுக்கு தாராளமாக நிதி கிடைக்கும்.
சென்வாட் வரி குறைப்பு
புது டெல்லியில் நேற்று திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா செய்தியாளர்களிடம் கூறுகையில், உற்பத்தி வரியை குறைக்கும் விதமாக, இந்த நிதி ஆண்டின் மீதமுள்ள மாதங்களில் சென்வாட் (மத்திய மதிப்பு கூட்டு வரி) வரி, பெட்ரோலிய பொருட்கள் தவிர மற்ற பொருட்களுக்கு 4 விழுக்காடு குறைக்கப்படுகிறது. முன்பு சென்வாட் வரி முறையே 14%. 12%, 8% ஆக இருந்தது. இதில் தற்போது 4 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கவும், உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள தொழில் துறையின் தேக்கத்தை நீக்கவும், பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, அரசு உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்று தொழில் அதிபர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசு நேற்று சென்வாட் வரியை 4 விழுக்காடு குறைத்துள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்டு அலுவாலியா பேசுகையில், சந்தை (விற்பனை) நிலவரத்தை கருத்தில் கொண்டு, உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், வரி குறைப்பின் பலன் பொது மக்களுக்கு போய் சேரும் படி, அவை உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று கூறினார்.
மத்திய அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் கூறுகையில், நேரடி வரிகள் (வருமான வரி, நிறுவனவரி போன்றவை… ) குறைக்கப்படமாட்டாது. தற்போது மறைமுக வரியில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. இந்த வருடம் நிதி நிலை அறிக்கை ( பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்ட போதே, நேரடி வரிகள் குறைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
மத்திய நிதித்துறை செயலாளர் அருன் ராமநாதன் கூறுகையில், தற்போதைய வரி சலுகைகளால் அரசுக்கு ரூ.8,700 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் போது. இந்த இழப்பு குறையும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
எஸ்பிஐ லைப் : சுயஉதவிக் குழுக்களுக்கு ஆயுள் காப்பீட்டு திட்டம்
தமிழகம் மற்றும் புதுவையில் மட்டும் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் 14 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் நலனுக்காக கிராமீன் ஷக்தி என்ற பெயரில் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.
இத்திட்டத்தில் சேர்பவர்கள் பிரிமியமாக ஆண்டுக்கு ரூ.601 செலுத்த வேண்டும். காப்பீடு ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
எதிர்பாராதவிதமாக உயிரிழப்பு ஏற்படும்போது, காப்பீட்டுத் தொகையாக ரூ.50,000 வழங்கப்படும். முதிர்வு காலத்தில் உயிருடன் இருப்பவர்களுக்கு செலுத்திய பிரிமியத்தில் 50 சதவீதத் தொகை திருப்பித் தரப்படும்.
தமிழகத்தில் இத்திட்டம் அறிமுகம் செய்தபோதே 77 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன. 3 லட்சம் பேர் இதில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஒரிசா மற்றும் சில மாநிலங்களில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரிசாவில் மட்டும் இதுவரை 2 லட்சம் பேர் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளார்கள் என்றார் டிபவ்லா.
டாப்-10-ற்க்கு ரூ.19,000 கோடி இழப்பு
பங்கு வர்த்தகம் இந்த ஆண்டு ஆரம்பம் முதலே டல்லடித்தாலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 128 புள்ளிகள் சரிந்துள்ளது. இதனால் டாப் 10 நிறுவனங்களின் மொத்த பங்கு மதிப்பு ரூ.19 ஆயிரம் கோடி சரிந்து உள்ளது.
ஸ்டேட் வங்கி, என்எம்டிசி, என்டிபிசி போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்து காணப்பட்டாலும் மற்ற நிறுவனங்களின் பங்கு மதிபபு சரிந்து உள்ளது. இதனால்தான் இந்த நிறுவனங்களின் மொத்த பங்கு மதிப்பு ரூ.19 ஆயிரம் கோடி குறைந்துள்ளது.
முந்தைய வாரத்தில் இந்நிறுவனங்களின் மொத்த பங்கு மதிப்பு ரூ.9.64 லட்சம் கோடியாக இருந்தது. இது 9.45 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.
டாப் 10 நிறுவனங்களில் ஸ்டேட் வங்கி, என்டிபிசியின் பங்கு மதிப்பு மொத்தம் ரூ.4 ஆயிரத்து 456 கோடி அதிகரித்து உள்ளது. என்எம்டிசி பங்கு மதிப்பு ரூ.2 ஆயிரத்து 121 கோடி உயர்ந்துள்ளது.
டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் மொத்த பங்கு மதிப்பு ரூ.3,557 கோடி குறைந்துள்ளது. இந்நிறுவனததின் இப்போதைய பங்கு மதிப்பு ரூ.51,054 கோடி.
நாட்டின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு ரூ.1.78 லட்சம் கோடியில் இருந்து ரூ.1.76 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.
பெல் நிறுவன பங்கு மதிப்பு ரூ.1,092 கோடி அதிகரிக்க, இன்போசிஸ் நிறுவனம் ரூ.6 ஆயிரம் கோடி குறைந்து உள்ளது.
சரியான முதலீடுக்கு லாபம் நிச்சயம்
கடந்த 1999ல் இன்போசிஸ் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு கிடைத்த லாபம் 872 சதவீதம்! தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறத் தொடங்கிய நேரம் அது. சரியாகக் கணித்து முன்னணி ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் பங்குகளை வாங்கியவர்கள் ஒரே ஆண்டில் லாபத்தை அள்ளினர்.
குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து விட்டு நம்பிக் கொண்டிருப்பவர்களைவிட குறிப்பிட்ட இடைவெளியில் முதலீட்டை இடம் மாற்றும் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் அதிகமாக இருப்பதில்லை.
ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு, பங்குகள் மீது அதிக லாபத்தைத் தரும்.
உதாரண மாக 2001ம் ஆண்டில் வாகனத் துறை பங்குகள் 29 சதவீத லாபம் அளித்தன. இரண்டாவதாக மருந்து துறை பங்குகள் 9 சதவீத லாபம் அளித்தன. 2002ல் எரிசக்தி துறை பங்குகள் 74 சதவீதமும், உலோகங்கள் 54 சதவீதமும், வங்கிகள் 53 சதவீதமும் லாபம் அளித்தன.
2003ல் உலோகங்கள் 238 சதவீதம், ரியல் எஸ்டேட் 193 சதவீதம் லாபம் பெற்றுத் தந்தன. 2004ல் ரியல் எஸ்டேட் 144 சதவீதம், தொலைத் தொடர்பு 63 சதவீதம், வங்கிகள் 35 சதவீதம் லாபம் கண்டன.
2005ல் ரியல் எஸ்டேட், புகையிலை நிறுவனப் பங்குகள் முறையே 289 சதவீதம், 74 சதவீத லாபம் அளித்தன. 2006ல் அதிகபட்சமாக அதே ரியல் எஸ்டேட் துறை 2,093 சதவீத லாபத்தை அள்ளித் தந்தன. 2007ல் உலோகத் துறை பங்குகள் அளித்த லாபம் 193 சதவீதம். எரிசக்தி பங்குகள் அளித்தது 104 சதவீதம்.
எனவே, குறிப்பிட்ட துறையில் வரும் ஆண்டு திட்டங்கள், வளர்ச்சிகளை கருத்தில் கொண்டு அவற்றின் பங்குகளில் செய்யப்படும் முதலீடுக்கு அதிக நஷ்டம் ஏற்படாது என ராஜீவ் ஆனந்த் தெரிவித்தார்.
ம.பியில் பாஜக மீண்டும் வெற்றி-உதவிய பிஎஸ்பி
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜகவை மீண்டும் வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளார் முதல்வர் சிவராஜ் சிங் செளகான்.
மிகச் சிறந்த நிர்வாகியாக பெயர் எடுத்துள்ள செளகானையே அந்தக் கடசி மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் சந்ததிது பாஜக.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இந்த மாநிலத்தில் 9 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் பாஜகவுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. அங்கு இரு கட்சிகளி்ன் வாக்கு வங்கிகளையும் பகுஜன் சமாஜ் சுரண்டியுள்ளது. அதிலும் காங்கிரசின் வாக்குகளையே அந்தக் கட்சி அதிகமாக சுரண்டியுள்ளது. இதன்மூலம் பாஜகவின் வெற்றிக்கு அந்தக் கட்சி மறைமுகமாக உதவியுள்ளது.
அதே நேரத்தில் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவரான முன்னாள் முதல்வர் உமா பாரதியின் பாரதீய ஜன் சக்தி படுதோல்வி அடைந்துள்ளது.செளகானை முதல்வராக அறிவித்து பாஜக போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளராக யாரையும் அறிவிக்காமலேயே தேர்தலை சந்தித்தது.
முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், முன்னாள் துணை முதல்வர் சுபாஷ் யாதவ், ஜமுனா தேவி, மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்கின் மகன் அஜய் சிங், முன்னாள் சட்டபை சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் திவாரி ஆகியோர் முதல்வர் பதவிக்கான கனவில் இருந்தனர்.
இந்தக் கனவில் பாஜக மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது.
Recent Comments