Archive for December 3, 2008
ஹைதராபாத்தில் துப்பாக்கிச் சூடு-தீவிரவாதிகள்?
ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து வீடு வீடாக சோதனை நடத்திய போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. 4 பேர் கொண்ட கும்பல் போலீசாரை சுட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டது. இவர்கள் தீவிரவாதிகளாகவே இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பழைய ஹைதராபாத் பகுதியில் உள்ள சந்தோஷ் நகரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்று பகல் 1.30 மணியளவில் அந்தப் பகுதியை முற்றுகையிட்ட போலீசார் வீடு வீடாக சோதனை நடத்தினர்.
ஒரு ஹார்ட்வேர் கடையில் சோதனைக்காக போலீசார் நுழைந்தபோது அங்கு பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு காவலர் பலத்த காயமடைந்தார். இன்னொருவர் லேசான காயத்துடன் தப்பினார்.
போலீசாரை சுட்ட நால்வருமே தப்பியோடிவிட்டனர். இவர்கள் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
எங்களுக்கு பாதிப்பில்லை-பாரமவுண்ட்
மதுரை: பல்வேறு சர்வதேச, உள்நாட்டு விமான நிறுவனங்களும் தனது நிறுவனத்துடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் இது தொடர்பான முடிவெடுக்கப்படும் என்றும் பாரமவுண்ட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
சிறிய விமான நிறுவனமான இருந்தாலும் ஆரம்பத்திலிருந்தே மிக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிறுவனம் இது. பல்வேறு விமான நிறுவனங்களும் நஷ்டத்தில் மூழ்கிக் கிடக்கும் பாரமவுண்ட் நிறுவனத்தின் நிதி நிலை ஸ்திரமாகவே உள்ளது.
இந் நிலையில் இதன் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் மதுரையில் நிருபர்களிடம் பேசுகையில்,
மலேசிய நிறுவனமான ஏர்-ஏசியா தனது சேவையை திருச்சியிலிருந்து துவக்கவுள்ளது. இந்த நிறுவனம் தனது மார்க்கெட்டிங் பணிகளை கவனிக்குமாறு எங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதைத் தவிர மேலும் பல சர்வதேச, உள்நாட்டு நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன. ஆராய்ந்து முடிவெடுப்போம்.
சர்வதேச பொருளாதார சீர்குலைவால் எங்கள் நிறுவனத்துக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. விரைவில் 2 புதிய விமானங்களை வாங்கவுள்ளோம்.
சென்னையிலிருந்து பிற நாடுகளுக்கு விமானங்களை இயக்குவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.
விடுமுறைக் காலத்தையொட்டி பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கவுள்ளோம். பயணியோடு மற்றொருவர் இலவசமாக பயணம் செய்ய பயணச்சீட்டு வழங்கப்படும். அவ்வாறு செல்பவர் பயணச் சீட்டுக்குரிய வரியை மட்டும் செலுத்தினால்போதும். இந்த சலுகை விடுமுறைக் காலத்திற்கு மட்டுமே பொருந்தும்.
மதுரையில் இருந்து சென்னை, திருச்சி, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறோம். விரைவில் இந்தியாவின் மேற்கு பகுதியில் மாநிலங்களின் தலைநகரங்களுக்கு விமான சேவை தொடங்குவோம்.
விமான எரிபொருள் விலை குறைந்துள்ள போதிலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்திருப்பதோடு செலவுகளும் அதிகரித்துள்ளதால் விமான கட்டணம் தற்போது குறைய வாய்ப்பில்லை.
எங்கள் விமானங்களில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் ‘பாரமவுண்ட் ராயல்’ கிளப் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்படும் என்றார்.
பயணிகள் குறைந்தனர்-காலியான நட்சத்திர ஹோட்டல்கள்
மும்பை: மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலையடுத்து பெரும்பாலான வெளிநாட்டுப் பயணிகள் தங்களது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளனர். இதனால் நாடு முழுவதுமே நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட டாப் ஹோட்டல்களில் அறைகள் புக் செய்யப்பட்டது ரத்தாகியுள்ளன.
இதன் காரணமாக ஹோட்டல்கள் கட்டணத்தை உடனடியாக 20 முதல் 45 சதவீதம் வரை குறைத்துள்ளன. ஏற்கனவே சர்வதேச பொருளாதார தேக்கத்தால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் கட்டணங்கள் 25 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டது.
இத்தோடு இந்தத் தாக்குதலால் இந்த ஹோட்டல்களுக்கு வெளிநாட்டுப் பயணிகள் தவிர, உள்நாட்டுப் பயணிகள் வருகையும் சரிந்துள்ளது.
டெல்லி, சென்னை, திருவனந்தபுரம், மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஜெய்ப்பூர், கோவா, ஹைதராபாத் என அனைத்து நகர்களிலுமே நட்சத்திர ஹோட்டல்களின் கட்டணம் சரிந்துவிட்டது. வெளிநாட்டுப் பயணிகள் வருகை மிக மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது மும்பையில் தான். இதில் டெல்லி இரண்டாவது இடத்திலும் பெங்களூர் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மின்சார காரை பயன்படுத்த தொலைபேசி துறை முடிவு
மத்திய அரசுக்கு சொந்தமான மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் [Mahanagar Telephone Nigam Ltd (MTNL)] டெல்லியில் தொலைபேசி சேவை வழங்கி வருகிறது.
இதன் தொழில்நுட்ப பிரிவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களின் போக்குவரத்துக்காக மின்சாரத்தில் இயங்கும் ரிவா (Reva) காரை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து இந்நிறுனத்தின் இயங்குநர் (மனிதவளம்) எஸ்.பி.பச்சோரி விடுத்துள்ள அறிக்கையில், தற்போது பயன் படுத்தும் டீசலில் இயங்கும் காருக்கு கிலோ மீட்டருக்கு ரூ.2.50 செலவாகிறது. மின்சாரத்தில் இயங்கும் ரிவா காரை பயன்படுத்தினால் கிலோ மீட்டருக்கு 40 பைசா மட்டுமே செலவாகும். அத்துடன் ஒட்டுவதற்கும் எளிது. போக்குவரத்து நெரிசலில் கார் இன்ஜினை நிறுத்தி, எளிதாக மீண்டும் இயக்க செய்ய முடியும். இதை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலிலும் எங்கள் தொழில்நுட்ப பராமரிப்பு ஊழியர்கள், குறிப்பிட்ட இடங்களுக்கு தாமதம் இல்லாமல் செல்ல முடியும் என்று கூறியுள்ளார்.
இந்த மின்சாரத்தில் இயங்கும் காரை பயன்படுத்துவதன் வாயிலாக, பொதுத்துறை நிறுவனங்களிலேயே சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் முயற்சியில் முதன் நிறுவனமாக மகாநகர் நிகாம் லிமிடெட் இருப்பதாக, இந்நிறுவனம் கூறியுள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் ரிவா கார்கள் 2001 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை பெங்களூருவில் உள்ள ரிவா எலக்ட்ரிக் கார் கம்பெனி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஏ.இ.வி எல்எல்சி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு- காப்பீடு
காப்பீடு துறையை கண்காணிக்கும், “இர்டா“ என்று அழைக்கப்படும் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் [Insurance Regulation & Development Authority(IRDA) ] முயற்சியால் அமைக்கப்படுகிறது. இந்த காப்பீடு ரூ.750 கோடி மூலதன நிதியுடன் தொடங்கப்படும்.
இன்று பிக்கி என்று அழைக்கப்படும் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த காப்பீடு கருத்தரங்கில் பேசும் போது, இர்டா சேர்மன் ஜே.ஹரி நாராயண் கூறுகையில், இர்டாவின் முயற்சியால் உண்டாக்கப்படும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஏற்படும் பொருள் இழப்புக்கு (உயிர் இழப்பு அல்ல) நஷ்ட ஈடு வழங்கும் வகையில் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப் படுகிறது. இதில் இருந்து காப்பீடு நிறுவனங்கள் நஷ்ட ஈடு வழங்க உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எதிரான காப்பீடு திட்டங்களை மேம்படுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கு தகுந்தாற்போல் காப்பீடு கட்டணம் நிர்ணயிப்பது பற்றி தொழில் துறை கருத்து தெரிவிக்க வேண்டும்.
காப்பீடு நிறுவனங்கள் அவைகளின் மிக முக்கியமான அலுவல் தவிர மற்ற அலுவல்களை அயல் அலுவலக பணி மூலம் நிறைவேற்றிக் கொள்ளுதல், இணைய தளத்தின் மூலம் காப்பீடு விற்பனை, தவணை தொகையை செலுத்துதல் ஆகியவற்றை அனுமதிப்பது பற்றி இர்டா ஆலோசித்து வருகிறது.
இந்த வருடம் 288 புதிய காப்பீடு திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பலவகையான விபத்து காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
காப்பீடு பாலிசியின் அடிப்படையில் நஷ்டஈடு கோரிக்கைகளில் 70 விழுக்காடு கோரிக்கை மட்டுமே நஷ்டஈடு வழங்கப்படுகின்றன. மீதம் உள்ள 30 விழுக்காடு கோரிக்கைகளில், காப்பீடு நிறுவனங்களின் நிர்வாக நடைமுறைகளால் 40 விழுக்காடு கோரிக்கைகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படாமல் உள்ளது என்று கூறினார்.
ரியல் எஸ்டேட் துறைக்கு உதவி
இதற்கு புத்துயிர் ஊட்ட வீட்டு கடன் வட்டியை குறைப்பது, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அயல் நாடுகளில் கடன் வாங்கும் நிபந்தனைகளை தளர்த்துவது, தற்போது வங்கிகளில் வாங்கியுள்ள கடனை திருப்பி செலுத்தும் காலத்தை மாற்றி அமைப்பது உட்பட பல ஆலோசனைகள் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளோம் என்று ஊரக மேம்பாட்டு துறை செயலாளர் எம்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அயல்நாடுகளில் கடன் வாங்குவதற்கு உள்ள நிபந்தனைகளை தளர்த்துவதால், அவை அதிக அளவு கடன் வாங்க முடியும். இதன் மூலம் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு உள்ள பணச் சிக்கல் குறையும்.
தற்போது நாட்டின் தேவையை விட வீட்டு வசதி குறைவாக உள்ளது. இது தேவைக்கு தகுந்தாற்போல் அதிகரிக்க வேண்டும்.
தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு குழு [National Real Estate Development Council (Nardeco)] ஏற்கனவே நிதி அமைச்சகத்திடம் சில சலுகைகளை கோரியுள்ளது. இதில் சில கோரிக்கைகளையும் இணைத்துள்ளோம்.
இவைகளுக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் கொடுத்த பிறகு, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு செல்லும் என்று தெரிவித்தார்.
கஸாவ் பாகி்ஸ்தானி அல்ல, யாரையும் ஒப்படைக்க முடியாது, போருக்கு தயார்-சர்தாரி
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியாவிடம் பிடிபட்டுள்ள அஜ்மல் அமீர் கஸாவ் பாகிஸ்தானைச் சேர்ந்தவனே அல்ல என பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கூறியுள்ளார்.
மேலும் இந்தியா கொடுத்துள்ள பட்டியலில் உள்ள 21 தீவிரவாதிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரத்தை இந்தியா தரவில்லை என்றும் இதனால் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் திடீரென மிகக் கடுமையான நிலையை எடுத்துள்ளது தெளிவாகியுள்ளது.
மும்பை தாக்குதல் நடந்தவுடன் முதலில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஐஎஸ்ஐ தலைவரை இந்தியாவுக்கு அனுப்புவதாகக் கூறினார் சர்தாரி. ஆனால், இதையடுத்து அவரை பாகிஸ்தான் ராணுவத் தளபதி இஸ்பாக் கியானி சந்தித்து, ஐஎஸ்ஐ தலைவரை அனுப்ப எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து ராணுவ நெருக்கடிக்குப் பணிந்து பல்டி அடித்தார் சர்தாரி.
ஐஎஸ்ஐ தலைவர் அனுப்ப முடியாது, பதிலாக ஒரு பிரதிநிதியை அனுப்புகிறோம் என்றார்.
இந் நிலையில் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ள ஜெய்ஷ் ஏ முகம்மத் தலைவர் மெளலானா மசூத் அஸார், லஷ்கர் ஏ தொய்பாவைச் சேர்ந்த ஹபீஸ் முகம்மத் சயீத், தாவூத் இப்ராகிம், ஹர்கத் உல் முஜாகிதீன், காலிஸ்தான் லிபரேசன் பிரண்ட், ஹர்கத் உல் ஜிகாதி இஸ்லாமி ஆகியவற்றைச் சேர்ந்த 21 பேரை தன்னிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் தூதரை அழைத்து வெளியுறவுத்துறை கூறியது.
ஆனால், இவர்களை ஒப்படைக்க மறுத்துள்ளார் சர்தாரி. நேற்றிரவு தேசிய பாதுகாப்புக் கூட்டம் என்ற பெயரில் அனைத்துக் கட்சியினரின் கூட்டம் பிரதமரின் இல்லத்தில் நடந்தது.
இதில் பேசிய அதிபர் சர்தாரி, இந்தியாவுடன் ஒத்துழைக்க பாகிஸ்தான் தயார், இந்தியாவுடன் அமைதிக்கு இந்தியா தயார், இந்தியாவுடன் போருக்கும் பாகிஸ்தான் தயார் என்று கூறியுள்ளார்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய சர்தாரி,
இந்தியா கொடுத்த பட்டியலி்ல் உள்ளவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்களைத் தரவில்லை. முதலில் இந்தியா ஆதாரங்களைத் தரட்டும். போதிய ஆதாராங்கள் இருந்தால் அவர்களை பாகிஸ்தான் மண்ணிலேயே வைத்து, பாகிஸ்தான் நீதிமன்றங்களிலேயே விசாரித்து தண்டனை தருவோம். ஆனால் அதற்கு ஆதாரம் வேண்டும்.
அதே போல பட்டியலில் உள்ள தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானிலேயே இல்லை.
மேலும் இப்போது இந்தியாவிடம் பிடிபட்டுள்ள அஜ்மல் அமீர் கஸாவ் பாகிஸ்தானைச் சேர்ந்தவனே அல்ல. அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.
ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐயின் நெருக்கடிக்குப் பணிந்தே சர்தாரி இவ்வாறு பேசியுள்ளதாகத் தெரிகிறது. அங்கு ஜனநாயக அரசுகள் ஆட்சியில் இருந்தாலும் பேருக்குத்தான் ஜனநாயகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு எல்லாவற்றையும் நிர்ணயிப்பது ராணுவமும் அதன் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயும் தான்.
என்னை கொன்றுவிடுங்கள்.. வாக்குமூலத்தின்போது கதறிய கஸாவ்
மும்பை: மும்பை தாக்குதலி்ல் ஈடுபட்டு பிடிபட்டு, விசாரிக்கப்பட்டு வரும் தீவிரவாதி அஜ்மல் அமீர் கஸாவ் தன்னைக் கொன்றுவிடும்படி இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளான். இல்லாவிட்டால் தனது குடும்பத்தினரை லஷ்கர் ஏ தொய்பா அமைப்பு கூண்டோடு காலி செய்து விடும் என்றும் கூறியுள்ளான்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளி்ல் ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்தவண்ணம் உள்ளன.
அவர் கூறியுள்ள தகவல்கள்:
நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். அதன் பின்னர் மதரஸாவில் தான் படித்தேன். நான் உள்பட 40 பேர் லஷ்கர் ஏ தொய்பாவால் பயிற்சி அளிக்கப்பட்டோம். பாகிஸ்தானின் பல இடங்களில் வைத்து இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.
துப்பாக்கிளைக் கையாள்வது, நீச்சல், படகுகளை கையாள்வது, ஆர்டிஎக்ஸ் குண்டுகளை வைப்பது உள்பட பல பயிற்சிகள் தரப்பட்டன. இடையே மும்பைக்குச் சென்று டார்கெட்களை பார்த்துவிட்டு வரவும் குழுக் குழுவாக அனுப்பி வைக்கப்பட்டோம்.
இதற்காக இந்திய கல்லூரிகளின் ஐடி கார்டுகள் எங்களுக்குத் தரப்பட்டன. அந்த கார்டுகளைக் காட்டி ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்கினோம். எனக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு கல்லூரியின் ஐடி கார்ட் தரப்பட்டது.
இதையடுத்து மும்பையில் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டோம். எங்கள் குடும்பத்தினருக்கு பணம் தருவதாகவும் கூறினார்கள்.
தாக்குதல் நடத்திய பின்னர் பத்திரமாக கராச்சிக்குத் திரும்பி வந்துவிடலாம், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்கள்.
என் குடும்பத்துக்கு வேண்டிய நிதி உதவிகள் செய்யப்படும் என்றனர்.
போலீசாரிடம் மாட்டினால் தற்கொலை செய்யுமாறு கூறியிருந்தனர். ஆனால், நான் உயிரோடு மாட்டிக் கொண்டேன். இதனால் என்னை பேசாமல் கொன்றுவிடுங்கள். இல்லாவிட்டால் என் குடும்பத்தை லஷ்கர் ஏ தொய்பா கூண்டோடு காலி செய்துவிடும்.
என்னுடன் மும்பை வந்த தீவிரவாதிகள் 9 பேர். அவர்களது பெயர்கள், அபு அக்சா, அபு உமர், படா அப்துல் ரஹ்மான், சோட்டா அப்துல் ரஹ்மான், அபு அலி, அபாதுல்லா, சோஹய்ப், உமர் ஆகியோர்.
எங்கள் 10 பேரையும் தலா 2 பேர் கொண்ட 5 குழுக்களாகப் பிரித்து தாக்குதல் திட்டத்தைக் கொடுத்தார்கள். ஒரு குழு செய்யும் வேலை இன்னொரு குழுவுக்குத் தெரியாது.
நாங்கள் கராச்சியிலிருந்து 13ம் தேதி ஒரு கப்பலில் அனுப்பப்பட்டோம். ஆனால், கடலிலேயே அந்தக் கப்பல் பல முறை நிறுத்தப்பட்டது. குஜராத் கடல் பகுதி வரை வந்தது.
அங்கு எங்களது இன்னொரு கூட்டாளிகள் குஜராத்தைச் சேர்ந்த ஒரு படகை (குஜராத்தைச் சேர்ந்த மீன்பிடி படகு குபேர்) கடத்தி தயார் நிலையில் வைத்திருந்தனர். நாங்கள் அந்தப் படகுக்கு ஆயுதங்கள் மற்றும் 2 ரப்பர் படகுகளுடன் மாறினோம்.
அந்தப் படகில் இருந்தவர்கள் எங்களை மும்பை கடல் பகுதி வரை கொண்டு வந்தனர். இதையடுத்து ரப்பர் படகுகளுக்கு மாறி மும்பைக்கு வந்தோம்.
நானும் என்னுடன் வந்தவனும் சிஎஸ்டி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திவிட்டு ஓபராய் ஹோட்டலுக்கு வந்தோம். மற்றவர்கள் பந்த்வார் பார்க்கில் உள்ள லியோபோல்ட் கபேவில் தாக்குதல் நடத்திவிட்டு தாஜ் ஹோட்டலுக்குச் சென்றனர்.
என்னுடன் வந்தவர்களில் சிலர் பிரிட்டஷைச் சேர்ந்த பாகிஸ்தானியர்கள். அவர்களுக்கு வேண்டுமானால் அல்-கொய்தாவுடன் தொடர்பு இருக்கலாம். எனக்கு லஷ்கர் மட்டுமே தெரியும். வேறு எதுவும் தெரியாது.
இந்தத் தாக்குதல் குறித்தோ, கொலைகள் குறித்தோ எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என் கவலை எல்லாம் நான் உயிரோடு பிடிபட்டது தான். என்னைக் கொன்றுவிடுங்கள். இல்லாவிட்டால் லஷ்கர் என் குடும்பத்தைக் காலி செய்துவிடும் என்று கூறியுள்ளான் கஸாவ்.
மேலும் குபேர் படகில் இருந்த ஊழியர் கொலை செய்யப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது என்றும் இவன் கூறியுள்ளான். இவர்களை ரப்பர் படக்குக்கு மாற்றிவிட்டு குபேரில் திரும்ப பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைந்த இந்தத் தீவிரவாதிகளின் வழி காட்டிகள் தான் அந்த ஊழியரைக் கொலை செய்துவிட்டு தங்களது கப்பலில் ஏறி கராச்சிக்குத் தப்பியதாகத் தெரிகிறது.
இப்போது இவனிடம் எப்பிஐயும் தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
கஸாவை காப்பாற்ற போலீஸ் பட்டபாடு:
முன்னதாக இவனும் இவனது கூட்டாளியும் ஸ்கோடா காரில் தப்பியபோது மும்பை டி.பி. மார்க் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் காதம் தலைமையில் வழிமறித்தனர். அப்போது இவன் சுட்டதில் ஒரு போலீஸ்காரர் பலியானர். போலீசார் தி்ருப்பிச் சுட்டதில் இவனது கூட்டாளி பலியானான்.
இதையடுத்து இவனை போலீசார் பிடித்தனர். அப்போது அப் பகுதி பொது மக்கள் பலரும் இவனைப் பிடிக்க உதவியுள்ளனர். பிடிபட்ட இவனை பொது மக்கள் அடித்து உதைத்துள்ளனர். இவனை உயிரோடு அவர்களிடம் இருந்து மீட்டு பத்திரமாகக் காவல் நிலையத்துக்குக் கொண்டு வரவே படாதபாடு பட்டுள்ளனர் போலீசார்.
தமிழகத்துக்கு மத்திய தொகுப்பிலிருந்து 200 மெகாவாட் மின்சாரம்
சென்னை:மத்தியத் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு நேற்று நள்ளிரவு முதல் 200 மெகா வாட் மின்சாரம் வரத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் மின்தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தர மத்திய அரசு ஒப்புக் கொண்டிருந்தது.
இந் நிலையில் முதல் கட்டமாக 200 மெகாவாட் மின்சாரத்தை தர ஆரம்பித்துள்ளது. ஆனால், மாநிலத்தின் நிலவும் மிக பயங்கர தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த மின்சாரம் போதாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி முதல் மேலும் கூடுதல் மின்சாரத்தை மத்திய அரசு வழங்குமாம். அதன் பிறகே நிலைமை கொஞ்சம் சரியாகலாம்
இந்திய கிராமங்களில் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது
SÖyz¥ ÙN¥ÚTÖÁ TVÁT|†‰ÚYÖŸL¸Á G‚eÛL ÙRÖPŸ‹‰ A‡L¡†‰ Y£f‰. C‹RŒÛX›¥, SÖyzÁ ˜efV SLWjL¸¥ ÙN¥ÚTÖÁ TVÁTÖ| EoNŒÛXÛV Gyz·[‰. AÚRNUV• fWÖU“jL¸¨• CR¼LÖ] ÚRÛYTÖ| pTÖ] A[«¥ Y[Ÿop L| Y£f‰. TX fWÖUjL¸¥ NÖRÖWQ ÙRÖÛXÚTpÛV TVÁT|†‰YÛR «P, ÙN¥ÚTÖÁLÛ[ TVÁT|†‰YÛR UeL· A‡L• «£•“fÁ]Ÿ G] C‹‡V ÙRÖ³XL iyPÛU“•, GŸ]Íy – Vj AÛU“• ÚU¼ÙLÖP Bš«Á ™X• ÙR¡VY‹‰·[‰.
CWPÖY‰ CP•
EXL A[«¥, q] SÖyz¼h A|†RTzVÖL ÙN¥ÚTÖÁLÛ[ A‡L[«¥ TVÁT|†‰Y‡¥ C‹‡VÖ CWPÖY‰ CP†‡¥ E·[‰. R¼ÚTÖ‰ S• SÖyz¥ 30 ÚLÖz YÖzeÛLVÖ[ŸL· ÙN¥ÚTÖÁLÛ[ TVÁT|†‡ Y£fÁ]Ÿ. Y£• 2012-B• Bz¼h· S• SÖyz¥ ÙRÖÛXÚTp ÚNÛYÛV TVÁT|†‰ÚYÖŸ G‚eÛL 70 ÚLÖzVÖL A‡L¡eh• GÁ¿•, C‡¥ 65 ÚLÖz ÚTŸ ÙN¥ÚTÖÁ ÚNÛYÛV TVÁT|†‰YÖŸL· GÁ¿• G‡ŸTÖŸeLT|fÁ‰.
Y£• 2012-B• Bz¼h· fWÖU“jL¸¥, “‡V ÙN¥ÚTÖÁ YÖzeÛLVÖ[Ÿ G‚eÛL 12 ÚLÖz A[«¼h•, SLŸ“jL¸¥ C‰, 6.20 ÚLÖz A[«¼h• C£eh• G] ÚU¼LP CW| AÛU“Lº• Bš° A½eÛL›¥ ÙR¡«†‰·[].
N‹ÛR U‡“
C‹‡VÖ«¥, p½V SLWjL· U¼¿• fWÖU“jL¸¥ ÙRÖÛX† ÙRÖPŸ“ ÚNÛYÛV ÙT¿TYŸL¸Á G‚eÛL pTÖ] A[«¥ Y[Ÿop L| Y£f‰. SP“ 2008-B• Bz¥ C‹‡VÖ«¥, C†‰Û›Á Jy|ÙUÖ†R N‹ÛR U‡“ 3,100 ÚLÖz PÖXŸ (¤.1,55,000 ÚLÖz) A[«¼h C£eh• GÁ¿ U‡‘PTy|·[‰. C‰, 2012-B• Bz¥ 5,400 ÚLÖz PÖXŸ (¤.2,70,000 ÚLÖz) A[«¼h Y[Ÿop LÖ„• G] G‡ŸTÖŸeLT|f‰.
Recent Comments