Archive for December 2, 2008
இந்தியா போர் தொடுக்கும் ஆபத்து-மும்பை தாக்குதலுக்காக தண்டித்து விடாதீர்கள்:பாகிஸ்தான் அதிபர் சர்தார் வேண்டுகோள்
˜•ÛT›¥ ˆ«WYÖ ‡L· 183 ÚTŸ E›¡Z‹R]Ÿ. ˆ«WYÖ‡L¸Á C‹R RÖehR¨eh TÖfÍRÖÁ RÖÁ ‘Á]‚ C£T RÖL C‹‡VÖ h¼• NÖyzV‰.
TÖfÍRÖÂÁ E[° Œ¿Y]UÖ] I.GÍ.I. C‹R ˆ«WYÖ‡Lºeh T›¼p ÙLÖ|†‰ AÄ‘V‰•, ‘zTyP ˆ«WYÖ‡›Á YÖeh ™X†‡¥ ÙR¡V Y‹R‰.
EÛU ŒXYWjLÛ[ A½V°• ˆ«WYÖ‡L¸Á N‡‡yP• T¼½ A½‹‰ ÙLÖ·[°• TÖfÍRÖÂÁ I.GÍ.I. E[° Œ¿Y ]†‡Á RÛXYÛW C‹‡VÖ°eh AÄ‘ ÛYeh• Tz C‹‡VÖ «|†R ÚLÖ¡eÛLÛV• TÖfÍRÖÁ ŒWÖL¡†‰ «yP‰.
ˆ«WYÖ‡LÛ[ J³† ‰eLyP TÖfÍRÖÁ —‰ C‹‡VÖ ÚTÖŸ ÙRÖ|e hUÖ GÁ ÚL·«• Gµ‹‰·[‰. CR]Ö¥ TÖfÍRÖÁ L‡LXjf ÚTÖ›£ef‰. C‹‡V G¥ÛXÛV Jyz·[ Th‡›¥ 1 XyN†‰eh• ÚU¼TyP WÖ„Y†‡]ÛW TÖfÍ RÖÁ h«†‰ Y£f‰.
C‹R ŒÛX›¥ TÖfÍ RÖÁ A‡TŸ NŸRÖ¡ T†‡¡ÛL JÁ¿eh A¸†R ÚTyz›¥ i½ ›£TRÖY‰:-
˜•ÛT RÖehR¨eh TÖfÍRÖÁ LÖWQ• A¥X. RY¿RXÖL TÖfÍ RÖÄeh RPÛ] A¸eL ÚYPÖ•. TÖfÍRÖÁ —‰ ÚTÖŸ ÙRÖ|eL ÚYPÖ•.
C‹R ‘WÖ‹‡V†‡¥ ˆ«WYÖ‡L· TX• YÖš‹R YŸL[ÖL C£efÖŸL·. S• —‰ ÚTÖŸ ÙRÖ|eh• Ne‡ E·[YŸL· AYŸL·. C£ SÖ|Lºeh• CÛPÚV —|• ÚTÖŸ ™º• ATÖV†ÛR AYŸL· H¼T|†‡ Y£fÖŸL·. AYŸLÛ[ J|eL SÖ• J£jfÛQ‹‰ ÚTÖWÖP ÚY|•.
CªYÖ¿ N‹RÖ¡ i½·[ÖŸ.
விமானத்தை கடத்த தீவிரவாதிகள் சதி-உளவுத்துறை எச்சரிக்கை
AÚVÖ†‡›¥ 16 B| Lºeh ˜Á“ zN•TŸ UÖR• 6-‹ ÚR‡ TÖTŸ Us‡ CzeLTyP‰.
C‹R ‡]†ÛR ‰eL SÖ[ÖL pX ˆ«WYÖR AÛU“L· LÛP‘zefÁ].
zN•TŸ 6-‹ ÚR‡ N•T Y†‰eh T³eh T³YÖjL RÖehR¥ SP†RÚTÖYRÖL ˆ«WYÖ‡L· JªÙYÖ£ B|• –WyP¥ «|T‰ YZeL•. C‹R B| LP‹R YÖW• ˜•ÛT›¥ SÖNÚYÛX›¥ D|TyP ˆ«WYÖ‡L· —|• J£ ÙT¡V RÖehRÛX SP†RÚTÖYRÖL C-ÙU›¥ AÄ‘ –Wyz E·[]Ÿ.
TÖTŸ Us‡ Cz“ ‡]†ÛR ˜ÁÂy| C‹R RÖehR¥ SP†RTPXÖ• GÁ¿ U†‡V E[°†‰Û GoN¡†‰·[‰. LWÖop ›¥ C£‹‰ C‹‡VÖ°e h· F|£«V 35 ˆ«W YÖ‡L¸¥ 10 ÚTŸ T¼½† RÖÁ ÙR¡V Y‹‰·[‰. U¼ 25 ÚTŸ Gjh T‰jf E·[]Ÿ GÁ¿ ÙR¡V «¥ÛX.
A‹R ˆ«WYÖ‡L· «UÖ] ŒÛXV• A¥X‰ ‰Û˜L†‡¥ RÖehR¥ SP†Rei|• GÁ¿ AtNT|f‰. CR¼fÛPÚV ˆ«WYÖ‡L¸¥ J£ ‘¡ «]Ÿ «UÖ]†ÛR LP†‡ SÖNÚYÛXeh ˜V¼p ÙNšVei|• GÁ¿ E[ °†‰Û›]Ÿ GoN¡†‰·[]Ÿ.
CÛRV|†‰ «UÖ]† ‰Û EVŸ A‡LÖ¡L· ÚS¼¿ AYNW BÚXÖNÛ] SP†‡]ÖŸL·. C‹R iyP†‰eh «UÖ] ÚTÖehYW†‰† ‰Û ÙNVXÖ[Ÿ UÖRYÁ S•‘ VÖŸ RÛXÛU RÖjf]ÖŸ. ˆ«W YÖ‡L· N‡ÛV ˜½VzeL ÚRÛYVÖ] TÖ‰LÖ“ H¼TÖ|L· ÙNšV iyP†‡¥ «YÖ‡e LTyP‰.
SÖÙPjh• E·[ «UÖ] ŒÛXVjL· ˜µ A[«¥ EcÖŸT|†RTy|·[].
ரத்தன் டாடா பிரதமராக வேண்டும்!
நன்றி: Rajesh Jain’s Blog
அசாதாரண தருணங்களில் அசாதாரண நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. அதுவும் அசாதாரண தலைமையின் கீழ் அது நடந்தால்தான் அவை சாத்தியமாகும்.
மீண்டும் ஒருமுறை இந்திய அரசியல் தலைமை நமக்கு தோல்வியைக் கொடுத்துள்ளது. இரு முனைகளில் நாம் இப்போது நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோரம். ஒன்று தீவிரவாதம், இன்னொன்று பொருளாதாரம்.
பெருகி வரும் தீவிரவாதத் தாக்குதல்களால் இந்தியாவின் உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் சிதறிப் போகும் வாய்ப்புள்ளது. இந்தியாவின் வளர்ச்சி தடைபட்டால், லட்சக்கணக்கான இந்தியர்களின் கனவுகள் தவிடுபொடியாகும் அபாயம் உள்ளது.
இந்த நிலையை நாம் தாண்டி வர வேண்டும் என்றால், மிகப் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. மேல் மட்டத்திலிருந்து இந்த மாற்றம் நிகழ வேண்டும். புதிய அரசியல் சக்தியை உருவாக்கும் வல்லமை நம்மிடம் இல்லை. அதற்கான வசதியும் இல்லை. அதற்கு பல ஆண்டுகளாகும்.
நமக்கு இப்போது என்ன தேவையென்றால், என்.எஸ்.ஜி. வீரர்களைப் போல அதிரடியான ஒரு நடவடிக்கை. மும்பை தாக்குதலில் போலீஸார் லத்தியுடன் தடுமாறிக் கொண்டிருந்தபோது மின்னலென வந்து, தீவிரவாதிகளுடன் கடுமையாக சண்டையிட்டு அனைத்தையும் காலி செய்து விட்டு ஹோட்டல்களை திருப்பிக் கொடுத்து விட்டுப் போனார்களே, அதுபோல, ஒரு விரைவான அதிரடியான மாற்றம் தேவை.
அதைச் செய்ய சரியான நபர் ரத்தன் டாடா மட்டுமே. டாடா இங்கேயே இருக்கிறார், உடனடியாகவும் கிடைப்பார். இந்த மாற்றத்திற்காக நாம் பல ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை.
இந்தியாவின் ஜனநாயகத்தில் 3 முக்கிய குழப்பங்கள் அல்லது பிரச்சினைகள் உள்ளன. ஒன்று அரசியல்வாதிகள். அரசியல் துறையை முற்றிலும் தூய்மைப்படுத்த வேண்டியுள்ளது.
2வது அதிகாரவர்க்கம். பிரிட்டிஷ் காலத்து ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்களுடன் உலவிக் கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்துப் போக்கை மூட்டை கட்டி வைக்க வேண்டும் அல்லது கலைத்துப் போட வேண்டும்.
3வது கல்விக்கு அதிக முதலீடு. இது நடந்தால் நிச்சயம் நல்லவர்களை அரசியலுக்குத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் கொண்ட பலரை நம்மால் உருவாக்க முடியும்.
இந்த இடத்தில்தான் ரத்தன் டாடாவை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவரிடம் ஐந்து ஆண்டுகள் நாட்டை ஒப்படைக்கலாம். அந்தக் காலத்தை அவரும், அவரது டீமும் திறமையாக பயன்படுத்தி, சிறந்த கொள்கைகள், சிறந்த நிறுவனங்கள், சிறந்த அடிப்படைக் கட்டமைப்பு, சிறந்த ஆட்சி ஆகியவற்றைத் தருவார்கள். நிச்சயம் இது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும்.
ரத்தன் டாடா தலைமையிலான அரசு வந்தால் ..
– தேசிய பாதுகாப்பு சிறப்பாக இருக்கும்.
– அடிப்படைக் கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மாறும். நல்ல சாலைகள், அதி வேக ரயில்கள், மின் உற்பத்தி ஆலைகள் எல்லாமே சிறப்பாக மாறும்.
– தரமான கல்விக்கு வழி பிறக்கும்.
– கல்வி நிறுவனங்கள் நேர்மையாகவும், சிறந்த தரத்துடனும் விளங்கும்.
– 6000 புதிய நகரங்கள் உருவாகும்.
வித்தியாசமான சிந்தனைகளும், விவேகமான தீர்மானங்களும்தான் இப்போதைய முக்கிய தேவை.
பாஜகவும், காங்கிரஸும் தங்களது மோதல்களை மறந்து, ரத்தன் டாடாவையும், 300 தரமான எம்.பிக்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முன்வர வேண்டும்.
ராகுல் காந்தியும், நரேந்திர மோடியும், மாயாவதியும் 2014ம் ஆண்டு வரை காத்திருக்கட்டும், பரவாயில்லை. அதற்குள் டாடா தலைமையில் நாடு விஸ்வரூப வளர்ச்சியைக் கண்டிருக்கும். அவர்களுக்கு அது வசதியான இந்தியாவாகவும் இருக்கும். எனவே அவர்கள் காத்திருக்கலாம்.
இது நிச்சயம் சாத்தியமானதல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மும்பையில் நடந்து என்ன. யாரும் எதிர்பாராத புதிய வகை தீவிரவாதத் தாக்குதல். எனவே ரத்தன் டாடா பிரதமர் என்பதும் சாத்தியமாகக் கூடியதுதான்.
பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய, தீர்வுகளுடன் இருக்கக் கூடிய ஒரு தலைமையிடம் நமது நாட்டை சில காலம் ஒப்படைப்போம். நமக்காக பாடுபடக் கூடிய ஒருவரிடம் ஒப்படைப்போம்.
இந்தியாவை கடந்த 60 ஆண்டுகளாக அரசியல்வாதிகளிடம் கொடுத்து விட்டோம். அடுத்த 5 ஆண்டுக்கு டாடாவிடம் கொடுக்கலாமே.
முன்பு வெள்ளையர்களின் ஆட்சியிலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என்பதற்காக ஒரு தனி மனிதரின் பின்னால் நமது நாட்டு மக்கள் அணி திரண்டார்கள். ஒற்றுமையுடன், ஒரே குரலில் உரத்து முழக்கமிட்டார்கள். அதேபோன்ற தருணம் இப்போதும் வந்துள்ளது.
சாதனைகளை மட்டுமே சொந்தமாக வைத்திருக்கும் ரத்தன் டாடா நம்மிடம் உள்ளார் என்பதே பலமான விஷயம். எனவே அவரிடம் ஆட்சியைக் கொடுப்போம். புதிய இந்தியாவை சேர்ந்து உருவாக்குவோம்.
கார்- டூ வீலர் விற்பனை கடும் சரிவு
டெல்லி: ஆட்டோ தொழில்துறை தொடர்ந்து சரிவில் இருந்து வருகிறது. நவம்பர் மாத கார் மற்றும் டூவீலர் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
முன்னணி கார் நிறுவனங்களான மாருதி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மகிந்திரா- மகிந்திரா ஆகிய நிறுவனங்களுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
அதேபோல டூவீலர் நிறுவனங்களும் கூட சரிவை சந்தித்துள்ளன. ஹீரோ ஹோண்டா நிறுவனத்தைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் நவம்பர் மாதம் கசப்பான அனுபவே கிடைத்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்திற்கு கார் விற்பனையில் நவம்பர் மாதம் 27.4 சதவீத சரிவு காணப்பட்டது. மொத்தம் 47 ஆயிரத்து 103 கார்களே விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனை அளவு 64 ஆயிரத்து 885 கார்களாக இருந்தன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை 14 ஆயிரத்து 327 ஆக இருந்தது. அதே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆயிரத்து 322 ஆக இருந்தது. விற்பனையில் சரிவு 12.22 சதவீதம்.
மகிந்திரா – மகிந்திரா நிறுவனத்திற்கு 41.55 சதவீத சரிவு காணப்பட்டது. கடந்த ஆண்டு 17 ஆயிரத்து 844 கார்களை விற்ற இந்த நிறுவனம் இந்த நவம்பர் மாதத்தில் 10 ஆயிரத்து 430 கார்களையே விற்றுள்ளது.
ஹோண்டா நிறுவனம் மட்டும் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் லாபம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4,425 கார்களை விற்ற இந்த நிறுவனம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 5,090 கார்களை விற்று 15 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
பெருகி வரும் வட்டி விகிதம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்டவையே இந்த மந்த நிலைக்குக் காரணம் என தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
டூவீலர் பிரிவில் ஹீரோ ஹோண்டா நிறுவனம் சற்று தப்பியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 20 டூவீலர்களை விற்ற இந்த நிறுவனம் இந்த ஆண்டு 2 லட்சத்து 89 ஆயிரத்து 426 டூவீலர்களை விற்றுள்ளது.
மற்றபடி பஜாஜ் ஆட்டோவுக்கு 37 சதவீத சரிவும், டிவிஎஸ் நிறுவனத்திற்கு 12.7 சதவீத சரிவும் காணப்பட்டது.
கடல் வழி தாக்குதல்-2 முறை இந்தியாவை எச்சரித்த யுஎஸ்
வாஷிங்டன்: மும்பை மீது கடல் மார்க்கமாக தாக்குதல் நடக்கும் என இந்தியாவை, 2 முறை அமெரிக்க உளவுத்துறை எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு அமெரிக்கா, இந்தியாவை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சிஎன்என் வெளியிட்டுள்ள செய்தியில், கடல் மார்க்கமாக மும்பை தாக்கப்படலாம் என ஒரு மாதத்திற்கு முன்பே அமெரிக்க தீவிவராதத் தடுப்புப் பிரிவு, இந்திய அரசை எச்சரித்திருந்தது.
ஒரு முறை அல்ல, இரு முறை இந்த எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. குறிப்பாக தாஜ் மஹால் ஹோட்டல் தாக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டு அமெரிக்க உளவுத்துறை எச்சரித்திருந்தது.
மும்பைக்குள், கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்கலாம் எனவம், இதுதொடர்பாக விழிப்புடன் இருக்குமாறும் இந்தியாவை அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கடல் பகுதியில் இந்திய அதிகாரிகள் பாதுகாப்பையம், கண்காணிப்பையம் தீவிரப்படுத்தியிருந்தனர். ஆனால் படிப்படியாக இது பின்னர் குறைந்து விட்டது. இதுவே தீவிரவாதிகள் எளிதில் நுழைய காரணமாகி விட்டது.
மேலும், நவம்பர் 18ம் தேதி இந்திய உளவுப் பிரிவினர், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஒரு முக்கியத் தலைவரின் தொலைபேசி பேச்சை ஒட்டுக் கேட்டுள்ளனர்.
அதில் கடல் மார்க்கமாக தாக்குதல் நடத்தப்படும் என்ற செய்தியும் இந்திய உளவுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது என்று அந்த செய்தி கூறுகிறது.
2007-08: காபி ஏற்றுமதியில் 2.9% சரிவு
டெல்லி: 2007-08ம் ஆண்டு காலத்தில் உலக காபி ஏற்றுமதியில் 2.9 சதவீத சரிவு காணப்பட்டது. இந்தியாவின் ஒட்டுமொத்த வெளிநாட்டு விற்பனை அளவும் 4.31 சதவீதம் குறைந்து காணப்பட்டது.
2007-8ம் ஆண்டில், உலகளவில் 9.51 கோடி ‘பேக்’ காபி ஏற்றுமதியாகியுள்ளன. இந்தியாவின் வெளிநாட்டு விற்பனை அளவு இதே காலகட்டத்தில் 20.4 லட்சம் பேக் காபி ஆகும். ஒரு பேக் என்பது 60 கிலோ காபி அடங்கியது.
2006-07ம் ஆண்டில், உலக அளவிலான காபி ஏற்றுமதியின் அளவு 9.79 கோடி பேக்குகளாக இருந்தன.
2007-08ம் ஆண்டில், அரபிகா வகை காபி ஏற்றுமதியின் மொத்த அளவு 6.25 கோடி பேக்-களாக இருந்தது. ரொபஸ்டா வகை காபியின் ஏற்றுமதி ஏஅளவு 3.26 கோடி பேக்-களாக இருந்தது. உலக அளவில் காபி ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா. இந்தியாவிலிருந்து 2007-08ம் ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதத்தில், 10.7 லட்சம் பேக் ரொபஸ்டா காபியும், 7 லட்சத்து 40 ஆயிரம் பேக், சாதாரண வகை காபியும் ஏற்றுமதியாகியுள்ளன.
உலகின் முன்னணி காபி ஏற்றுமதியாளரான பிரேசிலில் காபி ஏற்றுமதியின் அளவு 4.17 சதவீத சரிவைக் கண்டுள்ளது.
2வது இடத்தில் உள்ள தான்சானியா 7.82 சதவீத வீழ்ச்சியும், 3வது நாடான காமரூனில் 23.13 சதவீத வீழ்ச்சியும் காணப்பட்டது.
ஆனால், பாபுவா நியூகினியா, உகாண்டா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காபி ஏற்றுமதியின் அளவு 36 சதவீத உயர்வைக் கண்டுள்ளது.
யுஎஸ் பொருளாதாரம் தேக்கம்: 2007லிலேயே தொடங்கி விட்டது-குழு
வாஷிங்டன்: அமெரிக்க பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்த சரிவு 2007ம் ஆண்டிலேயே தொடங்கி விட்டதாக தேசிய பொருளாதார ஆய்வு குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் இதுவரை சந்தித்திராத சரிவு நிலைக்குப் போய் விட்டது. ஆனால் இந்த சரிவு திடீரென ஏற்பட்டதல்ல, கடந்த ஆண்டே இது தொடங்கி விட்டதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது. 2ம் உலகப் போருக்குப் பின்னர் இப்போதுதான் முதல் முறையாக அமெரிக்க பொருளாதாரம் பெரும் அடியை சந்தித்துள்ளதாகவும் இந்த குழு தெரிவிக்கிறது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள கமிட்டி உறுப்பினர்கள் கூட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது
தற்போதைய பொருளாதார சரிவு நிலை அடுத்த ஆண்டு மத்தி வரை நீடிக்கும். இதற்கு முன்பு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதில்லை 70களில் ஒரு முறையும், 80களில் ஒருமுறையும் பொருளாதாரம் சரிந்தது. ஆனால் அவற்றை விட இப்போதுதான் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த சரிவு மேலும் ஆழமாகக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் இதைத் தாண்டி நாம் போயாக வேண்டும். இந்த சரிவு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதை கணிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் உற்பத்திக் குறைவு பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் பாதியில் ஜிடிபி விகிதம் சிறப்பானதாகவே இருந்தது. 2007ம் ஆண்டு டிசம்பர் வரை ஊதிய உயர்வு அதிகரித்தவண்ணம் இருந்ததாக கூறும் இந்தக் குழு, அதன் பின்னர் மாதந்தோறும் ஊதியக் குறைவு நிலவி வருவதாக தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்திற்குப் பிறகுதான் பொருளாதார சரிவு விஸ்வரூபம் எடுத்ததாகவும் அது தெரிவிக்கிறது.
இந்தக் குழுவின் அறிக்கையை அமெரிக்க வெள்ளை மாளிகை ஏற்றுக் கொண்டுள்ளது. பொருளாதார சரிவையும் அது ஒப்புக் கொண்டுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டோனி பிராட்டோ கூறுகையில், பொருளாதார சரிவு உண்மைதான். இதை ஏற்றுக் கொள்கிறோம். அதேசமயம், நிதி நிலைமை மேம்படும் என நம்புகிறோம். கடன் சந்தைகள் சகஜ நிலைக்குத் திரும்பும் என நம்புகிறோம். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் நிலைமை மேம்படும் என எதிர்பார்க்கிறோம். அந்த சாதக நிலையை மனதில் கொண்டு அரசு செயல்படும் என்றார்.
இதற்கு முன்பு ரிச்சர்ட் நிக்ஸன் அதிபராக இருந்தபோதுதான் அமெரிக்காவில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போது புஷ்ஷுக்கு அந்தப் பெருமை கிடைத்துள்ளது.
பணப்புழக்கத்தை அதிகரிக்க தைரியமான நடவடிக்கை-ரத்தன் டாடா
அமெரிக்கா செய்தி தொலைகாட்சியான சி.என்.என் செய்தியாளர் ஃப்ரிட் ஜகாரியாவிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், வங்கிகளில் அரசுகள் பணத்தை புழக்கத்தில் விடுவதுடன், இது நுகர்வோருக்கு கடன் கிடைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றார்.
பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தையும், வளர்ச்சி பாதிப்பையும், இந்தியா எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்ற கேள்விக்கு ரத்தன் டாடா பதிலளிக்கையில், மேற்கு நாடுகள் (அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்) பாதிக்கப்பட்டுள்ள அளவிற்கு, இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்காது என்று நினைக்கின்றேன்.
இந்திய நிதி சந்தையில் அரசு போதுமான முதலீடு செலுத்தி, கடன் கிடைக்க செய்தால், நாங்கள் உள்நாட்டு பொருளாதார நிலைமைக்கு தகுந்த மாதிரி, அதிக பாதிப்பு இல்லாமல் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டுவோம்.
இந்தியாவில், மற்ற நாடுகளை போன்று வீடு அடமான கடன் நெருக்கடியோ அல்லது திவாலா ஆகும் நிலைமையோ இல்லை. இந்தியாவின் பொருளாதாரம் தேவையான அளவு வளர்ச்சி அடைவதற்கு தகுந்தாற் போல், உள்நாட்டு தேவைகள் உள்ளது என்று ரத்தன் டாடா கூறினார்.
மும்பை தாக்குதலால் சுற்றுலா துறைக்கு பாதிப்பு வரும்
என் மனைவி, எனது மக்கள் என்று குறிப்பிட்ட நபர்களைத் தான் கூறுவோம். அது போல எனது நகரம் என்று எல்லாரும் பெருமையாக கூறுவது அவர்களுக்கு பிடித்த நகரத்தை. பலருக்கும் பிடித்தமான மும்பை நகரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நிகழ்வுகள் மனதில் மறையாத வடுக்கள். மும்பைக்கு சுற்றுலா வரும் ஒவ்வொருவரும் தவறாமல் பார்ப்பது சில இடங்களை. அதில் குறிப்பிடத் தகுந்த இடங்களில் மூன்று. கேட்வே ஆப் இந்தியா, நாரிமன் பாயிண்ட், வி.டி.ரயில்வே நிலையம்.( இப்போது அதன் பெயர் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அதாவது மும்பை சி.எஸ்.டி.,) மும்பைக்கு சுற்றுலா வரும் ஒவ்வொருவரும் தவறாமல் பார்ப்பது இந்தியாவின் நுழைவு வாயிலை (கேட்வே ஆப் இந்தியா). அதைப் பார்க்க பலர் கடலுக்குள் படகு மூலம் ஒரு ரவுண்ட் சென்று வருவர். அப்படிச் செல்லும் போது, கடலுக்குள் இருந்து பார்க்கும் போது தெரியும் தாஜ் ஓட்டலின் அழகே தனி. மும்பைக்கு அதுதான் தாஜ்மஹால். 100 வருடங்களுக்கு மேலான பாரம்பரியம் உள்ள ஓட்டல். உலகிலேயே அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட ஓட்டல்களில் இது முதலிடம் வகித்தாலும் ஆச்சரியமில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து தாஜ் ஓட்டல்களும் டாடாவிற்கு சொந்தமானவை. ஒரு முறை ஜாம்ஜெட்ஜி டாடா வெளிநாட்டில் வாட்சன் ஓட்டலில் சென்று ரூம் கேட்ட போது அவருடைய தோலின் நிறத்தைப் பார்த்து ரூம் இல்லை என்று சொல்லப்பட்டது (நம் வள்ளல் அழகப்ப செட்டியார் மும்பை வந்திருந்த போது ரிட்ஜ் ஓட்டலில் தங்க வேண்டி ரூம் கேட்ட போது, ரூம் இல்லை என்று மறுக்கப்பட்டது. உங்களது ஓட்டல் என்ன விலை, ஒரே செக் கொடுத்து விடுகிறேன் என்று அவர் சொன்னார் என்பது வரலாறு). அந்த வெளிநாட்டு பயணத்திலிருந்து வந்தவுடன் மும்பையில் ஒரு ஓட்டல் கட்டவேண்டும் என்ற எண்ணத்தில் கட்டப்பட்டது தான் தாஜ் ஓட்டல். உலகத்தின் பிரபலமானவர்கள் அனைவரும் மும்பையில் பெரும்பாலும் விரும்பித் தங்குவது இந்த ஓட்டலில் தான். பழைய தாஜ் (ஹெரிடேஜ் விங்), புதிய தாஜ் என இரு ஓட்டல்கள் ஒரே இடத்தில் இருந்தாலும், பழைய தாஜில் தங்குவதற்கு கட்டணம் அதிகம். ஒரு இரவுக்கு ரூபாய் 15,000க்கு மேல். அந்த புராதான தாஜ் மேல் பகுதியில் ஒரு டோம் உள்ளது (கோவிலின் கோபுரம் போன்று உள்ள பகுதி). அங்கு உள்ள பிரசிடன்சியல் சூட் தான் உலகத்திலேயே அதிக கட்டணம் உள்ள ரூம்களில் ஒன்று. நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம். உலகத்தின் பெரிய பணக்காரர்கள், பெரிய தலைவர்கள், அதிகாரிகள் என்று பலரும் இந்த டோம் சூட்டில் தங்கியுள்ளனர். அவ்வளவு பிரபலமானது. அந்த டோம் கடந்த வார தாக்குதலில் பற்றி எரிந்த போது பலரின் மனதும் எரிந்தது என்னவோ உண்மை தாஜ் ஓட்டலுக்கும், கேட்வே ஆப் இந்தியாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் சமாதான புறாக்கள் எப்போதும் இருக்கும். சுற்றுலாப் பயணிகள் போடும் கடலைகளை தின்று அங்கேயே வாழ்ந்து சமாதானத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்து வந்தன நூற்றுக்கணக்கான புறாக்கள். அந்த புறாக்களுக்கு நடுவே படுத்து கொண்டு இந்திய ராணுவ வீரர் தாஜ் ஓட்டலில் இருந்த பயங்கரவாதிகளை எதிர்கொண்டு இருந்தது ஒரு வித்தியாசமான காட்சி. சமாதான புறாக்களுக்கு நடுவே பயங்கரவாதத்தை ஒடுக்க படுத்திருந்த இந்திய ராணுவ வீரரும் ஒரு சமாதானப் புறாவாகத்தான் தெரிந்தார். குயின்ஸ் நெக்லஸ் எனப்படும் நாரிமன் பாயிண்ட் பகுதியில் கடலை பார்த்த படி அமைந்திருக்கும் ஒபராய் (டிரைடண்ட்) ஓட்டலும், லட்சக்கணக்கான மக்கள் தினசரி வந்து செல்லும் மும்பையின் வி.டி. ரயில்வே நிலையத்தையும் சேர்த்து பயங்கரவாதிகள் தாக்கிச் சென்றிருப்பதிலிருந்து, இது மிகவும் திட்டமிட்டு செய்யப்பட்ட தாக்குதல் என்று தெரிகிறது.
சாலை விதிகளை ஒழுங்காக கடைபிடிக்கும், சிக்னலை மதிக்கும், மிகவும் கடவுள் பக்தி உள்ள, மீட்டர் படி வரும் ஆட்டோக்கள், டாக்சிகள், அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதவர்கள் என்று பெரும்பாலும் இருப்பதால் மும்பையை எனக்கு பிடிக்கும். டிரைடண்ட் (ஒபராய் ஓட்டல்) இருக்கும் தெருவில் தான். 1992ல் மும்பை கலவரம் நடந்தது. லாத்தூர் பூகம்பம், ப்ளேக், பல வெடிகுண்டு சம்பவங்கள், பெரும் மழை, வெள்ளம் என பல சம்பவங்கள் நடந்திருந்தாலும், மும்பை ஒவ்வொரு முறையும் மறுநாளே ஒன்றும் நடக்காதது போல், இயல்பு நிலைக்கு திரும்பி விடுவது என்னை பலமுறை ஆச்சரியப்படுத்தியுள்ளது. பீனிக்ஸ் பறவை சாம்பலில் இருந்து உயிர்த்து எழுந்தது போல. இந்த முறையும் மறுநாளே அலுவலகங்களில் முழு அளவில் வருகை இருந்தது. மும்பையின் மூன்று பெரிய காவல் அதிகாரிகள் உட்பட கிட்டத்தட்ட 200 பேர் வரை வன்முறைக்கு உயிர் இழந்துள்ளனர். மும்பையில் பெரிய கலவரங்கள், வெள்ளங்கள் ஏற்பட்ட போதெல்லாம் பாதுகாப்பாக தங்க இது போன்ற ஓட்டல்களே சிறந்த இடம் என்று, பல பெரிய மனிதர்கள் தங்கும் இது போன்ற ஓட்டல்களுக்கே இந்த நிலைமை. விமான நிலையங்களில் உள்ளது போல பெட்டிகள் சோதனை செய்யப்படும் எக்ஸ்ரே மிஷன்கள் வைக்கப்பட்டிருந்தால் இந்த நிகழ்வுகளைத் தடுத்திருக்க முடியும். இந்த நிகழ்வுகளால், இந்தியாவில் முன்னேறி வந்து கொண்டிருந்த டூரிசம் துறை மிகவும் பாதிக்கப்படும். ஆனால், ஏற்றமும், இறக்கமும் வாழ்க்கையில் சகஜம் தான் என்று எடுத்துக் கொள்ள முடியாத நிகழ்வுகள்.
இரண்டே நாளில் ரூ. 50,000 கோடி இழப்பு
மும்பை: மும்பையில், பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை அடுத்து இரண்டு நாள் வர்த்தக இழப்பு மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய். சுற்றுலா பயணிகள் வருகை, ஓட்டல்கள் உட்பட பல்வேறு வகையில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மூன்று நாள் நகரமே முடங்கிய நிலையில், பல கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்கவில்லை. புதன் கிழமை இரவு , பயங்கரவாதிகள் அட்டாசம் ஆரம்பித்தது. அன்றும், மறுநாளும் சேர்த்து மட்டும், பங்குச்சந்தை, வர்த்தகம் ஆகியவற்றை கணக்கிட்டால், 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக தரப்பில் மேலோட்டமான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாளில், அதிரடிப்படையினர் முற்றுகை,கடைகள், நிறுவனங்கள் மூடல், மாமூல் வாழ்க்கை பாதிப்பு போன்றவற்றை கணக்கிட்டால், இழப்பு இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த நாட்களில் பங்குச்சந்தை மூடப் பட்டிருந்தது. நிதி நிறுவனங்களும் செயல்படவில்லை.மும்பையில் உள்ள 20 தியேட்டர்கள், 75 மல்டிப்ளக்ஸ்களில் ஒரு நாள் டிக்கெட் வசூல் இரண்டு லட்சம் ரூபாய். குளிர்பானங்கள் உட்பட விற்பனையால் தனி வருமானம் கிடைக்கும். ஆனால், இந்த பயங்கர நாட்களில் இங்கும் வருவாய் அடியோடு குறைந்து விட்டது. தாஜ், ஓபராய் உட்பட ஓட்டல்கள், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சேத மதிப்புகள் இன்னும் பல கோடிகளை தாண்டும் என்றும் மதிப்பிடப்படுகிறது. உலக அளவில், முதல் பத்து வர்த்தக நகரங்களில் மும்பை உள்ளது. இந்தியான் மொத்த உற்பத்தி அளவில் மும்பையின் பங்கு 5 சதவீதம். அன்னிய செலாவணி, வருமான வரி வசூல் மட்டும் 40 சதவீதம், வெளிநாட்டு வர்த்தகம் மூலம் 60 சதவீதம், எக்சைஸ் வரி வசூல் 20 சதவீதம் வருவாயை மும்பை தருகிறது.இது தவிர, வணிக நிறுவனங்கள் மூலம் வரி வருவாயாக 40 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறது. மும்பையின் தனி நபர் வருமானம் , தேசிய தனி மனித வருமானத்தை விட மூன்று மடங்கு. அதாவது, தனி நபர் ஆண்டு வருமானம் 49 ஆயிரம் ரூபாய்.
Recent Comments