Archive for November, 2008

மும்பை-ஆட்டோமொபைல் துறைக்கு மேலும் அடி!

டெல்லி: ஏற்கனவே விற்பனையில் படுத்துக் கிடக்கும் ஆட்டோமொபைல் துறைக்கு, மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் இன்னொரு பலத்த அடியைக் கொடுத்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறை, பெருகி வரும் வட்டி விகிதங்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக ரிவர்ஸ் கியரில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் வெந்த புண்ணில் வெடிகுண்டைப் போட்டது போல மும்பை தீவிரவாதத் தாக்குதல் வந்து சேர்ந்துள்ளது.

இந்தியாவின் மொத்த கார் விற்பனையில், மும்பையின் பங்கு மட்டும் 7 சதவீதமாகும். இங்கு மாதத்திற்கு 7000 கார்கள் விற்பனையாகின்றன.அதிலும் மாதக் கடைசியில்தான் பெரும்பாலான விற்பனை இருக்கும். ஆனால் இந்த மாதக் கடைசியில் தீவிரவாதிகள் புகுந்து பெரும் நாசம் ஏற்படுத்தி விட்டதால் கார் விற்பனை மகா மந்தமாகி விட்டதாம். கிட்டத்தட்ட கார் விற்பனையே இல்லை எனும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.

இதுகுறித்து ஹூன்டாய் மோட்டார் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆட்டோமொபைல் துறைக்கு இது மிகப் பெரிய அடியாகும். எங்களது முக்கிய மார்க்கெட்டாக மும்பை உள்ளது.

தீவிரவாதத் தாக்குதலால் ஆட்டோமொபைல் பிரிவுக்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும். வர்த்தகமும் தேக்க நிலையை சந்தித்துள்ளது என்றார்.

ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா துணைத் தலைவர் பாலேந்திரன் கூறுகையில், மும்பைக்கு வர வேண்டாம் என எங்களது நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.

எங்களது தயாரிப்புத் தொழிற்சாலை புனேவில் உள்ளது. எனவே மும்பை வழியாக புனே செல்வதை தவிர்க்குமாறு ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம். நேரடியாக புனே செல்லுமாறும் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.

அக்டோபர் மாதம் பயணிகள் கார் விற்பனை 6.59 சதவீதமாக குறைந்திருந்தது. மொத்தமே 98 ஆயிரத்து 900 கார்கள்தான் விற்பனையாகின. அதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 877 கார்கள் விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

November 30, 2008 at 2:23 PM Leave a comment

பங்குச் சந்தையை புரட்டிப் போட்ட மும்பை ‘அட்டாக்’- சேதுராமன் சாத்தப்பன்-

சோகங்கள் எல்லாம் மறக்கப்பட வேண்டியது தான். ஆனால், சோகங்களே வாழ்க்கையானால், வன்முறைக்கு மும்பை எப்போதுமே ஒரு டார்கெட்டாகவே இருந்து வந்திருக்கிறது. தற்போது, சில நாட்களில் ஏற்பட்ட வன்முறைகள் யாருக் கும், எந்த நாட்டுக்கும் வரக்கூடாத ஒரு நிகழ்வு. பங்குச் சந்தை வர்த்தகத்தையே வியாழனன்று நிறுத்தி வைக்க வேண்டிய சூழ் நிலை இருந்திருந்தால், நிலைமை எவ்வளவு மோசமாக இருந்திருக் கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். கடந்த பல வருடங்களில் பல முறை மும்பையில் இது போல வன்முறைகள் நடந்துள்ளன. ஆனால், ஒவ்வொரு முறையும் வன்முறைக்கு பிறகு, பங்குச் சந்தை வீறு கொண்டு எழுவது தான் வாடிக்கை. அது போலவே இந்தத் தடவையும் நடக்கும் என்று பலரும் கூறினர். மேலும், இது போன்ற நிகழ்வுகளை தொடர் நிகழ்வுகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஸ்டாண்டர்டு அண்ட் பவர் நிறுவனம் கூறியதும் சந்தைக்கு வலு சேர்த்தது. அது போலவே வெள்ளியன்றும் மும்பை பங்குச் சந்தை வீறு கொண்டு எழுந்தது. வன்முறைக்கு பயப்படவில்லை. ஆனால், டிரைவெட்டிவ் டிரேடிங் முடிவுக்கு வருவதால், சந்தை மேலும் கீழுமாக இருந்தது.சந்தை 278 புள்ளிகள் மேலும் கீழுமாக இருந்தது. முடிவாக, மும்பை பங்குச் சந்தை 66 புள்ளிகள் கூடி 9,092 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 3 புள்ளிகள் கூடி 2,755 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.பணவீக்கம் குறைந்து வருகிறது. அதாவது, சென்ற வாரம் 8.9 சதவீதமாக இருந்தது இந்த வாரம் 8.84 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இது, சமீபத்தில் ஏறியிருந்த கடந்த 16 வருடத்தின் அதிகபட்ச அளவான 12.91 சதவீதத்தை விட பல சதவீதங்கள் குறைவு என்பது ஒரு நிறைவு.பங்குச் சந்தை 56 சதவீதம் நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. ஆயில் 49 சதவீத நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. தங்கம் 5.5 சதவீதம் நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. இது தவிர, வங்கி டெபாசிட்கள் நிலையான வருமானத்தைக் கொடுத்துள்ளன.அமெரிக்காவில் பல கோடி டாலர்கள் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரேட் கட் செய்யலாம் என்று பலரும் எதிர்பார்க் கின்றனர். இரண்டாவது காலாண்டு முடிவில் இந்தியாவின் ஜி.டி.பி., 7.6 சதவீதமாக இருக்கிறது. பணவீக்கம் குறைந்து வருகிறது. இவையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, சந்தை குறைய வாய்ப்பில்லை. ஆனால், தற்போதைய சந்தையில் எது வேண்டுமானாலும் நடக்கிறது. ஏதாவது ஒரு பங்கை இந்த விலைக்கு வாங்காமல் விட்டு விட்டோமே; மறுபடி அந்த விலை வராதே என்று பலரும் நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், அந்த விலைக்கும் வந்து, அதை விடக் குறைந்த விலைக்கும் வருகிறது. அதுதான் பங்குச் சந்தை.

November 30, 2008 at 2:01 PM Leave a comment

வேலைக்கு ஆள் அனுப்பும் நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு

பெங்களூரு: சாப்ட்வேர் நிறுவனங்களில் மட்டுமல்ல, அவற்றில் வேலை செய்ய ஆட்களை அனுப்பும் கன்சல்டன்சி நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு அதிரடி நடந்து வருகிறது.சாப்ட்வேர் நிறுவனங்களின் தென்னக தலைநகராக இருந்து வரும் பெங்களூரு நகரில், டி.சி.எஸ்., இன்போசிஸ், சி.டி.எஸ்., சத்யம் போன்ற முன்னணி நிறுவனங்கள், அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்களைப் பெற்று சாப்ட்வேர் பணிகளை செய்து வந்தன.நிதி நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, பல நிறுவனங்களும் சாப்ட்வேர் பணிகளை செய்து கொள்ள விரும்பவில்லை. பல நிறுவனங்கள் மூடப்பட்டதால், அவற்றுக்கு சாப்ட்வேர் பணிகளை கவனித்து வந்தது நின்று போனது.வெளிநாட்டு நிறுவனங்களின் பணிகளை செய்து வந்த பல இந்திய பி.பி.ஓ., அலுவலகங்களில் பணிகள் இல்லாததால், வருமானம் அடிபட்டது. இதனால், ஆட்களைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.சாப்ட்வேர் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படவில்லை; நடுத்தர, சிறிய சாப்ட்வேர் நிறுவனங்கள் தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.பெங்களூரு நகரில் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் கன்சல்டன்சி நிறுவனங்கள் புற்றீசல் போல பரவி இருந்தன. ஆனால், நெருக்கடி ஆரம்பித்த நிலையில், இவற்றின் தேவை குறைய ஆரம்பித்தது.நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி கன்சல்டன்சி நிறுவனங்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுத்து வந்த சாப்ட்வேர் நிறுவனங்கள், இப்போது ஆட்களைக் குறைக்கும் அதிரடி சிக்கனத்தில் இறங்கி விட்டன. இதனால், கன்சல்டன்சி நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது; அவற்றின் வருமானமும் குறைந்து விட்டதால், கன்சல்டன்சி நிறுவனங்களிலும் ஆட்களைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பெங்களூரு நகரில் சிறிய அளவில் இயங்கி வந்த கன்சல்டன்சி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஓரளவு சமாளிக்கக் கூடிய கன்சல்டன்சிகள் மட்டும், 10ல் இருந்து 30 சதவீதம் வரை ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளன.கன்சல்டன்சி நடத்தி வரும் பிரவீன் சாஸ்திரி கூறுகையில், ‘இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுக்கு காலாண்டுக்கு 500க்கு மேல் ஆட்களை அனுப்பி வந்துள்ளோம். ஆனால், இப்போது நிலைமை மோசமாகி விட்டது. எங்கள் அலுவலக கிளைகளிலேயே ஆட்களை குறைத்து விட்டோம். இன்னும் சில மாதங்களில் இந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்தார்.

November 30, 2008 at 2:00 PM Leave a comment

வைர நகைகள் விலை 20 சதவீதம் குறையும்

மும்பை: வைர நகைகள் விலை அடுத்த சில மாதங்களில் 20 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைரத்தொழிற்சாலைகள் ஏற்கனவே பெரும் நெருக்கடியில் உள்ளன. வைரம் வாங்குவது குறைந்ததால் உற்பத்தி குறைய ஆரம்பித்து விட்டது. இதோடு, நிதி நெருக்கடி வேறு வைர உற்பத்தியையும் பாதிக்க வந்து விட்டதால், வைர தயாரிப்பு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில், வைர விற்பனை சரிந்து கொண்டிருப்பதால், அடுத்த சில நாளில் வைர விற்பனை விலை 20 சதவீதம் குறைய ஆரம்பிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்தியாவிலும் இன்னமும் இதற்கு மவுசு உள்ளதால், இதன் விலை சில மாதங்களில் குறைந்து விடும் என்றும் தெரிகிறது.சர்வதேச அளவில் பட்டை தீட்டப் பட்ட வைரம் விலை 5 சதவீதம் குறைந்துவிட்டது. விலை சரிவு ஆரம் பித்து விட்டதால், அடுத்த சில மாதங்களில் இந்த நிலை இன்னும் அதிக அளவில் இருக்கும் என்று வைரத் தயாரிப்பாளர்கள் எண்ணுகின்றனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் வைரத் தொழில் சுருங்கி வருகிறது. வைரம் வாங்குவதை பலரும் குறைத்துக்கொண்டதே இதற்கு காரணம். டில்லியில் பிரபல வைர விற்பனை நிறுவனம், இண்டியா கேபிடல் தலைவர் சஞ்சய் ஷா கூறுகையில், ‘வைர விற்பனைக்கு திடீரென பாதிப்பு ஏற்படவில்லை. ஏற்கனவே சில மாதங்களாகவே விற்பனை மந்தமாகத்தான் இருந்து வருகிறது. தொழில் இன்னும் மோசமான நிலைக்கு போகும் என்று அஞ்சுகிறோம்’ என்று தெரிவித்தார்.’இப்போது எல்லா வகையிலும் நெருக் கடியான நிலை உள்ளது. இதில் சமாளித்து தான் தொழில் செய்ய வேண்டும். இதை நாங்கள் கற்றுக்கொண்டு விட்டோம். நிலைமை சீராகலாம் என்று நம்பிக்கை உள்ளது’ என்று வைரம் மற்றும் அரிய கற் கள் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் வசந்த் மேத்தா கூறினார். இந்தியாவில் வைரத் தொழில் நசிய காரணம், அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்ததால், லாபம் கடித்தது; இதனால் தொழிலாளர்கள் குறைக்கப்பட வேண்டியதாகிவிட்டது. மேலும், பட்டை தீட்டும் தொழில்கள், வேறு நாடுகளில் அதிக அளவில் ஆரம் பித்ததும் இந்த நெருக்கடிக்கு காரணம்.

November 30, 2008 at 1:59 PM Leave a comment

வாங்க ஆளில்லாததால் பல மாடிக்குடியிருப்புகள் முடக்கம்: பிரபல நிறுவனங்கள் தவிப்பு

புது டில்லி: பல லட்சம் ரூபாய் போட்டு வாங்க ஆளில்லாததால், 70 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பல மாடிக்குடியிருப்புகள் எல்லாம் பூட்டியே கிடக்கின்றன. டில்லி, மும்பை மட்டுமின்றி, சென்னையிலும் இந்த நிலை தான் நீடிக்கிறது. சர்வசேத நிதி நெருக்கடியால், கட்டுமான திட்டங் களும் முடங்கிப்போயுள்ளன. சாப்ட்வேர் உட்பட பல துறை நிறுவனங்களில், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய நிலை போய், இப்போது பலரும், எப்போது வேலை போகுமோ என்று பயந்த வண்ணம் உள்ளனர்; அதனால், எதிலும் முதலீடு செய்ய அவர்கள் தயாரில்லை. அது மட்டுமின்றி, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வேறு நெருக்கடியில் சிக்கியுள்ளதாலும், கிரெடிட் கார்டு பாக்கி, கடன் பாக்கி என்று பொது மக்களிடம் இருந்து சரியாக வராததால், கதி கலங்கிப்போயுள்ளன. அதனால், வீட்டுக்கடன் கொடுப்பதில் கடும் கெடுபிடிகளை போட்டுள்ளன. வங்கிகள் கடன் தருவதில் கட்டுப்பாடு, வாங்க ஆளில்லாத நிலை போன்ற காரணங்களால், டில்லி, மும்பை, சென்னை , பெங்களூரு நகரங்களில் கட்டப்பட்ட வானளாவ பலமாடிக்குடியிருப்புகளில், வீடுகள் 50 சதவீதம் விற்காமல் பூட்டி கிடக்கின்றன. இதனால், புதிய திட்டங்களை ஆரம்பிப்பதில் பல முன்னணி நிறுவனங்களும் தயக்கம் காட்டுகின்றன. பங்குச்சந்தையில், பங்குகளை வெளியிட்டசில மணி நேரத்தில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய டி.எல்.எப்.,நிறுவனம், தன் பல திட்டங் களை ஆறு மாதம் தள்ளிப்போட்டுள்ளது. அது போல, பார்ஸ்வநாத் டெவலப்பர்ஸ் நிறுவனமும் தன் திட்டங்களை தள்ளிப்போட்டுள்ளது. டில்லியில் குர்கான் பகுதியில் அடுத்த மாதம் முடிக்க வேண்டிய கட்டுமான திட்டங்கள், அடுத் தாண்டு மார்ச் வரை தள்ளிப்போடப்பட்டுள் ளது. வாடிக்கையாளர்கள் வாங்குவதில், தாமதம் ஆவது தான் காரணம். சென்னையிலும், இந்த நிலை தான் காணப்படுகிறது. சாப்ட்வேர் நிறுவன ஊழியர்களிடம் விற்று விடலாம் என்று கணக்கு போட்டு பல இடங்களில் கடன் வாங்கி, கட்டப் பட்ட பல மாடிக் குடியிருப்புகளில் பல வீடுகள் விற்கப்படாத நிலை நீடிக்கிறது. நிதி நெருக்கடியில் தாக்கு பிடிக்க முடியாத பில்டர்கள், வேறு பில்டர்களுக்கு மாற்றிக்கொடுக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. டில்லியில், டி.எல்.எப்., யுனிடெக், பார்ஸ்வநாத் நிறுவனங்களின் திட்டங்கள் முடங்கிப்போயுள்ளன. டி.எல்.எப்.,பின் பினாகில், ஐகான் திட்டங்கள் இப்போது முடிந்திருக்க வேண்டும்; இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. பெங்களூரு நகரில் பிரஸ்டீஜ் குரூப், மந்த்ரி குரூப், காத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் ஆகிய நிறுவனங்களின் திட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

November 30, 2008 at 1:55 PM Leave a comment

ஏற்றுமதி சலுகை கடன் நீடிப்பு

பொருளாதார வளர்ச்சி பாதிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன் படி, ஏற்றுமதியாளர்கள், சரக்குகளை அனுப்பியதற்கு பிறகு, அந்த சரக்கு மதிப்பில் குறிப்பிட்ட விழுக்காடு சலுகை வட்டியில் கடனாக வழங்கப்படுகின்றன. இந்த கடன் முன்பு சலுகை வட்டியில் மூன்று மாதங்கள் (90 நாட்கள்) வரை வழங்கப்பட்டது. இது தற்போது 6 மாதங்களாக (180 நாட்கள்) வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

இத்துடன் வங்கிகள். அவற்றின் மொத்த வைப்புத் தொகையில் 1 விழுக்காடு வரை சிறப்பு கடன் அளிக்கும் திட்டத்தின் கீழ் மேலும் 90 நாட்கள் வரை (2009-ஜீன் 30 வரை) கடன் பெறலாம்.

வங்கிகள் வீட்டு வசதி கடன், மியூச்சுவல் பண்ட், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் போன்றவைகளுக்கு கடன் வழங்கும் வகையில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால கடன் பெற (ரிபோ) ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ளது. வங்கிகளிடம் உள்ள கடன் பத்திரங்களில் 1.5 விழுக்காடு வரை ரிசர்வ் வங்கியில் அடமான வைத்து கடன் பெற அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதற்கான காலக்கெடு அடுத்த வருடம் ஜீன் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

அயல் நாடுகளில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த வங்கிகளின் கிளைகள், அவற்றின் அந்நியச் செலவாணி தேவைக்கு ரிசர்வ் வங்கியிடம் அந்நியச் செலவாணி பெறுகின்றன. இவை மூன்று மாதகாலத்திற்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறு அந்நியச் செலவாணி வழங்குவது 2009-ஜீன் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியாளர்கள், சரக்குகளை அனுப்பியதற்கு பிறகு, அந்த சரக்கு மதிப்பில் குறிப்பிட்ட விழுக்காடு சலுகை வட்டியில் கடனாக வழங்கப்படுகின்றன. இந்த கடன் முன்பு சலுகை வட்டியில் மூன்று மாதங்கள் (90 நாட்கள்) வரை வழங்கப்பட்டது. இது தற்போது 6 மாதங்களாக (180 நாட்கள்) வரை நீடிக்கப்பட்டு உள்ளது. என வெள்ளிக் கிழமை ரிசர்வ் வங்கி அறிவித்தது.

November 29, 2008 at 3:00 PM Leave a comment

மும்பை ஹோட்டல்களில் நடந்த 60 மணி நேர தாக்குதல் : ரூ.4,000 கோடி நஷ்டம்

மும்பை : இந்தியாவின் பொருளாதார தலைநகர் மும்பையில், பிரதான இரு ஹோட்டல்களில் சுமார் 60 மணி நேரம் நடந்த தொடர் தீவிரவாத தாக்குதலால் ரூ.4,000 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தொழில் வல்லுனர்கள் சொல்கிறார்கள். தீவிரவாதிகள் புதன் இரவு ஆரம்பித்த திடீர் தாக்குதல் சனிக்கிழமை மதியம் தான் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனால் அந்த பகுதியில் இருக்கும் ஹோட்டல்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் எல்லாம் மூடியே கிடக்கின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.1,000 கோடி வீதம் ரூ.4,000 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்று அசோசெம் அமைப்பின் செயலாளர் டி.எஸ்.ரவாத் தெரிவிக்கிறார். மும்பையில் வியாழன் அன்று, மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை, மற்றும் மற்ற முக்கிய பொருட்களின் சந்தைகள் மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான கார்பரேட் அலுவலகங்களில் ஊழியர்கள் வராமல் வேலை நடக்கவில்லை. நாள் ஒன்றுக்கு ரூ.32,700 கோடிக்கு வர்த்தகம் நடக்கும் மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை மற்றும் மற்ற முக்கிய பொருட்களின் சந்தை ஒரு நாள் நடக்கவில்லை. நகரிலேயே பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அதிகம் மக்கள் கூடும் அந்த பகுதி கடந்த மூன்று நாட்களாக வெறிச்சோடி கிடக்கிறது. சினிமா, டெலிவிஷன் படப்பிடிப்புகள் நடக்கவில்லை. சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இந்த மாதிரி பலவகை தொழில்களும் முடங்கப்பட்டு விட்டதால் மொத்தமாக ரூ.4,000 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்கிறார் ரவாத்.

November 29, 2008 at 2:57 PM Leave a comment

சேதமடைந்த தாஜ் ஹோட்டலை பார்வையிட்டார் ரத்தன் டாடா

மும்பை : தாஜ் குழுமத்தின் சேர்மன் ரத்தன் டாடா இன்று, அவருக்கு சொந்தமான, தீவிரவாதிகளால் கடும் தாக்குதலுக்கு உள்ளான தாஜ்பேலஸ் ஹோட்டலை பார்வையிட்டார். தீவிரவாதிகளுக்கும் தேசிய பாதுகாப்பு படையினருக்குமிடையே இன்று காலையில் நடந்த கடைசி துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு, அங்கு அமைதி திரும்பியதும் ரத்தன் டாடா அங்கு வந்து ஹோட்டலை பார்வையிட்டார். அவருடன் டாடா ஹோட்டல்ஸ் இன் வைஸ் சேர்மன் கிருஷ்ணகுமார் உள்பட உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர். தீவிரவாதிகளின் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும், 105 வருட பாரம்பரிய ஹெரிடேஜ் ஹோட்டலையும் அவர்கள் பார்வையிட்டனர். இந்தியாவின் பொருளாதார தலைநகர் மும்பையின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் ஹோட்டலில், சுமார் 60 மணி நேரம் நடந்த கடும் துப்பாக்கி சண்டையால் அந்த கட்டிடம் பெருத்த சேதமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தம் 529 ரூம்களை கொண்ட அந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீயை அணைக்க மூன்று அதி நவீன தீ அணைப்பு வண்டிகள் வந்திருந்தன. இது குறித்து தாஜ் ஹோட்டல் உயர் அதிகாரி ஒருவர் சொன்னபோது, ஹோட்டலை சேர்ந்த சில முக்கிய அதிகாரிகள் மட்டும் சேதமடைந்திருக்கும் ஹோட்டலுக்குள் சென்றனர். ஆனால் ரத்தன் டாடா உள்ளே செல்லவில்லை. வெளியேயே நின்று கொண்டார் என்றார். அப்போது பத்திரிக்கையாளர்களியை பேசிய ரத்தன் டாடா, இது போன்ற சிக்கலான நேரத்தில் இந்தியர்களாகிய நாம் எல்லோரும் தோளோடு தோள் கொடுத்து ஒன்றாக இருப்போம், இதனாலெல்லாம் நாம் சோர்ந்து வீழ்ந்து விட மாட்டோம் என்பதை அவர்களுக்கு காண்பிப்போம், இந்தமாதிரி மோசமான நடிவடிக்கைகளால் நாம் இன்னும் கொஞ்சம் வலுவானவர்களாகத்தான் ஆவோம் என்பதை அவர்களுக்கு புரிய வைப்போம் என்றார்.

November 29, 2008 at 2:56 PM Leave a comment

மும்பை ஹோட்டல்கள் தாக்குதல் : பெரும் தொகை கொடுக்க தயாராக வேண்டிய நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

மும்பை : தெற்கு மும்பையில் இருக்கும் தாஜ் மஹால் பேலஸ் மற்றும் ஓபராய் டிரிடென்ட் ஹோட்டல்களில் கடந்த புதன்கிழமை இரவில் இருந்து தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலால், அந்த இரு ஹோட்டல்களிலும் உயிர் சேதத்துடன் பெருமளவு பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த சேதங்களுக்கெல்லாம் யுனைட்டட் இன்டியா இன்சூரன்ஸ் மற்றும் டாடா ஏ.ஐ.ஜி இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தான் பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. டாடாவின் இன்டியன் ஹோட்டல்ஸ் லிமிடெட்டுக்கு சொந்தமான தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல், டாடா ஏ.ஐ.ஜி. இன்சூரன்ஸ் நிறுவனத்திடமும், ஒபராய்க்கு சொந்தமான ஈஸ்ட் இந்தியா ஹோட்டல்ஸின் டிரிடென்ட் ஹோட்டல், யுனைட்டட் இன்டியா இன்சூரன்ஸிடமும் இன்சூர் செய்திருக்கின்றன. இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை, தீவிரவாத தாக்குதல் ரிஸ்க் மற்றும் தேர்ட் பார்டி இன்சூரன்ஸ் ஆகியவை கவர் ஆகும் என்று சொல்லப்படுகிறது. டிரைடன்ட் ஹோட்டலை விட தாஜ் ஹோட்டலில்தான் அதிக அளவில் தாக்குதல் நடந்திருக்கிறது. எனவே அங்கு அதிகம் கிளைம் இருக்கும் என்கிறார்கள். தீ பிடித்ததனால் ஏற்பட்ட சேதத்துடன், தீவரவாத தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதமும் இதில் கவர் ஆகும் என்கிறார்கள். ஆனால் ஹோட்டல்கள் செயல்படாமல் இருக்கும் நாட்களில் ஏற்படும் வருமான இழப்பும் இன்சூரன்ஸில் கவர் ஆகுமா என்று தெரியவில்லை. என்ன இருந்தாலும் இந்த இரு இன்சூரன்ஸ் கம்பெனிகளும் பல கோடி ரூபாய்களை கொடுக்க தயாராக இருக்க வேண்டியதுதான்.

November 29, 2008 at 2:55 PM Leave a comment

நடப்பு நிதியாண்டில் வெளாண் துறையில் ரூ.2500 கோடி முதலீடு

U†‡V AWr, SP“ Bz¥ ÚY[ց ‰Û NÖŸ‹R ‡yPjL¸¥ ¤.25,000 ÚLÖz ˜R§| ÚU¼ÙLց|·[‰. ÙNÁ Bz¥ U†‡V AWr C†‰Û›¥ ÚU¼ÙLցP ÙNX«]†‰PÁ J‘|•ÚTÖ‰ C‰ 80 NR®R• A‡LUÖh•.

TtN֐ U¼¿• A¡VÖ]Ö BfV UÖŒXjL¸Á RÛXSLWÖ] NzLÖ¡¥ `AeÚWÖ ÙPe-2008′ GÁ ÙTV¡¥ ÚY[ց ‰Û NÖŸ‹R LLÖyp JÁ¿ SÛPÙT¿f‰. C‡¥ LX‹‰ ÙLցP ÚY[ց ‰Û ÙNVXÖ[Ÿ z.S‹RhUÖŸ C†RLYÛX ÙY¸›yPÖŸ. B|eh CW| ˜Û SÖÁh SÖ·L· C‹R LLÖyp SÛPÙT¿f‰. C‰ ÙY·¸efZÛUVÁ¿ ÙRÖPjfV‰.

`AeÚWÖ ÙPe-2008′ LLÖyp 5,960 N‰W —yPŸ TWT[«¥ SÛPÙT¿f‰. C‡¥ 204 LÖyp ŒÛXVjL· AÛUeLTy|·[]. TtN֐, A¡VÖ]Ö, CUÖoNX ‘WÚRN•, E†RWLցy, ’LÖŸ, R–²SÖ| U¼¿• LŸSÖPLÖ BfV UÖŒXjL¸¦£‹‰ 15,000-eh• ÚU¼TyP «YNÖ›L· C‹R LLÖypeh Y£ÛL R£YÖŸL· GÁ¿ G‡ŸTÖŸeLT|f‰.

 

November 29, 2008 at 8:32 AM Leave a comment

Older Posts


Visitors

  • 14,717 hits

Archives

November 2008
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Categories

Recent Comments